உலகமெங்கும் உள்ள பலகோடி இந்திய சினிமா ரசிகர்காளால் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் இன்று 18 ஆம் தேதி உலகின் மூலை முடுக்கெங்கும் திரையிடப்படவிருக்கிறது...(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நேரம் 18 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி). எந்த ஒரு பிரம்மாண்ட விளம்பரங்களுமில்லாது பிரம்மாண்டங்களின் படைப்பில் ஆர்வங்களை தூண்டிய திரைப்படம்.. மணிரத்னம்,ஏ.ஆர்.ரஹ்மான்,வைரமுத்து,விக்ரம்,ஐஸ்வர்யா பச்சன்,பிரபு,கார்த்திக் என்று பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாத கூட்டணியாக பலரைப்போலவும் எனக்கும் எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படம்.
18 ஆம் தேதியே வெளியாகின்றபோதும் முதல்நாள் இரவுக்காட்சி ஒன்று VIP show என்றபெயரிலே (அதுக்கு நீ ஏன் போனீ? எண்டு கேக்காதீங்கோ. நம்மள மாதிரி ஆக்கள்தான் இப்போ VIP -விரிவு தெரியும்தானே) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் முந்தியடித்து இரண்டு
நாளைக்குமுதலே பதிந்துவைத்த டிக்கெட்டுடன் திரையரங்கு போயாச்சு. படத்தைப்பற்றிய பாசிட்டிவான எதிர்பார்ப்புகள் அதிகமாவே இருந்தபோதும் அண்மைக்காலத்தில் அதிகமாக எதிர்பார்த்து VIP show போன படங்கள் ஊத்திக்கிட்டதால் என்னவோ ஒரு கலக்கம். ஆனாலும் படம் தொடங்கியதும் அந்த கலக்கத்துக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது.
நாளைக்குமுதலே பதிந்துவைத்த டிக்கெட்டுடன் திரையரங்கு போயாச்சு. படத்தைப்பற்றிய பாசிட்டிவான எதிர்பார்ப்புகள் அதிகமாவே இருந்தபோதும் அண்மைக்காலத்தில் அதிகமாக எதிர்பார்த்து VIP show போன படங்கள் ஊத்திக்கிட்டதால் என்னவோ ஒரு கலக்கம். ஆனாலும் படம் தொடங்கியதும் அந்த கலக்கத்துக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது.
ஆரம்பகாட்சியிலேயே சேறுபூசி, முறுக்கு மீசையுடன் அறிமுகமாகிறார் விக்ரம்,தொடர்ந்து அடுத்தடுத்த வினாடிகளில் ஐஸ்வர்யா ராயின் அறிமுகம் இதற்கிடையில் குழப்பமான தொடர்ச்சியற்ற காட்சிப்பிணைப்புகள் ரசிகர்மனத்தில் கதைக்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக. ஐஸ்வர்யாராயின் முதல் காட்சியிலேயே படகில் வந்து கொண்டிருக்கும் அவரை விக்ரம் படகை மோதி உடைத்து ஆக்ரோஷமாக கடத்தும் காட்சி..
. படத்தின் கதையோட்டத்தில் முற்கதை பிற்கதைகளின் இணைப்புப்பாலமாக அமையவிருக்கும் இக்காட்சியினோடு இடைநிறுத்தி எழுத்தோட்டம்... தொடர்ச்சியாக பிரம்மாண்டங்களின் பெயர்களை வீரா பாடல் இசை தூக்கி வருகிறது.. ரஹ்மான் பெயர்வந்ததும் விசில்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே பறந்தது..
. படத்தின் கதையோட்டத்தில் முற்கதை பிற்கதைகளின் இணைப்புப்பாலமாக அமையவிருக்கும் இக்காட்சியினோடு இடைநிறுத்தி எழுத்தோட்டம்... தொடர்ச்சியாக பிரம்மாண்டங்களின் பெயர்களை வீரா பாடல் இசை தூக்கி வருகிறது.. ரஹ்மான் பெயர்வந்ததும் விசில்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே பறந்தது..
