
பெண்ணே நீயும் நிலவோ
பெயர் சொல்ல முடியா கனவோ
இதயம் துடிக்கும் கணத்தில்.........
உன் நினைவுகள் வந்து மறையும்
சிறு நட்சத்திரம் ஒரு தேன் நிலவு
மெல்லப்பாடிவரும் மென் இசைக்காற்று
செல்லத்தலையசைக்கும் அழகு அல்லி மலர்
இவை யாவும் யாவும் நீயோ
உன்னை காணத்துடிக்கும் இரவும் நான்தானோ..!
ஏய் அழகு நிலா..!
எனை மயக்கும் நிலா..!
ஏணி வைத்து ஏறி உன் அழகை ரசிக்கப்போறேன்
நீ அருகில் நின்றால்..
தங்கம் ஜொலித்திடுமொ..தேன் கொடுத்திடுமோ..
உன் அழகுத்தேனை ருசிக்க முன்னர் மயங்கிய வண்டு நான்தான்.
உனைப்பார்க்கின்றேன்...ரொம்ப ரசிக்கின்றேன்...
ஐயோ துடிக்கின்றேன்.....நான்
துடித்து துடித்து மடிய முன்னர் பக்கம் வாராயோ..!-என் தேனிலவே.!
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...