• Thursday, July 8, 2021

    நான் 2020 பேசுகிறேன்!


    நான் 2020 பேசுகிறேன் !
    ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?
    வேண்டாப் பொருளாகி விட்டேனா  நான்?
    உன் உல்லாச அறைக்குள் தெரியாமல் எரிந்த சுடரா நான்?
    உன் திருமணச்சட்டையில் மார்பில் செங்கறையா நான்?
    நீ வெளியில் செல்கையில் முகஞ்சுழிக்கும் மதிலோரக் குப்பையா நான்?

    முன்னனுபவம் உள்ளவர்க்கு மட்டும் புரியும் கதை !


    நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
    காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
    ஒரே தலையணை !
    போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !

    முகம்பார்த்து விரல்மேய
    நவரசம் காட்டும் திரை !
    உன் நெளிவுகளில்
    நிலைகொள்ளும் கரம் !
    அவ்வப்போது சிணுங்கும் நீ !
    அள்ளி அணைக்கும் நான் !

    Friday, October 21, 2016

    பத்தாண்டு அகவை காண்கிறது ஆஸ்திரேலியக் கம்பன் கழகம்!

    (ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்த்தின் பத்தாண்டு நிறைவை வாழ்த்தி .மொழிந்தது.)

    உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
    நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
    அலகு இலா விளையாட்டு உடையார் அவர் 
    தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !

    Thursday, February 2, 2012

    காதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..

    காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா. 

    நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.) 
    கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.

    Tuesday, November 15, 2011

    இது போதும் எனக்கு- ஒலிவடிவத்துடன் புதிய முயற்சி

    கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் ஆழமான சிந்தனைகளுடன் அழகிய இலகு தமிழில் எவர்க்கும் புரியும் படியில் இருக்கும். அதனால்தான் எனக்கு அதிகம் பிடித்துப்போனது கவிப்பேரரசை. அதன் ஒரு விளைவுதான் கவிப்பேரரசின் கவிகளை ஒலிவடிவில் தர தூண்டியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் இங்கே ஆரம்பிக்கிறது. 'இது போதும் எனக்கு' என்ற கவிதையை இன்று ஒலிவடிவத்தில் தருகிறேன்.


    கவிதை-வைரமுத்து

    குரல்-அஷ்வின்
    இசை- AR.ரஹ்மான்

    Wednesday, January 20, 2010

    அரசியல் செய்துபார்.!

    கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க  இங்க கிளிக் பண்ணுங்கோ..
    அரசியல் செய்துபார் 
    உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்
    தோட்டாக்கள் தேடும்
    செல்வாக்கின் அர்த்தம் புரியும்
    சொல்வாக்கு மலிந்து போகும்
    உனக்கும் தத்துவம் வரும்
    ஒலிபெருக்கிகள் அதறக்கேட்டும்
    ஒடுக்கமாட்டாய் உன் பேச்சை
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner