• காதலித்து வா - காதலர் தின கவிதை

   காதலித்து வா.. கணம் கணம் காதலித்து வா..! நீ ரசித்த பூக்களின் தோட்டத்தில் உன்னை நுகர்ந்த மலரோடு வா.. உன் காதல் பள்ளியின் முதல் நாள் பாடத்தோடு வா....

   Read More:
  • விபச்சாரியுடன் ஒருநாள்.

   எனக்கு உண்மையில் அந்த நாட்கள் மறந்துதான் போயிருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு வருடங்களில் அந்த ஞாபகம் வந்ததே இல்லை. நிம்மதியாய்த்தான் இருந்தேன். ஆனால் ...

   Read More:
  • தொடர்கதை.. நம் வாழ்க்கை.

   தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ...

   Read More:
  • ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.

   ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க. என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா....

   Read More:
  • அரசியல் செய்துபார்.!

   உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும் தோட்டாக்கள் தேடும் செல்வாக்கின் அர்த்தம் புரியும் சொல்வாக்கு மலிந்து போகும்...

   Read More:
  • மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

   இந்த மனசு மனசு என்கிறாங்களே அது என்னங்க? லவ் பண்ணுற பய புள்ளைங்கள பாத்தா '' என் மனசுல அவதாண்ட இருக்கா'' எண்டு நெஞ்சுல கையவச்சு ...

   Read More:
  • சரவெடி-University of Moratuwa , E08 Batch Film .

   ஏதோ சின்னப்புள்ளைங்க படம் ஏன்டா பேருல எதோ எடுத்திருக்குதுகள் பாருங்கோ....

   Read More:
  • ராவணன்-திரைவிமர்சனம் சுடச்சுட...

   இத்திரைப்படத்தின் பிளஸ் என்று சொல்லப்போனால் திரைக்கதை அமைப்பு.. அதைப்பற்றி மேலும் கதைக்க தேவையில்லை. அடுத்தபடியான முக்கிய காரணி பின்னணி இசை மற்றும் பாடல்கள்......

   Read More:
  • காமெடி கபே...

   முடிஞ்சா சிரிங்கய்யா..முடியலைன்னாலும் ஒரு மானஸ்ஸுக்கு சிரிச்சுட்டு போங்க......

   Read More:

  Thursday, July 8, 2021

  நான் 2020 பேசுகிறேன்!


  நான் 2020 பேசுகிறேன் !
  ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?
  வேண்டாப் பொருளாகி விட்டேனா  நான்?
  உன் உல்லாச அறைக்குள் தெரியாமல் எரிந்த சுடரா நான்?
  உன் திருமணச்சட்டையில் மார்பில் செங்கறையா நான்?
  நீ வெளியில் செல்கையில் முகஞ்சுழிக்கும் மதிலோரக் குப்பையா நான்?

  முன்னனுபவம் உள்ளவர்க்கு மட்டும் புரியும் கதை !


  நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
  காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
  ஒரே தலையணை !
  போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !

  முகம்பார்த்து விரல்மேய
  நவரசம் காட்டும் திரை !
  உன் நெளிவுகளில்
  நிலைகொள்ளும் கரம் !
  அவ்வப்போது சிணுங்கும் நீ !
  அள்ளி அணைக்கும் நான் !

  Friday, October 21, 2016

  பத்தாண்டு அகவை காண்கிறது ஆஸ்திரேலியக் கம்பன் கழகம்!

  (ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்த்தின் பத்தாண்டு நிறைவை வாழ்த்தி .மொழிந்தது.)

  உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
  நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
  அலகு இலா விளையாட்டு உடையார் அவர் 
  தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !

  Tuesday, June 26, 2012

  காவியா - கனவுகளோடு (பாகம் 1)


  காதல் வானம் 
  கனவுகளின் கோட்டை மீது 
  கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில் 
  பறந்துவிட துடிக்குது
  ஆயிரம் பறவைகள்
  நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு 
  விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
  காதலித்து வா.. 
  கணம் கணம் காதலித்து வா..

  ம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா ?? என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு  உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா.. 

  Tuesday, June 5, 2012

  உன்னோடு நான் கொண்ட உறவு (14+)


  என்ன பிழை செய்தேன் ஏன்
  இன்று என்னை தவிக்கவிடுகிறாய்
  உண்ணவும் மறுத்திருப்பேன்
  உடுக்கவும் மறுத்திருப்பேன்
  உன்னை அணைக்க மறுத்தேனா?

  Thursday, February 2, 2012

  காதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..

  காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா. 

  நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.) 
  கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.
  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner