• Monday, December 28, 2009

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்....

    8_love_hurts.gif image by funkbutter
                                    இமைகள் துடிக்கிறது 
                                                                                                       உன்னைக்காண
                                    உதடுகள் தவிக்கிறது 
                                                                                          என் காதலைச்சொல்ல
                                    கைகள் வருடுகிறது பேனாவில், 
                                                                                  உணர்வால் கடிதம் வரைய
                                    நெஞ்சம் கெஞ்சுகிறது
                                                                                      நேற்றைய நினைவுகள் பகிர
                                    உரோமங்கள் நெருடுகிறது
                                                                   உன் நுனிவிரல் வருடல்கள் காண 

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    கெஞ்சிய  நெஞ்சமும் நெருடிய உரோமமும் 
    வருடிய கைகளும் தவித்த உதடுகளும் 
    உறைந்துவிடுகிறது உன் ஓரவிழி காண்கையில்-ஆதலால்

    கண்களால் கேட்கின்றேன் என் காதலை ஏற்றுக்கொள்
    உன்னை காணாதபோது துடித்த இமைகள் துடிக்கமறுக்கும் 
    இயல்பில் புரிந்திடு இவனின் இறைஞ்சல்களை-இலையேல்
    இருஇமை ஒருமடலாகி விழியினுள் காதல் வலியுருக்கொண்டு
    இறப்பேன் ஆனால் உயிருடன் இருப்பேன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Sunday, December 20, 2009

    ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..


    tears
    இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
    என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
    பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
    ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
    மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
    இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி  ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
    கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு

    Friday, December 18, 2009

    வேட்டைக்காரன் திரை விமர்சனம்....

    விஜய் படங்கள் என்றாலே அதிகமாக எனக்கு பிடிக்காத நிலையிலும் , அதிகப்படியான எதிர்ப்புகளை சம்பாதித்து அதன்மூலமாக விளம்பரம் தேடிக்கொண்ட வேட்டைக்காரன் அப்படி என்ன புதுசா சொல்லப்போறன் ஏன்டா ஆவலிலா நானும் VIP ஷோ பார்க்கப்போனன். (உண்மையா போனதுக்கு முக்கிய காரணம் டிக்கெட் ப்ரீயா கிடைச்சதுதான்).






    வழக்கம்போல விஜய்க்கே உரிய உயிர் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோட இரவு 11  மணி காட்சிக்கு 8 மணிக்கே திரண்டிருந்தனர்  ஆரவாரத்துடன். ஒருவாறாக அடித்துபிடித்து உள்ளே நுழைந்து வசதியான சீட்ட தேடி இருக்க ஒருவாறாக நள்ளிரவு 12 மணிக்கு ஏவிஎம் பெயர் திரையில விழ அப்பவே ஆரவாரம் தொடங்குகிறது.  அப்புறம் ஓரிரு வினாடிகளில் ரஜனியின் ஸ்டைலில் அறிமுகமாகிறார் நம்ம தளபதி. அப்போ பரந்த விசில் சத்தங்களில் என் காது சவ்வு கிழிந்துவிட்டது போலிருந்தது. (மனசுக்குள்ள ஜோசிததுகோண்டன் இப்பவே சவ்வு கிளிஞ்சுட்டுதேண்டா அப்புறம் தளபதிக்கு வேலை இருக்காதே எண்டு)

    Monday, December 14, 2009

    சுடும் என நினை மறவா.



    தலைமுறை ஒன்று ஓடிச்சென்றது 
    விதிமுறை பல மாற்றிச்சென்றது.
    நம் ஓசை ஓங்கி ஒலித்தபோது 
    இசைபாடி அசைபோட்ட பலரிங்கு 
    வசைபாடி நசை பேசுகின்றார் -தசைகள் துடிக்கிறதே 
    வீழ்பவன் இவன் என்றுலகும் கதை சொல்கிறதே- பதில் சொல்லிடுவோம் 
    மனைகள் கொண்ட கணைகள்
    வினைகள் செய்ததன் வினைகள்
    சுற்றும் உலகு நிற்கும் முன்னர் 
    சுடும் என நினை மறவா

    Tuesday, December 8, 2009

    பக்கம் இருந்தும் விலகிப்போகிறேன்...


    நித்தம் ஒரு சந்தமாய்
    முத்தம் என்ற சொல்லினால்
    என் உள்ளம் கொண்ட
    பெண்ணல்ல.. 
    பேரழகு - என்னுயிர்
    அருகில் இருந்து 
    அனைத்துமாகினாய்
    சூரியகதிர்களில் 
    பனிமழை தந்தாய்
    நிலவின் தண்மையில் 
    உஷ்ணம் தந்தாய்
    புயலின் வாயினில் 
    தென்றலாய் கமழ்ந்தாய்
    கொட்டும் மழையில் - உன் 
    குடைக்குள் அணைத்தாய்..!
    திட்டும் உலகின் 
    வஞ்சனை பொறுத்தாய்
    திகட்டும் இன்பம் 
    தீண்டப்பொறுத்தாய்..!

    உடலாகி உயிராகி
    சுகமாகி ரணமாகி
    நிழலாகி நினைவாகி
    ஒளியாகி இருளாகி
    தாயாகி சேயாகி
    யாதுமாகி நின்றாய்
    'போதும்' என்ற சொல்லின் 
    சுகங்கள் கொண்டேன்..

    வெற்று உடலுக்குள் 
    தூறும் மழையாக
    சுகங்கள் தந்தவளே !
    தூற்றும் உலகை 
    வென்றுகாட்ட
    பக்கம் இருந்தும் 
    விலகிப்போகிறேன்.
    சொர்க்கத்தின் வேதனை
    வேதனையில் சொர்க்கம் - காதல்.

    Wednesday, October 21, 2009

    உன்னைச்சரண் அடைவேன்.


    கண்கள் ஒருகதை சொல்ல
    கன்னம் பலரகம் கொள்ள
    நெஞ்சம் நீதான் வேண்டும் என்றதே
    கொஞ்சம் எனைக்கண்டு நீ செல்லடி
    உன் ஓரப்பார்வை விழியில்தான்
    என் இதயம் துடிக்குது அன்பே
    நேரே உன்னை கண்டால் போதும்
    ஜூன்மாதம்கூட குளிரும்.
    உந்தன் இரவில்
    நான் பக்கம் வேண்டாம்
    உன் படுக்கை அறையின்
    ஜன்னல் ஓரத்தில்
    காற்றின் வேகத்தில்
    மெல்ல அசையும்
    இலையின் மறைவில் நிலவாய் உன்னை ரசிக்க வேண்டும்

    Tuesday, October 20, 2009

    எப்படி சொல்லப்போகிறாய்..?


    நீ என் அருகில் இருந்தால்
    உன்கண்கள் காட்டிக்கொடுத்திருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கதைத்திருந்தால்
    உன் குரலில் நளினம் சொல்லியிருக்கும்
    நீ காதலிப்பதை
    நீ என்னோடு கடிதத்திலாவது உறவாடியிருந்தால்

    Wednesday, October 14, 2009

    உனக்காக...


    உதிரத்தில்
    ஊறிய
    உன்னை
    உதிரத்தில்
    உறைந்துவிட்ட
    உன் நினைவை
    உதிரத்தில்
    உதிர்ந்த
    உன் காதலை
    உயிருள்ளவரை
    உளறும் - இந்த

    Tuesday, October 13, 2009

    தலைப்பிடவில்லை தலையை பாதுகாத்துக்கொள்ள...



    பெண்களில் நோக பெரியவன் நானும்மில்லை
    பட்டதும் நானில்லை
    பட்டினத்தார் வம்சமும் சேரவில்லை
    சுட்டதும் என்னையல்ல
    குணம் பல காட்டி எனையாரும் மருட்டவும் இல்லை

    கண்ணீருடன் காத்திருக்கும்.......


    பணியாரம் வச்சுருக்கன்
    வாங்கமச்சான் ருசி பார்க்க
    கலர் கலரா பார்த்த உனக்கு
    நான் கூட கசக்குறேனா?
    கம்மாயில தண்ணி பாயுது
    தனிப்புல்லு தண்ணி தேடுது
    கவிழ்ந்த மனம் விழுந்த இடத்தில்
    மகிழவைக்குரன் வாங்க மச்சான்

    என் செய்வேன் பராபரமே!


    பிறக்கும் போதே தோளில் சுமைகள்
    சோதனை நிறைந்த வாழ்க்கையடா!
    இன்பமும் இன்னலும் இடையிடையே,
    இணைந்து கலந்த வாழ்க்கையடா!
    கடமையும் கடனும் கட்டவிழ்ந்ததால்,
    என் சுதந்திரம் இங்கு தொலையுதடா!
    கனவுகள் எல்லாம் கரைபுரண்டதால்
    வயதுகள் இங்கு முன்னே

    ஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு

    ஆராரோ ஆரிரரோ
    கண்மணியே கண்ணுறங்கு
    அன்னையவள் கண்முன்னே
    கண்ணுறங்கு கண்மணியே
    தாயழுது.. நானழுது.. ஊரழுது.. உறவழுது..
    நாய்கூட இரங்கவில்லை சேயழுது இரங்கிடுமோ செல்வமகனே!
    கண்ணுண்டு கருணையில்லை
    பெண்ணுண்டு தாய்மையில்லை
    உறவொன்று அங்கு உண்டு
    உதவிஎன்று ஒன்றுமில்லை

    Monday, October 12, 2009

    காதல்தானே செய்தேன்..!


    ஆதவா நீ போகும்போது
    என் நினைவில் கொஞ்சம் கடனாய் எடுத்துசெல்
    நினைவின் சுமைகள் நித்தம் என்னை நெருடிக்கொல்கிறதே
    கண்கள் தூங்கும் நேரம் மனம் தாண்டவம் ஆடிடுதே
    கண்கள் விழித்த நேரம் மனம் மண்ணுள் துயில்கிறதே
    உலகும் செய்த பாவம் பல ஊரார் செய்த பாவம்

    Saturday, October 10, 2009

    நீதானே..நினைவாக.


    சின்னஞ்சிறு மொட்டுக்கள்
    சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
    சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
    சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

    ஒற்றை மிட்டாயில்
    ஒரு வாய் ஒருகடி
    ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
    ஓரத்தில் படிந்த கறை அப்பபோது நாவிற்கு

    Wednesday, October 7, 2009

    நிலவைத்தேடி.......


    உனக்காக...
    காத்திருந்த தவிப்புக்கள்
    உளறாத வார்த்தைகளாய்-இன்னும்
    உள்ளத்தில் உறைந்துகிடக்கிறது

    இதயவாசலில்
    புகுந்திடும் குருதியிலும்
    உன்னைத்தேடிய துடிப்புகளின் எதிரொலி
    கேட்டுக்கொண்டுதான் கிடக்கிறது.

    இது காதலின் புது கோணமா..?










    நானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்
    என்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி
    பரஸ்பரம் பாடிக்கொன்டார்கள்.
    ஏக்கத்தொனிக்கு விடைகொடுத்ததென்னவோ
    தொலைபேசி மணிதான்..
    மாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.
    சாரி வ்ரோங் நம்பர் என தொடங்கிய கதைதான் இன்று

    சில உறவுகள்.....