.bmp)
தொடர்ந்து துடிப்பான சிரேஷ்ட போலிஷ் அதிகாரியாக பிரிதிவிராஜ் அறிமுகமாகிறார். போலிஷ் அதிகாரிக்கே உரித்தான கம்பீரமான உடல், வசீகரமான முகம். படத்தின் சூப்பர் ஹீரோ இவர்தானோ என்ற பிம்பத்தை மனதில் யோசிக்க வைக்குது.. அப்போது ப்ரிதிவிரஜ்கு வரும் கட்டுப்பாட்டக அறிவிப்பில் அவரது மனைவி கடத்தப்பட்டதாக சொல்லப்பட விக்ரம் கூட்டத்தை நோக்கிய ப்ரிதிவிராஜின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. இனிதான் காட்சிகளின் மசாலா கலவை, ஒரே நேரத்தில் பல சம்பவங்களின் கோர்வை, ஒரே காட்சியில் முற்கதை பிற்கதை நிகழ்கதை, ரசிகர்களை சிந்தித்து குழப்பும் காட்சிகள், சீரியஸ் நேர சிரிப்புகள் , கதை சொல்லும் காட்சிகள் என மணிரத்னத்தின் வேலை ஆரம்பமாகிறது..
.jpg)
ஐஸ்வர்யாராயை தேடும் விக்ரமின் கண்களில் இறுதியாக தென்படுகிறார் ஒரு மர கிளைகளில் சிக்குப்பட்டு மயக்கமுற்றவராக. தொடர்ந்தே கீழே விழும் ஐஸ்வர்யாராயின் காட்சியை அப்படி தத்ரூபமாக படம்பிடித்திருப்பார்கள். இக்காட்சியை பார்க்கும் போதுதான் எதையும் 100% திருப்தியுடன் செய்யும் மணிரத்னத்தின் இயக்கமும், அர்பணிப்புடன் நடித்துள்ள விக்ரம் , ஐஸ்வர்யாராயின் முயற்சியும் புரிகிறது.. அந்த அர்பணிப்புக்கும் கஷ்டத்திற்கும் பல மனங்களின் சத்தமின்றிய கைதட்டலை பெற்றது அந்த காட்சி. இப்படியே சொல்லிக்கொண்டு போனால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உளறிவிடுவேன்.( அப்டினா இதுக்குமுதல் வியய் பட விமர்சனம் எல்லாம் முழுகதையையும் சொன்னீங்களே எண்டு கேக்கலாம். அது மத்தவங்களும் படத்த பார்த்து கஷ்டப்படகூடாதேண்டுறதுகாக சொல்லுறது.. ஆனா இது மத்தவங்களும் பார்த்து ரசிக்க வேண்டிய யோசிக்க வேண்டிய படம்)
தொடர்ந்து வரம் காட்சிகளில் ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியாக கார்த்திக்கின் அறிமுகம். அதுவும் சும்மா இல்ல காட்டில் ஐஸ்வர்யாராயை மீட்க தேடிவரும் ப்ரிதிவிராஜின் போலீசுக்கு மரத்துக்கு மரம் தாவி ஆட்டம் காட்டுகிறார். பின்னர் ப்ரிதிவிராஜின் விசேட அதிரடிப்படைகுழு காட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த கார்த்திக்கையும் அழைத்துக்கொண்டு புறப்படுகிறது. வழியினில் விக்ரம் விதைத்துவைத்த மர்மங்களுடனும் கார்த்திக்கின் நகைச்சுவைகளுடனும் நகர்கிறது காட்சிகள். அதேவேளை மறு புறம் ஐஸ்வர்யாராய் மேல் விக்ரமிற்கு காதல்.. அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் போராட்டங்கள்.. அருகில் அமிர்தமிருந்தும் அதை தொடக்கூட முடியாது தவிக்கும் விக்ரம்.. என காட்சிகள்... இடைவேளை வரையும் அதை தொடர்ந்தும்...
பின்னர் ஒரு நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு விக்ரமின் பழிவாங்கல்களுக்கான காரணங்கள் சொல்லபடுகிறது..(இப்போதுதான் ரசிகர்களுக்கும் சொல்லப்படுகிறது பிளாஷ்பாக்) ஒரு ஊரில் சந்தோசமாக வாழ்ந்துவரும் விக்ரம் குடும்பம்... அந்த ஊரில் அவவருக்கு ராவணன் என்று ஒரு பெயரும் உண்டாம்.(ராவணன் நல்லவனா கெட்டவனா??? கடைசில யோசிப்பம்) யாருக்கும் அடங்காதவன் இவன்.. அனால் அவனை அதட்டும் ஒரே ஆள் இவன் தங்கை ப்ரியாமணி.. இவர்கள் இருவருக்குமிடையிலான சம்பாசனைகளில் இயக்குனர் பாசம் ஊறிய அதட்டல் மொழிகளை பயன்படுத்தி இயல்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதே ஊருக்கு மேலதிகாரியாகவரும் பிரிதிவிராஜ் வீராவை கொல்ல திட்டம் தீட்டுகிறார். இதேவேளையில் ப்ரியாமணிக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது.. திருமண நிகழ்வில் திடீரென நுழையும் பிரிதிவிராஜ் விக்ரமை துப்பாக்கியால் சுட்டுவிடவே கதையின் திருப்பங்கள் தொடங்குகிறது.. அவ்விடத்திலிருந்து ஒருவாறாக தப்பிக்க வைக்கப்படுகிறார் விக்ரம். அதனால் போலிஷ் ப்ரியாமணியை விசாரணைக்காக அழைத்து செல்கிறது. இந்நிலையில் ஒரு சம்பாசனையில் ப்ரியாமணியிடம் ப்ரிதிவிராஜின் தம்பிபோன்ற நம்பிக்கைக்குரிய போலிஷதிகாரியால் ''உன் அண்ணா எங்கு இருக்கிறான்'' என கேட்க.. அதற்கு கோபபட்டு சொல்ல முடியாது என்று கூறும் ப்ரியாமணியை அவள் மூக்கை பிடித்து அதை அறுத்துவிடுவேன் என கூறுகிறார் (இக்காட்சியை நான் கூறுவதற்கு காரணம் படத்தின் ஓட்டத்தை நீங்களும் கொஞ்சம் ஊகிக்க வேண்டும் என்பதற்காக).. திரைப்படத்தின் ஒவ்வொரு வினாடி காட்சிகளும் பல விடயங்களை உணர்த்துகின்றன.. பின்னர் போலிஷ் சாவடியில் கற்பழிக்கப்படும் ப்ரியாமணி தற்கொலை செய்துவிடவே நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் ஐஸ்வர்யாராயின் கடத்தலுக்கும் காரணம் சொல்லப்படுகிறது..
தொடர்ந்துவரும் காட்சிகளில் கார்த்திக் ஐவர்யாரயிடம் தூது வரும் காட்சி, விக்ரமின் படித்த தம்பி அண்ணனிடம் 'அவளை விடுவித்து மேலதிகாரியுடன் இணங்கி போவோமென்' என்று அறிவுரை சொல்லும் காட்சி... பின்னர் சமாதானம் பேச செல்லும் விக்ரமின் தம்பியை ஏமாத்தி பிரிதிவிராஜ் கொன்று விடவே இறுதிகட்ட மோதல் நிகழ்கிறது.. அதில் விக்ரமின் கை ஓங்கிவிடவே ஐஸ்வர்யாராய் தன்கணவனை கொல்ல வேண்டாமென கெஞ்ச அதற்கு விக்ரம் '' நீ இங்கேயே இருந்துவிடுவதாக சொன்னால் உன்கணவன் உயிரை விட்டுவிடுவேன்'' என சொல்ல அதற்கு ஐஸ்வர்யாராயும் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறாள். வீராவும் வானத்துக்கும் தரைக்குமாய் மகிழ்ச்சியில் குதிறான்.. இறுதியில் விக்ரம் ப்ரிதிவிராஜை கொன்றார? ஐஸ்வர்யா விக்ரமுடன் சேர்ந்தாரா? என்பதை எதிர்பார்கைகளுக்கும் மேலாக சரித்திரம் பிழைக்காமல் அழகாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்.. இதுவரை நான் திரையரங்குகளில் பார்த்த படங்களில் ராவணன் படத்துக்குதான் பட முடிவின் போதும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பார்த்திருக்கிறேன்...
