• Monday, December 27, 2010

  சூப்பர் ஸ்டார் - 10 - ரசித்தவை

  என்னை தொடர் பதிவுக்கு அழைத்த வரோ அண்ணாக்கு நன்றிகள்..எனக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்களை உங்களோடு பகிர்கிறேன்.. ரெண்டு வயசு இருக்கும் போதே ரஜினி படம் விசிலடித்து பார்க்குமளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன்.. சூப்பர் ஸ்டாரின் கொலை ரசிகன் அதனால் தான் சூப்பர் ஸ்டார் பேரை மிஸ் யூஸ் பண்ணுறவங்க மேல கொலை வெறி..(யார் மேல எண்டு கேக்காதீங்கோ.. அந்த பயலுண்ட படத்துக்குதான் வெயிட்டிங்)

  1)ஊர்க்காவலன் 

  Friday, December 17, 2010

  'ஐ ஆம் பக்கோடா.. ப்ரொம் கிருலப்பன' @ பதிவர் சந்திப்பு 2010

  பலநாள் ஆசையாய் சந்திக்கணும் எண்ட முடிவாய்
  பதிவர் எல்லாம் கூடிட்டோம் கூடவே பக்கோடாவும்..
  நிருஜாவும் வந்திட்டாள் நிகழ்வும் தொடங்கிட்டு
  நெடுநாள் ஆசையை தேக்கிவைத்த புல்லட்டும் கிளுகிளுப்பில்..
  சேது அய்யா செந்தமிழும் மது அண்ணா மதுயிசமும் துள்ள,
  கருத்துரைகள் செறிந்து தெறிக்குது ஆனாலும் கோபின்ட
  மூஞ்சி மட்டும் இங்கிலாந்திட்ட அடிவாங்கின பாண்டிங்மாரி..

  Wednesday, December 1, 2010

  50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி  50 தொடர்வோர்.
  Facebook ல ஸ்டேட்டஸ் ம் குறிப்புமா போட்டு மத்தவங்களுக்கு நூற்றெட்டு
  Notification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு

  சுமையோடு சுமையாக...


  கொல்லன் வீட்டு சக்கரத்தில்
  சுழன்றுகொண்டிருக்கும் காலமே
  என் சிந்தனைக்காக நிறுத்திக்கொள்
  கொஞ்சம் உன் ஓட்டத்தை
  இல்லையேல் சிந்தனை முடிகையில்
  ஓடியிருப்பாய் ஓராயிரம் நொடிகள்

  Saturday, November 27, 2010

  சீதாவை தேடி..

  அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்..  கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..

  Wednesday, November 17, 2010

  விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்


  மண்ணில் புதைத்தோர் மார்க்கம் மனதில் விதைத்தோம்
  விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
  ஊனில் புணர்வுறினும் நும் கதை தனயன்கும் உருக்கொடுப்போம்.

  Saturday, October 16, 2010

  சீனியோரிட்டியின் பச்சைப்பக்கங்கள்..  பல மைல் தூரத்தில் இருந்து பல மைற்கற்களை கடந்து பல்கலை கழகம் என்ற புரையோடிய கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் விழிகளாய் தடம் பதிக்கும் இளரத்தங்களின் துடிப்புகள் மறுக்கப்பட்ட கதை, இது பல்கலை தந்த கதை
  பல்கலை நுழைவாயிலில் நாடி நிற்கையிலே பல கனவுகள், பாடசாலை அடித்தளமிட்ட களங்களின்  விஸ்தீரமான கேந்திரமாக பல்கலை கழகம் எம் எதிர் பார்ப்பில்.....

  பள்ளி சிட்டுக்களாய் வயதுகளின் பரிணாம வளர்ச்சியிலே

  Friday, October 1, 2010

  எந்திரன் - என்பார்வையில்

  உலக சினிமா ரசிகர்களையே ஏக்கத்தில் தூக்கிப்போட்ட எந்திரன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் அக்டோபர் ஒன்று முதல் வெளிவந்து பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளது...  என்றுமே இல்லாத வகையில் அதீத எதிர்பார்ப்பு.. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராஜய் பச்சன்,இயக்குனர் சங்கர் ,ஆஸ்கார் ரஹ்மான் பிளஸ் சன் பிக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணி... அதை விட ஆசியாவிலிருந்து வெளியாகும் முதல் பிரம்மாண்ட திரைப்படம்.. வெளியாக முதலே கலேச்சங்கள் குவிந்துவிட்ட திரைப்படம் என ஆவலைதூண்டி விட வழமையை விட நம் நாட்டிலும் பெரிய பெரிய கட்டவுட்டுகள் பானர்கள் என

  Thursday, September 30, 2010

  உளறல்

  பெண்மையின் அர்த்தம் மென்மைதானே

  பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
  மெல்லிய மலரும் ஆர்ப்பரிக்கா சிறு நதியும் 

  தண்ணிய தென்றலும் தாழையின் வழுவலும்
  தூரத்து நிலவும் துயரில்லா தோகை

  Saturday, September 25, 2010

  வாங்க கிரிக்கட் விளையாடலாம்- சீரியஸ்நேர காமெடி பதிவு

  தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...
  .
  .