    மதிமயங்கும் மாலை நேரம்
    சிந்தனைக்கு சிறகுகொடுக்க ஒதுங்கினேன்
    மாநகரின் ஆறாம் இலக்க சிறுநகர் கடற்கரை
    கதிரவன் கதிர்சுருக்க மெல்ல மிளிர்ந்த தாழையின் தழுவலும்
    நீலக்கடலின் நீளிசையும் சோலைக்குயிலின் செல்ல இசையும்
    சிறுகால் சிறுதொட்டு பரதமாடும் சிறுநண்டு
    அலைகள் தழுவும் பொன் மணல்மேடு
    யாவும் மோதும் மனதை மிதமாக்கி மெல்லத்தடவி

    எட்டியும் எட்டாத பழம்...



    காதலே நீ எங்கு சென்றாய்..?
    உயிர்தாகத்தின் கேள்வியாய்
    உறவுகள் பதித்த தடயத்திலேயே
    மீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.
    போகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.
    காதல் ஒரு அழகிய கொடிதான்
    கொடிதந்த மென் மலரிலே

    கன்னி கலையாத காதல்.


    நினைவுகள் நூறு
    கனவுகள் ஆயிரம்
    காதலன் கனவு அது
    கட்டி வைத்த மண் வீடோ
    நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
    வந்தணைக்க ஓர் நெஞ்சம்
    முந்தானை வாசமும்

    Wednesday, August 19, 2009

    பெண்ணே நீயும் நிலவோ..!



    பெண்ணே நீயும் நிலவோ

    பெயர் சொல்ல முடியா கனவோ
    இதயம் துடிக்கும் கணத்தில்.........
    உன் நினைவுகள் வந்து மறையும்
    சிறு நட்சத்திரம் ஒரு தேன் நிலவு
    மெல்லப்பாடிவரும் மென் இசைக்காற்று
    செல்லத்தலையசைக்கும் அழகு அல்லி மலர்
    இவை யாவும் யாவும் நீயோ
    உன்னை காணத்துடிக்கும் இரவும் நான்தானோ..!
    ஏய் அழகு நிலா..!
    எனை மயக்கும் நிலா..!
    ஏணி வைத்து ஏறி உன் அழகை ரசிக்கப்போறேன்
    அங்கம் எங்கும் தங்க சிறு

    ஒரு பேதையின் கனவு..


    ஏ.. பசுங்கிளியே..!
    செல்லக்காதலனோடு
    கொஞ்சிக்கதை பேசுகிறாயா..?
    உனைப்பார்க்கையில் கண்களில் நீர்துளிர
    எனக்கும் காதலிக்க ஆசை கிளியே.
    கண்கவரும் கொள்ளை அழகு

    வாரணம் ஆயிரம் கொண்டான்





    கவிஞனின் கவிஞன் நீ 
    கலைத்தாயின் கடைக்குட்டி

    கறைபடியா வர்ணமேகிய 
    புரையோடும் தமிழன் நீ
    தென்றலில் தேனெடுத்து 
    அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
    மன்றமும் மாநாடும் நாடும் 
    கவியோடும் கலைக்கடல் நீ
    மழலையின் தாயமுதும்

    காதலித்துப்பார் கொஞ்சம்...


    காதல் என்பது கனவுகளின் தொகுப்பு.. 
    காவியங்களின் தலைப்பு..
    கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி 
    கனவுகளில் கனியாகும் தேன்கனி.
    உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள் 
    ஊடுருவும் உன்னத உணர்வு.
    உயிர் இருப்பதை உணர வைக்கும் 
    ஊடல்களின் இருப்பிடம்-காதல்

    கண்களை மூடிப்பார்..
    நினைவுகள் கோர்த்துப்பார்..
    உள்ளங்கள் தேடிப்பார்..
    உணர்வுகளை உருக்கிப்பார்..
    நெஞ்ஞங்கள் துளைக்க 
    நெருடல்கள் வருட..
    காதலித்துப்பார் கொஞ்சம்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner