
ஏ.. பசுங்கிளியே..!
செல்லக்காதலனோடு
கொஞ்சிக்கதை பேசுகிறாயா..?
உனைப்பார்க்கையில் கண்களில் நீர்துளிர
எனக்கும் காதலிக்க ஆசை கிளியே.
மெல்லிய பார்வையில் மயக்கவும் வேண்டாம்
கண்ணதாசன் போல் கவிபாடவும் வேண்டாம்
வர்ண உடை
வாரிய தேகம்
கூரிய பார்வை
தேறிய செல்வம்
உடையானும் வேண்டாம் ஆறிய
தழும்பானாலும் பரவாயில்லை
தழும்பானாலும் பரவாயில்லை
அது தமிழுக்காய் பெற்ற தங்க
மகனொருவன் வேண்டுமடி கிளியே.!
மகனொருவன் வேண்டுமடி கிளியே.!
முல்லை நகர வீதியில் சுதந்திர
காற்றை சுவாசித்தபடி
காற்றை சுவாசித்தபடி
அவன் கைப்பிடித்து செல்லனும் கிளியே...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...