  .

  Saturday, August 28, 2010

  நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!

  நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
  நக்கலும் நளினமுமல்ல
  நாள் நடப்புச்சொல்கின்றேன்
  நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!

  முட்கம்பி வேலிகளில்
  ஊஞ்சலிடும் முல்லைகள்
  ரிப்பன்களோடு சேர்ந்து
  நெய்துவிட்ட தாவணியோடு
  சில்வண்டு இரையும்

  Monday, July 5, 2010

  சரவெடி-University of Moratuwa , E08 Batch Film .

   -சரவெடி- -சரவெடி- -சரவெடி- -சரவெடி- -சரவெடி-
  Part 1/5


  Part 2/5

  Friday, June 18, 2010

  ராவணன்-திரைவிமர்சனம் சுடச்சுட...

  உலகமெங்கும் உள்ள பலகோடி இந்திய சினிமா ரசிகர்காளால் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் இன்று 18 ஆம் தேதி உலகின் மூலை முடுக்கெங்கும் திரையிடப்படவிருக்கிறது...(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நேரம் 18 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி). எந்த ஒரு பிரம்மாண்ட விளம்பரங்களுமில்லாது பிரம்மாண்டங்களின் படைப்பில் ஆர்வங்களை தூண்டிய திரைப்படம்.. மணிரத்னம்,ஏ.ஆர்.ரஹ்மான்,வைரமுத்து,விக்ரம்,ஐஸ்வர்யா பச்சன்,பிரபு,கார்த்திக் என்று பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாத கூட்டணியாக பலரைப்போலவும் எனக்கும் எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படம்.

  18 ஆம் தேதியே வெளியாகின்றபோதும் முதல்நாள் இரவுக்காட்சி ஒன்று VIP show என்றபெயரிலே (அதுக்கு நீ ஏன் போனீ? எண்டு கேக்காதீங்கோ. நம்மள மாதிரி ஆக்கள்தான் இப்போ VIP -விரிவு தெரியும்தானே) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் முந்தியடித்து இரண்டு

  Tuesday, June 1, 2010

  சரவெடி University of Moratuwa Film Trailer .


  சரவெடி University of Moratuwa Film Trailer .

  படத்த பற்றி பிறகு நிறையவே பேசுவோம், இப்போதைக்கு இத பாருங்க

  Saturday, May 29, 2010

  இந்திய அணி -அவமானம் , சிம்பாவே-அபாரம், இலங்கை-அவதானம்.

  இந்தியா ,இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் பங்குபெறும் முக்கோண கிரிக்கெட் தொடர் இன்று சிம்பாவேயில் ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா சிம்பாவே அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆறு விக்கெட்டுகளால் சிம்பாவே அணி இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு நல்லதோர் படிப்பினையை புகட்டியுள்ளது.  இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையில் கார்த்திக்,முரளி விஜய்,விராத் ஹோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான்,ஜடேஜா ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையுடனும் IPL போட்டிகளில் அசத்திய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களாக வினய்குமார்,அசோக் டின்டா , அமித் மிர்சா,யாதவ் ஆகியோருடன் வழமையான இந்திய அணிக்கு எவ்விதத்திலும் குறையாத அணியாக களமிறங்க சிம்பாவே அணி தைபு தவிர்ந்த வழமையான அணியாக களமிறங்கியது.


  Monday, May 17, 2010

  தொடர்கதை.. நம் வாழ்க்கை.  தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ அடுக்குமாடிக்கட்டடங்களும் ஆர்ப்பரிக்கும் மக்களும். இன்று அக்ஷயத்திருதியை வேறு பொன்  சேர்க்ககூடிவிட்டார் பலர். நடந்தபாதை எங்கும் முட்டியது தமிழ் மூச்சுக்கள்தான். மூச்சோடு மூர்ச்சிரைத்து அடங்கிவிட்டிருந்ததது என்மூச்சு. மகிழ்ச்சிக்கு குறைவில்லை போலும், இன்றும் கூட்டம் கூட்டமாய் வெட்டிப்பேச்சு வாயினில், வெள்ளைப்பூச்சு நெற்றியில்.

  வீதியோரத்தில் கரையொதுங்கிய பேருந்துகள் கடுகதிப்பயனத்துக்காய் தயார்நிலையில், நெடுதூரப்பயணம் இன்றுவரை நெருக்குவாரப்பயணம், உறங்கிய யாழ்தேவிக்காய் விழித்துக்கொண்ட தற்காலிக/நிரந்தர முகவர்கள் இந்த பேரூந்துகள். அவை சுற்றி ஆருடம் பேசும் அசகாயர்கள் சிலரும் ஆரியம் பேசும் வீரியர் பலரும். இவர்களில் ஒருவர் உள்நாட்டு அகதிகள் மற்றவர் உள்நாட்டு உல்லாசப்பயணிகள். ஏறெடுத்துப்பார்க்கிறார் என்னையும் ஏதோ எதிர் நாட்டார் போல. அத்துணையும் மனசுக்கு பழகிப்போன ஒன்று.. இன்று நேற்றல்லவே  இக்கதை..

  Tuesday, May 11, 2010

  எழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம்.

  அன்பு-விலங்குகள் கூட்டத்தில் காட்டுவது,மனிதன் தனிமையில் தேடுவது.

  "செய்வினும் சேரக்கூடும் சேர்ந்ததும் ஏப்பம்கொள்ளும்
  மறைந்ததும் மாளத்தூண்டும்-அன்பு."

  Friday, April 30, 2010

  BATTLE OF THE HINDUS-2010-முதல்நாள் ஆட்டம்-இந்துக்கல்லூரி அபாரஆட்டம்.

  இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று வெகுகோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் இந்துக்கலூரியிளிருந்து வாகனதொடரணியாக அழைத்துவரப்பட்ட யாழ் இந்து அணியை கொக்குவில் அணி சம்பிரதாய பூர்வமாக வரவேற்றதுடன் ஆரம்பமான அறிமுக நிகழ்வை தொடர்ந்து போட்டி 9 .30 மணிக்கு ஆரம்பமானது. 

  Tuesday, April 27, 2010

  BATTLE OF HINDUS - 2010 யாழ் குடாநாட்டின் மிகுபெரும் கிரிக்கெட் சமர்.

  யாழ்ப்பாணத்தின் பெருமைகளினதும் பெறுபேறுகளினதும் பெரும் பங்காளிகளான நூற்றாண்டுப்புகழ் கொண்ட இரு கல்லூரிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரிகள் மோதிக்கொள்ளும் BATTLE OF HINDUS என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போர் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மாபெரும் கிரிக்கெட் சமர் யாழ்ப்பாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மகுடமாக விளங்கும் வகையில் இரண்டே ஆண்டுகளில் பெரும் வரவேற்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே மேலும்

  Sunday, February 14, 2010

  அழகே என்னை காதலி..


  கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த இங்கே கேட்கலாம்..
  Get this widget | Track details | eSnips Social DNA


  காதல் கனவுகளில் கரைசேர்ந்த ஓடம்
  உள்ளங்கள் சேர்ந்து உணர்வுகளை உருக்கும் உன்னத உணர்வு
  பங்குனி வெயிலில் பருவம் பொய்த்து பெய்த மழை
  நானும் நனைந்துவிட்டேன்-கேள் கொஞ்ச

  Wednesday, January 20, 2010

  அரசியல் செய்துபார்.!

  கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க  இங்க கிளிக் பண்ணுங்கோ..

  அரசியல் செய்துபார் 
  உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்
  தோட்டாக்கள் தேடும்
  செல்வாக்கின் அர்த்தம் புரியும்
  சொல்வாக்கு மலிந்து போகும்
  உனக்கும் தத்துவம் வரும்
  ஒலிபெருக்கிகள் அதறக்கேட்டும்
  ஒடுக்கமாட்டாய் உன் பேச்சை

  Wednesday, January 13, 2010

  தைமகளை வரவேற்போம் வெற்றிலை வைத்தல்ல அன்னம்போல் பகுத்து.


  சிறகடித்து பறக்கிறது பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல
  கவிதையில் நனைந்த காகிதங்களும்
  பரபரப்பை நிற்கிறான் பாமரன் மட்டுமல்ல
  சுடர்ஒளி வீசும் வீரகேசரி தினகரனும்தான்
  உழவன் விதைத்த நெல்லும் முத்திடுச்சு
  இலவம் பஞ்சும் பல காத்திருக்கு
  அலங்காநல்லூரில் அலங்கரித்த காளைகளும்
  அடக்கதுடிக்கும் பல கரங்களும் காத்திருக்கு
  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner