
நினைவுகள் நூறு
கனவுகள் ஆயிரம்
காதலன் கனவு அது
கட்டி வைத்த மண் வீடோ
நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
வந்தணைக்க ஓர் நெஞ்சம்
நீண்டு வளர்ந்த நினைவுகள்
காணத்துடித்த கனவுகள்
கானல் நீர்தானோ-கனியும்
இலவம் பழமோ
நீரோடும் இலைபோலே
வாழ்வோடு ஏனோ நானும்
உறவோடும் உள்ளங்கள்
உறைந்துவிட்ட காரணத்தால்
இருந்தும் காத்திருக்கிறேன்
கல்லையும் கனியவைக்கும் என் நினைவுகள்.
3 comments:
நல்லா இருக்கு
உறவோடும் உள்ளங்கள்
உறைந்துவிட்ட காரணத்தால்
lol nice one...
அதென்ன கருத்து சொல்லாமல் போகாதீர்கள்...சொல்லிட்டு போனா காசு அனுப்புவீங்களோ>???? வளரமாட்டேங்கிறாங்களே...:)
வந்தா சொல்லிட்டு போறதுதானே முறை... சேர்த்து வச்சு பாங்க்ல போட்டுவிடுறன்.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...