இத்திரைப்படத்தின் பிளஸ் என்று சொல்லப்போனால் திரைக்கதை அமைப்பு.. அதைப்பற்றி மேலும் கதைக்க தேவையில்லை. அடுத்தபடியான முக்கிய காரணி பின்னணி இசை மற்றும் பாடல்கள்.. பாடல்கள் என்றைக்கோ வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்புகின்றன. ரஹ்மான் மீண்டும் தன்னுடைய ஆஸ்காருக்கு முந்திய இன்னிசை மழையை தூவியிருக்கிறார்.அடுத்த விசேசம் பாடல் வரிகள்..அதிலும் என்போன்றோர் வைரமுத்துவின் வரிகளை ரசித்து ரசித்து அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறோம்..
படத்தின் அடுத்த சிறப்பம்சமாக சொல்லகூடியது இயற்கைகாட்சிகளையும், சண்டைகாட்சிகளையும், முக்கியமாக மலையிலிருந்து ஐஸ்வர்யா குதிக்கும் காட்சி,தொங்குபாலம் ஒன்றில் விக்ரம் ப்ரிதிவிராஜின் இறுதிகட்ட சண்டை ஆகியவற்றை அற்புதமாக வித்தியாசமான கோணங்களில் பதிவு செய்திருக்கும் மணிகண்டன், சந்தோஷ் சிவன் ஆகியோரின் ஒளிப்பதிவு..
அடுத்து படத்தின் கதை. திரைக்கதையை தீட்டியிருபவர் மணிரத்னம். அவ்வாறாயின் கதை வான்மீகி, கம்பருக்குரியது.. அதால கதையை பற்றி ஆராய நம்மயாருக்கும் வயசோ,அறிவோ காணாது.. படத்தில் சுந்தரகாண்டம்,யுத்த காண்டம்,அயோத்திகாண்டம் அடங்கலாக அனுமன் தூது,விபீடணன் தூது என யாதும் உண்டே.
மற்றது படத்துல கைதட்டல் வாங்கிய சீன்களில ஒண்டை சொல்லாம விட்டுடன். படத்துல பிரபுவின் மனைவியாக வருபவர் நம்ம 'காத்து வாறதுக்கு கதவ துறந்துவிட்ட நடிகை' அவங்க வாற சீன் எல்லாமே கைதட்டலும் விசிலும் காது ஜவ்வ கிளிசுடுது. ஸ்பெசலா சொல்லபோனா ஒரு சீன்ல விக்ரமுக்கு மசாஜ் பண்ணி விடுறாங்க இவங்க அதுக்கு வந்த கதைகளை சொல்லவும் வேணுமா.........அடுத்து திரைக்கதையோடு ஒட்டி அரவாணியாக வாழ்ந்திருக்கும் வையாபுரியும் படத்தில் மற்றுமொரு சிறப்பு...
மொத்தத்தில் ராவணன் மீளப்புரப்பட்ட ஒரு சரித்திரத்தின் நாயகன். ராவணன் நல்லவனா கெட்டவனா என்பதற்கான விடைகள் யாவற்றையும் இயக்குனர் ரசிகர்களை யோசிக்கும் படி செய்து விட்டார்.. இந்த சரித்திர படைப்பு இன்னொரு முறை பார்க்கப்பட வேண்டியது..பல தகவல்களை திரட்டவும்...சிந்திக்கவும்...
(மீதி சுவாரசியமான தகவல்களும் விமர்சனங்களும் பின்னூட்டங்களில் தொடர்கின்றன..)
(மீதி சுவாரசியமான தகவல்களும் விமர்சனங்களும் பின்னூட்டங்களில் தொடர்கின்றன..)
31 comments:
Thankyou so much for the comment. The movie is simply Wonderful :) :)
nandre ipava padam parka venum pola iruku
இருங்க, நான் முதல்ல படத்தைப் பாத்துடறனே :)
@S.Janakan Muthukumar said...
U wel com my der..
@Subankan said...
நிச்சயம் பிடிக்கும் எண்டு நினைக்குறேன். ஆனா தனிய போய் பாருங்க அண்ணா.. பார்த்திட்டு உங்க கருத்துகளை இங்க சொல்லுங்க...
:)))
உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது...
நான் முதல்ல படத்தைப் பாத்துடறனே, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது..
அடேய் நானும் உன்னோட தான் சேந்து படத்த பாத்தன்.அடத்திட plus points சொல்லி இருக்கிறாய்.சரி. weak points சொல்லுறதுக்கு ஏன் தயங்கிறாய்.
*படத்தின் முதல் ஒன்றரை மணித்தியாலம் வைரமுத்துவின் வரிகளுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவுமே அமைக்கப்பட்டிருந்தது.
எதிர்பார்த்தபடி பாடல்கள் அனைத்தும் situation songs ஆக அமைந்திருக்கவில்லை.படம் தொடங்கியதுமே எந்த காரண்முமே இல்லாமல் உசிரே போகுதே பாட்டு இடம்பெற்றிருப்பது இன்னமும் ஜீரணிக்க முடியாததாகவே உள்ளது.
இராமாயணத்தில்(குறிப்பிட்ட காண்டத்தில்) இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால் அது இராவணன் கதை என்று சொல்ல முடியாது.இது முற்றிலும் வேறுபாடான கதை.
கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள் அனைத்தும் வித்தியாசமானவையே.
விரும்பினால் அந்த வித்தியாசங்களையும் குறிப்பிட தயார்.....
மணிரத்தினம் படம்...
மெச்சத்தக்க cinematography.
A.R.Rahman இசை..
நடிகர்களின் நடிப்பு
பாடல் வரிகள்
திரை வசனம்
ஒளிப்பதிவு
இவை மெச்சத்தக்கது.
கொடுக்கப்பட்ட build up கொங்ஞ்சம் ஓவர்தான்.
மணிரத்தினமும் சளைத்துவிட்டாரா என்றும் கதைகள் என் காதில் விழத்தான் செய்தன.
MODERN RAMAYANA! NICE REVIEW!
அன்பான notification.கொல்ல என்Ru இடம்பெற வேண்டியது கொள்ள இன்று type செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.அதை கொஞ்சம் சரிபார்க்கவும்.
i think it will break the tamil film history
very intresting story
cute pa
இந்த ராவணன் மீளப்புரட்டப்பட்ட ஒரு சரித்திரத்தின் நாயகன். திரைக்கதை ராமாயணக்கதை அல்ல. ஆனால் பல இடங்களில் ராமாயணத்தோடு ஒத்துப்போகிறது..இது மணிரத்னம் செய்த தவறல்ல.. நன்கு திட்டமிட்ட திரைக்கதை.. ராமாயணத்தை மீள நினைவுபடுத்தவேண்டும் என்பதற்காக...ராவணன் கதாபத்திரத்தை வேறுபட்ட கோணத்தில் ஆராய வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட திரைக்கதை.. அது மணிரத்னதுக்கு நன்கு வெற்றியும் அளித்துள்ளது...
திட்டமிட்டு ஒத்துபோக வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் நுழைத்த நுட்பங்கள்: 1.வீரா பாத்திரம், ஒரு சகோதரன் (பிரபு) வீரமும் கோபமும் வீராவைபோலவே கொண்டவன், மற்றைய சகோதரன் அவர்கள் கூட்டத்தில் கொஞ்சம் படித்தவன்..தமையனுக்கு சட்ட ஆலோசனைகள் சொல்பவன். ஒரு தங்கை. அதுவும் பாசமான தங்கை...தங்கைக்காக எதுவும் செய்யும் அண்ணன்மார்...இவையாவும் இராவணன் குடும்பத்தை ஞாபகபடுத்த தவறவில்லை.
2.கார்த்திக் பாத்திரம்-வனத்தை நன்கு தெரிந்தவனாகவும் சேட்டைக்கார ஒருவராகவும் காட்டப்படுகிறது. அதுவும் கார்த்திக் அறிமுகமாகும் காட்சியில் எதற்காக அவர் மரத்துக்கு மரம் குரங்குபோல் தாவுபவனாக காட்டவேண்டும்....மணிரத்னத்திற்கு அந்தளவுக்கு வேறவிதமா சித்தரிக்க முடியவில்லை என்றா நினைக்குறீர்கள். இது மணிரத்னம் திட்டமிட்டு ஒத்துபோக செய்தகாட்சி..
3.வீராவின் தங்கையை ப்ரிதிவிராஜின் தம்பி போல் சித்தரிக்கப்பட்ட ஒருவனால் உடல் ரீதியாக துன்புறுத்தும் காட்சி..அதுவும் "மூக்கை அறுத்துவிடுவேன்''என்ற வசனம் அவளை நோக்கி சொல்லபடுகிறது.. ஏன் மணிரத்னத்துக்கு வேருவசனம் கிடைக்கவில்லையா...காரணம் திட்டமிட்டு ஒத்துபோக செய்தது..
4.இராவணன் ராமனை சீண்டவில்லை சூர்ப்பனகை உடல் புண்படும்வரை.. வீரா ப்ரிதிவிராஜை சீண்டவில்லை அவன் தங்கை மானபங்க படுத்தும் வரை..
வான்மீகி ஒரு ராமாயணத்தை படைத்தான், அதிலே ராமனை ஒரு சாதாரண மனிதனாக காட்டினான். பின்னர் வந்த கம்பர் வான்மீகி ராமாயணத்தை தழுவி ஆனால் ராமனை தெய்வமாகவும்..சூப்பர் ஹீரோவாகவும் காட்டி திரைக்கதையில் சிலமாற்றங்களை தனக்கேற்றால் போல் செய்து கம்பர் ராமாயணத்தை தீட்டினார். அது வான்மீகி ராமாயணத்தை விட அதிகம் பிரபலம். இன்று மணிரத்னம் இந்த ராவணனை நல்லவனாகவும் ஆனால் சரித்திரம் பிழையாதவாறும் காட்டுவதற்காக தன் திரைக்கதையில் எத்தனையோ யுக்திகளை கையாண்டுள்ளார் அதில் சாதித்தும் காட்டியுள்ளார். ஆனால் மணிரத்னத்தின் உச்சக்கட்ட யுக்தி என்னவென்றால் சாதாரண படமாக யோசிப்பவனுக்கு சாதாரண படமாகவும்..இலக்கியம் சேர்த்து சிந்திப்பவனுக்கு ராமாயணத்தின் பட்டைதீட்டப்பட பெட்டகமாகவும்..தோன்றச்செய்துள்ளார்.
தரமான விமர்சனம்.
வாழ்த்துக்கள்.
naan unkaludaiya vimarsanathai etkiren, ithu raamaayanathin maruvaasippu enruthaan karutha vendum..
read my review here
http://saaralhal.blogspot.com/2010/06/blog-post_8294.html
good
நல்லா சொல்லி இருக்கிறீர் தம்பி. இப்பவே படம் பார்க்க வேண்டும் போல இருக்கு. ஆனால் படத்தில் குறை படும் படியாக எந்த காட்சியும் இல்லையா?
கூட Votes வாங்கி இருக்கிறீங்கள். Keep it up அண்ணா
ப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்
கேங் ரேப் அமைஞ்சுருக்கு...
மணிரத்தினத்தின் படங்களை சற்று ஆழ நோக்க வேண்டும். நண்பர் அமரேஷ் சொன்னது போல உசிரே போகுதே பாடல் அந்த situationற்கு உகந்த பாடல் இல்லை என்பது போல் தெரிந்தாலும் படத்தின் பின் பகுதியில் அது சரியான situation இல் தான் பயன் படுத்தப்படுள்ளது என்பது புரிகின்றது. இப்படத்தின் தலையங்கம் ராவணன் என்பதற்காக ராமாயணத்துடன் ஒத்து போவது போல் சிதரிக்கப்பட்டலும் உண்மையில் இப்படம் பல உண்மை சம்பவங்களினை சொல்லுவதக்கு பயன் படுத்தி இருபது அறிய முடிகின்றது. இப்படத்தில் வீரப்பன் கதையை சொல்லமுற்பட்டு இருப்பதுடன்
எழ தமிழர் வரலாறும் சிறிது மேலோடி இருப்பது தெரிகிறது. நண்பர் அமரேஷ் சொன்னது போல படத்தின் இடைவேளை வரை படத்தின் எதிர்பர்பிட்கு தகுந்தால் போல் விறுவிறுப்பு இல்லாமல் போனதுடன் வைரமுத்துவின் வரிகளுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவுமே அமைகப்படிருபது போல் தோன்றுகிறது.
உங்கள் ரசனை என்னிடம் இருந்து கொஞ்சம் வேறு பட்டிருக்கலாம்.. நேற்றே நீங்கள் பதிவிட்டதைப் பார்த்தேன். எனினும் நான் என் பதிவை இட்ட பிறகே வைத்தேன்.
நீங்கள் மிகவும் ஆழ்ந்து ரசித்துள்ளீர்கள் எனப் புரிகிறது. :)
மற்றுமொரு மணி ரசிகன்.
விமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா? ;)
நல்ல தெளிவான எழுத்துநடை.
அதையும் ரசித்தேன்.
LOSHAN
http://arvloshan.com/
நன்றி நண்பர்களே உங்கள் பின்னூட்டங்களுக்கும் வருகைதந்தற்கும்...
அனானி ஒருவர் கேட்டிருந்தார் படத்தில் குறை ஏதும் இல்லையா என்று.. நான் போட்டிருக்கும் கண்ணாடி வாயிலாக பார்க்கும் போது 99.9 வீதமான நிறைகளில் குறையேதும் எனக்கு பெரிதாய் தெரியவில்லை :) உங்களுக்கு புலப்ப்படுமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.
@LOSHAN said...
நன்றி லோஷன் அண்ணா...
//விமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா? ;)//
என்ன செய்ய என்னை பொறுத்தவரை இன்னும் நாலு பதிவு ராவணன் பற்றி எழுதலாம் போலிருக்கு ஆனா வாசிகதான் ஆளிருகாங்களோ தெரியல :P
மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்
padam sariyana koththu
(இக்காட்சியை நான் கூறுவதற்கு காரணம் படத்தின் ஓட்டத்தை நீங்களும் கொஞ்சம் ஊகிக்க வேண்டும் என்பதற்காக//ஆ..கா..
வாசிக்க நாங்கள் இருக்கிறம் தலைவா. ஆனால் Vote போட கொஞ்சம் பஞ்சி,அதான்....
(((@LOSHAN said...
நன்றி லோஷன் அண்ணா...
//விமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா? ;)//
என்ன செய்ய என்னை பொறுத்தவரை இன்னும் நாலு பதிவு ராவணன் பற்றி எழுதலாம் போலிருக்கு ஆனா வாசிகதான் ஆளிருகாங்களோ தெரியல :P )))
தம்பி, உங்களைமாதிரி ஆக்கள் இருக்கிறதால, படத்தை ஒண்டுக்கு இரண்டு முறை எல்லாம் பாக்கவேண்டி இருக்கு....தம்பி.
இன்னாமா.... எழுதுறீங்கள்.
இண்டைக்கு India vs Pakistan Match பாப்பம்.
@உனது நண்பன் ஒருவன் said...
//வாசிக்க நாங்கள் இருக்கிறம் தலைவா. ஆனால் Vote போட கொஞ்சம் பஞ்சி,அதான்....//
vote எல்லாம் தேவல பாஸ் நீங்க வாசிகிறீங்களே அதுவே போதும் :)
**************************************************
@நந்தே ... said...
//தம்பி, உங்களைமாதிரி ஆக்கள் இருக்கிறதால, படத்தை ஒண்டுக்கு இரண்டு முறை எல்லாம் பாக்கவேண்டி இருக்கு....தம்பி.//
:))) இரண்டரை மணிநேராம் வெறுமனே பார்த்துவிட்டு போகவேண்டிய படமல்ல இது ரசித்து ரசித்து ஆராயவேண்டிய படம்.. அதால எத்தன தடவ எண்டாலும் அலுப்படிக்கும் வரை பாக்கலாம்.
அருமையான பார்வை. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் படத்தை விட இயக்குனரை ரசிப்பவர் என்பது புரிகிறது. பகிர்விற்கு நன்றி
நல்லா கதை சொல்றீங்க
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...