• Monday, February 14, 2011

  காதலித்து வா - காதலர் தின கவிதை


  வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..


  காதலித்து வா ....
  காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
  கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
  பறந்துவிட தினம் தினம் துடிக்குது
  ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
  தகுதிகள் இருந்து விட்டால்

  தடுப்பார் யாருமில்லை,
  நீயும் வா நிரந்தர குடியுரிமைக்கு
  விண்ணப்பிப்பதாய் இருந்தால்!

  காதலித்து வா.. கணம் கணம் காதலித்து வா..!
  நீ ரசித்த பூக்களின் தோட்டத்தில் உன்னை
  நுகர்ந்த மலரோடு வா..
  உன் காதல் பள்ளியின்
  முதல் நாள் பாடத்தோடு வா..
  உன் காதல் நோட்டுக்களை
  கறைபடியாது எடுத்துவா..
  உன் காதல் வெப்பத்தின் கதிர்வீச்சுகள்
  அந்தாட்டிக்கை உருக்கமுன் வா..
  அமீபாவின் பிளவுகளில் உன்
  காதல் அணுக்களை புதைத்துவா.
  வரும் வழியில்,
  தென்றல்கள் முட்டிமோதி உங்களை
  பிரிக்க நினைக்கும் - இடம் தந்துவிடாதே!
  நட்ச்சத்திரங்கள் கூரையேறி உன்
  வீடுவரும் - மயங்கி விடாதே!
  காதல் கட்டறுந்த கணைகள் உன்
  காயம் பார்க்கவரும் - கவசம் இட்டுக்கொள்.
  வல்லூறுகள் வட்டமிட்டாலும் உன்
  இஷ்ட நிலா கரம் விடாதே!

  காதலி...! வினாடிகளில் காதலி
  நிமிடங்களில் நின்று காதலி
  மணிகள் தோறும் துணிந்து காதலி
  வருடங்களில் பருவம் தப்பாது காதலி
  வம்சங்களில் ஸ்பரிசம் விட்டுக்காதலி
  காதலி காதலி ...!
  காதலித்துக்கொண்டிரு என்றும்
  நாவிலிட்ட முதல் தேன் துளிபோல்
  உன் வசம் வந்த மானை.

  உன் காதல் திருமணச்சந்தையில்
  விலைபோகாமல் பார்த்துக்கொள்.
  காதலுற்ற மறு நொடியே இருமனம்
  இணைந்து திருமணம் முடிந்ததெனக்கொள்.
  அவள் இதயம் சுற்றியோடும் நாடி அது
  நீ சூடிய தாலி என்று உன்
  உதிரம் தோறும் பச்சைகுத்திக்கொள்.

  உன் இமைகள் நிமிர்ந்தால்
  அவள் இமைகள் சரியனும்,
  அவள் இமைகள் நிமிர்கையில்
  உன் இமைகள் நெகிழனும்.
  உன் மணிபர்சில் அவள்
  புகைப்படம் வேண்டாம்
  உன் மனசெல்லாம் அவள்
  வைரஸ் ஆக்கிரமிக்கட்டும்.
  உன் கைகளில் ஆயிரம் பழுக்கள் இருக்கட்டும்
  ஒருவிரல் விட்டுவை அவள் கரம் பிடிக்க.
  உன் தொலைபேசி மணித்துடிப்பை விட
  உன் இதயம் அவளுக்காய் துடிக்கட்டும்.
  இப்படி விரதம் கொண்டுவா - பின்
  தினம் தினம் உங்களுக்கு காதலர்தினம்.
  ~~~~~~~~~~~~~~~ 
  காதலர் தினம்-2010 கவிதையை படிப்பதற்கு இங்கே...
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  Post Comment

  5 comments:

  ARV Loshan said...

  அழகு.. அருமை..

  ஒலி வடிவமும் இனிமையாக இருக்கிறது.

  அவ்வளவு விடிய எழும்பி சொல்லும் அளவுக்குக் காதல்?? :)
  ம்ம்ம்.. வாழ்த்துக்கள்.

  LOSHAN
  www.arvloshan.com

  Ashwin-WIN said...

  @LOSHAN said...
  //அழகு.. அருமை..

  ஒலி வடிவமும் இனிமையாக இருக்கிறது.//
  நன்றி நன்றி நன்றிண்ணா.
  //அவ்வளவு விடிய எழும்பி சொல்லும் அளவுக்குக் காதல்?? :)//
  விடிய எழும்பி சொல்லுரளவுக்கில்ல..ஆனா விடிய விடிய முழிச்சிருந்து சொல்லுறளவுக்கு இருக்கு.

  Agape Tamil Writer said...

  அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  Anonymous said...

  நல்ல காதல்...வாழ்த்துகள்...

  Anonymous said...

  thanx $<3<3<3<3,,,,,,,,,

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner