• Saturday, November 27, 2010

  சீதாவை தேடி..

  அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்..  கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..
  என்ன நடந்தது..'' எண்டு பாதி தூக்கத்துல கத்தின மனுசன்ட வாயில அரைக்கப் ரீய வச்சு  சுயநினைவுக்கு கொண்டுவந்தா.. எழும்பின மனுசன்ட கண்ணீர் துளி ஒண்டு விழுந்து ரீகூட இப்போ போட்டமாதிரி சூடா வந்துட்டுது.. ரீய குடிச்சுமுடிச்ச மனுசனிட்ட ஆறுதலா விசாரிச்சா பவானி ''யாரங்க அந்த சீதா?''  ''அது அது ரீ தா.. ரீ தா.. எண்டு கேட்டது உனக்கு அப்டி விளங்கிட்டுது .. போடி பைத்தியகாரி'' எண்டு சொல்லிக்கொண்டே பாத்ரூமுக்க போய்ட்டார் மனுஷன்.. பவானியும் அப்டியே மகனுண்ட அறைய துப்பரவாக்கிட்டிருந்தாள். பெடியன் படுத்த பெட்சீற்ர எடுத்து ‘’ நேற்றுதான் கொடுத்தன் உவனிட்ட இந்த பெட்சீற்ர, கரடிகுட்டி மாதிரி இருந்துச்சு.. இப்ப புள்ளிமான் மாதிரி ஆக்கி வச்சிருக்கான்..'' எண்டு திட்டின படி துவைகுறதுக்கு கொண்டு போறதுக்கிடைல குளிச்சு முடிச்சு வந்துட்டார் கனகலிங்கம்..

  வந்த மனுஷன் சாப்புடவும் இல்ல குடையையும் தூக்கிகொண்டு வாரண்டி வெளில ஒரு வேலை இருக்கெண்டு கிளம்பிட்டார்.. கிளம்பின மனுசன்ட மனசுல ஏதோ நினைவுகள் அலை ஓடிட்டு இருந்துச்சு.. நடையுல இருபது வயசு குறைஞ்ச மாதிரி இருந்துச்சு.. அப்டியே பாக்கெட்டுல இருந்த செல் போனை எடுத்து ஒரு நம்பர அமுக்கி காதுல வச்சார்.. ''அடேய் லோஸ், மச்சான் ஒரு உதவி பண்ணு இண்டைக்கு ஒரு அலுவலா இருக்கன்.. மனுசிட்ட உண்ட வீட்ட மேட்ச் பாக்க போறேன் எண்டு சொல்லுறன் போன் எடுத்தாலெண்டா சமாளிச்சுகொள் பின்னேரம் வரை..'' மற்றபக்கதுல இருந்து ''டேய் டேய் என்னைய மாட்டி விட்டுடாத.. எங்க போறாய் எண்டு சொல்லு சமாளிச்சுகுறன்'' எண்ட அதுக்கு கனகலிங்கம் ''சீதா ஞாபகம் வந்துட்டுதுடா கொஞ்சம் தேத்திட்டு வாறன்.. ப்ளீஸ்டா சமாளி..''  ‘’ ம் இன்னும் உன்னைய வெட்டிடு போனவளை நீ மறக்கேலை .. சரி தேத்து தேத்து ஆனா ஒண்டு மட்டும் விளங்கிகொள்ளு நான் சத்தியம் பண்ணி சொல்லுறன் மேட்ச் வெல்ல போறது ஆஸ்திரேலியாதான்..  go auses go '' .'' சரிடா சரிடா போய் மேட்ச பாரு.. எண்டுட்டு பவானிக்கும் கோல் பண்ணி மேட்ச் பாக்குற விசயத்த சொல்லிடு நடைய கிளப்பினார் சீதாவின் நினைவுகளை தேடி..


  நேர நடையா நடந்த மனுசன்ட கால்கள் ஒரு நெட் கபேக்குள் புகுந்து கொண்டது.. அங்க மூலைக்கரையா இருக்குற பதினோராம் நம்பர் கம்பியூட்டர் பக்கம் போய் ப்ரீயா இருக்கோ எண்டு எட்டி பாத்தார்.. அதுல ஒரு சிவத்த பையன் facebook , gmail , yahoo எண்டு எல்லாத்தையும் ஓபன் பண்ணி வச்சுகொண்டு அரைமணித்தியாலமா sign in பண்ண முடியாம திணறிட்டு இருந்தான்.. பொறுமை தாங்கேலாத கனகலிங்கம் என்ன தம்பி பிரச்சன எண்டு விசாரித்தார்.. ‘’இல்ல என்ட பாஸ்வோர்ட் ஒன்னும் வேலை செய்யுதில்ல என்ன நடந்ததெண்டு புரியல'' என்றான்.. பாஸ்வோர்டதாரும் நான் ட்ரை பண்ணி பாக்குறன் எண்டு கேக்க அந்த பையனும் ‘’ Facebookக்கு srikara18+ , gmailக்கு athira18- ’’ கனகும் தான் கதிரைல இருந்து முயற்சி பண்ணி பாத்துட்டு நிண்டுட்டிருந்த அந்த பையனை ஒரு ஸ்டூலை எடுதுவரும்படி கூறினார்..பையனும் ஸ்டூலை கொண்டுவந்து தான் அதுல இருக்க வெளிக்கிட, ‘’தம்பி இது என்ட சின்ன ஸ்டூல் நீர் இப்போ போய் உம்மட சின்ன ஸ்டூளிட்ட பாஸ்வோர்ட கேட்டுட்டு வந்து அடியும் இப்ப வெளிக்கிடும்'' எண்ட பையனும் போய்டான்..
   கனகலிங்கமும் அந்த ஸ்டூலை பக்கத்துல கிட்டவா வச்சுகொண்டு அதையே பாத்துக்கொண்டு வெறுங்கையால ஸ்டூலை தடவிட்டு இருந்தார்.. அப்டியே ஸ்டூல்மேல படுத்திருந்த மனுசனை பக்கத்துக்கு கம்பியூட்டர்ல இருந்த ரெண்டு ஸ்டூலின் முனகல் சத்தம் எழும்ப வச்சுட்டுது. அதோட கனகலிங்கமும் ஸ்டூலை பார்த்தபடியே மூஞ்சிய தேம்பிட்டு  கடைகாரனிட்ட ‘’தம்பி இருபது வருசமா இன்னும் அந்த மூளை கம்பியூட்டர் மாத்தல என்ன.. தாங்க்ஸ்.'' எண்டுட்டு கடைய விட்டு வெளில வந்தார்..

  வெளில வந்த மனுஷன் நேர பீச் பக்கமா நடந்து ஜோடிகள் கூத்தாடும் மரம் நடுவே தனித்திருந்த மரம் ஒன்றை கண்டு பிடித்து அதிலேறி அமர்ந்து குடையை விரித்துக்கொண்டார். பக்கத்தில் ஒருவர் இருக்கும் அளவுக்கு இடம் இருந்தது.. அதை பார்த்த படியே நினைவலைகளை ஓட்டிக்கொண்டிருந்தார்.. நேரம் செல்ல செல்ல பக்கத்திலிருந்த இடம் சிறுத்துகொண்டு போனது.. கனகலிங்கம் நினைவலைகளில் சந்தோசம்.. பின் மடியை தட்டிக்கொண்டு எழும்பி தனக்கு பக்கத்திலிருந்த புதர்செடிகளை, அன்றைய சொந்தங்களை தடவிக்கொடுத்தார்.. உள்ளே ரெண்டு ஜீவராசிகள்.. ''சாரி'' எண்டுட்டு மெல்லமா கிளம்பிட்டார்.. அப்டியே தண்டவாள பக்கமா நடந்து போக ரயில் ஓடிட்டு வந்த பையன் இவர் மேல மோத கீழ விழுந்த அந்த பையனிண்ட கண்ணாடிய எடுத்து கொடுத்து ''எங்கப்பா போறாய்?'' எண்ட ’’ ஊருக்கு போறேனே.. றால் வடை சாப்ட போறேனே.’’ என்னு கிளம்பிட்டான் அந்த பையன்.. மனசுக்குள் சிரித்துகொண்டார்.. இப்புடி அனுதினம் வந்த ரயில்பயணத்தில்தானே சீதா உன்னட கவிழ்ந்தன் எண்டு..

  இப்படியே கோயில், 155 பஸ் , தியேட்டர் , பார்க் எண்டு சீதா நினைவு இழுத்துச்சென்ற இடமெல்லாம் ஏறி இறங்கினார்.. உடம்பும் களைச்சுட்டுது நேரமும் அஞ்சு ஆச்சுது கடைசியா பஸ்ரான்ட் பக்கத்துல இருந்த அந்த மூண்டு மாடி வீட்டு பக்கம் போய் கொஞ்ச நேரம் பாத்திட்டு இருந்தார்.. உள்ள ஒரு மூண்டு கார் நிக்குது
  பெரிய வீடு வேற.. இத பாத்து கொஞ்சம் கடுப்பாகி போய் மனசுக்குள் ‘’ இதுகளுக்காகதானே சீதா என்னைய கலட்டிடு போனீ’’ எண்டு நினச்சபடி அந்த இடத்தைவிட்டு விறு விறு எண்டு நீங்கினார் மனுஷன்.. ஒருமாதிரி மனுஷன் எதையோ சாதிச்ச திமிரோட வீட்ட வந்து கதிரைல  உட்கார்ந்தார்.. பெரு மூச்சு விட்டபடி 'இனி ஒருத்தன் நித்திரைய இப்டியான சீதாக்கள் கெடுக்ககூடாதுண்டு நினச்சு தேத்திக்கொண்டார்..

  அப்போ கதவதுறந்துட்டு வந்த கடைசி மகள் ரஞ்சிதா’’ என்னப்பா நீங்கள் இண்டைக்கு கொழும்பு பூரா சுத்தினியலாமே.. பஸ்சுல, பார்க்குல, தியேட்டர்ல.. பீச்சுல.. அதுவும் புதருக்க வேற எட்டிப்பாக்குரியல் என்ன..என்ன ஆளோ நீங்கள்'' எண்டுட்டு உள்ளே போனாள் செல்ல மகள்...


  குறிப்பு : யாரும் திட்டப்படாது கோவிக்க படாது என்னா இது ?.. இதுல என்னா மெசேஜ்? எண்டு.. பிள்ளையார் புடிக்கபோய் குரங்கான கதைதான்.. கெட்டிக்காரகங்க எண்டா இதுலயும்  மெசேஜ் எடுக்கலாம் :)))

  Post Comment

  1 comments:

  அமரேஷ் said...

  எண்டாலும் அந்த “லோஸ்”க்கு கோல் பண்ணி மட்ச் பாக்க போனதெண்டு சமாளிக்க சொன்ன மரி எனக்கும் ஒருத்தன் சோனவன்...அவன் ஆரம்பத்தில அம்மாட்ட சமாளியடா எண்டு சொன்னவன் பேந்து முதல் காதலியிட்ட சமாளியடா எண்டு சொன்னான்...யார சொல்லுறன் எண்டு எல்லாருக்கும் விளங்குது தானே...விளங்கும் விளங்கும்..நீங்க எல்லாம் கெட்டிக்காரர் தானே...

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner