• Friday, January 14, 2011

  காவலன் - விமர்சனம்.


  சுமார் 35 கோடி இந்திய ரூபாய் பட்ஜெட்டில் கோடி பிரச்சனைகள் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு பட்டைய கிளப்ப போற படம்தான் நம்ம இளைய தளபதியின் காவலன். இதுல அண்ணாத்தயோட சிலான் புகழ் அம்மணி அசின், ராஜ்கிரண் சார், வடிவேலு அண்ணே எல்லாரும் நடிச்சிருக்கினம். படம் இப்போ
  வருது அப்போ வருது எண்டு பீதிய கிளப்பி இப்போ நாளைக்கு பொங்கல்ல பொங்குறதுக்கு ரெடியாயிட்டு..

  அண்ணாத்தேன்ட காரியர்ல ஏதோ ரெண்டு மூணு படம் ஹிட் ஆகாம மிஸ் ஆயிட்டுது எண்டதால கொஞ்ச கூட்டம் காவலனையும் கவுத்துப்போட நிக்குது.. அதுக்கெண்டே துடியா துடிக்குது.. சந்தி பந்தி முதலா நெட்டில பிட்டில எல்லாம் நாறடிக்குது. அவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிகுறன் நீங்க நினைகுறதுதான் நடவாதெண்டுறன்.  யார் தடுத்தாலும் என்னா கமெண்டு போட்டாலும் அண்ணாத்தேண்ட படம் இந்தமுறை சூப்பர் ஹிட்டாகுறது 100% உறுதிங்கோ..

  இது என்னாடா இவனு நம்ம கட்சி ஆச்சே இப்புடி கவுந்துட்டானே என்னு எதிர்கட்சி நினைகுறது விளங்குது... நான் இப்போ கட்சி மாறிட்டேன். காவலன் இப்போ என் காவலன். இருந்தாலும் அடேய் அதேப்டிடா நீ 100% உறுதியா சொல்லலாம் எண்டு நீங்க கேக்குறது விளங்குது... காரணத்த சொல்லுறன் விளங்குங்கோ...

  அண்ணாத்தே நடிச்சே காவலன் படம் ஒருவருசத்துக்கு முதல்ல மலையாளத்துல வந்த பாடி கார்ட் (Bodygaurd) படத்தோட ரீமேக் எண்டது உங்களுக்கு தெரியும். எத்தின பேர் அத பாத்தியலோ தெரியல .. நாம நேத்துதான் பாத்தம்.. பாத்தவுடனே தோணிட்டு காவலன் சூப்பர் ஹிட்டு எண்டு..

  அங்க நயன்தார அம்மையார் (இப்போ அவங்க அம்மையார்தான்) கதாநாயகி என்னை பொருத்தவரை அசின் அதவிட பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க. படத்துல ஹீரோக்கு சரிசமமா கதாநாயகிக்கு காரெக்டர் இருக்கு என்டுறதால இது ஹிட்டுக்கு ஒண்ணாவது ரீசன். ரெண்டாவது இயக்குனர், மலையாளத்துலையும் சித்திக்தான் இங்கயும் அவரேதான் . தன்ர படத்த தானே ரீமேக் பண்ணுறதால அதுல விட்ட தவறுகளையும் திருத்தி டபுள் சக்செஸ் குடுப்பார் எண்டு எதிர்பாக்கலாம்.

  அடுத்த ரீசன் மலையாளத்துல தியாகராஜன் நடிச்ச கரெக்டரை இங்க ராஜ்கிரண் பண்ணுறார். உண்மையில் அந்த பாத்திரம் ராஜ்கிரனுக்குதான் சோக்கா பொருந்தும்..அப்போ அந்த கவலையும் இல்ல. எல்லாத்தையும் விட வடிவேலு காமெடில பிசிரெடுக்கபோறார்.. ரெய்லர பாத்தளவில மலையாளத்துல இருக்கிற அதே காமெடி டிராக்கைதான் தமிழ்லயும் பாவிச்சிருக்கினம். அரைகுறையா விளங்கியே குடல் ஜம்ப் அடிக்க சிரிச்சன் வடிவேலு அண்ணேண்ட லாங்குவிச்சுல கேக்கேக குடல் ஜம்படிச்சு எகிறி வெளில குதிக்க போறது உறுதி.. அடுத்த ஹிட்டுக்கு ப்ளஸ் வித்தியாசாகரின் இசை.. பாட்டெல்லாம் சும்மா நடுசாமதிலையும் ரசிக்ககூட்டியமாதிரி இருக்கு..

  ஸோ... படம் ஹிட்டாகுறது உறுதியோ உறுதிங்க .. இருந்தாலும் ஒரே ஒரு டவுட்டுதானுங்கோ.. அண்ணாத்தே என்ன பண்ண போறாரு எண்டுதான்.. ப்ளீஸ் அண்ணாத்தே சும்மா ப்லைட்டுல, ஜீப்ல ரெண்டுமே கெடைக்காட்டி  குதிரைல எண்டு அங்க இங்க சும்மா பறக்காம காதலுக்கு மரியாதைல வந்தீங்களே அப்டியே வந்தீங்கன்னா போதும்ணா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிடும். எத்தன முறை ஏமாந்தாலும் இந்தமுறையும் வருவேன்ணா 1st ஷோவுக்கு ஏன்னா நானும் ஒரு விக்ரமாதித்தன்தான் உங்க மாட்டர்ல. நீங்க படத்த ஹிட்டாக்குங்க அதுக்கு பிறகும் எவனாச்சும் ஒங்கள பத்தி தப்பா பிட்டு போட்டான்னா நான் அவனுக்கு சொட்ட போடுறன்..  வாறேன்னா..

  குஜால கதை கேட்ட சொந்தகாரங்களே நான் வாறன்.. திரைவிமர்சனத்தோட அப்புறமா மீட் பண்ணுவம்.. அதுக்குள்ளே அண்ணாத்தேன்ட படத்த பாத்துடுங்கோ.. அப்புறம் மறக்காம ஓட்ட போட்டுட்டு போங்கோ.. 
  ஹப்பி பொங்கல் டு யூ.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  Post Comment

  6 comments:

  Anonymous said...

  nalavelai intha vadi thapicha shopi...

  jayan

  ஷஹன்ஷா said...

  ஜெய்க்கும் காவலன்....................................!!!

  உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

  இனம் மறந்து இயல் மறந்து
  இருப்பின் நிலைமறந்து
  பொருள் ஈட்டும் போதையிலே
  தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
  நினைவூட்டும் தாயகத் திருநாள்

  உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

  Unknown said...

  dei congress kooda kathaichu engada thamilana asinga paduthina vijaykku ippidi thongureengal...urupaduvan thamilan..............
  vadakathayanukku kumbudu poadureengal...

  ம.தி.சுதா said...

  காத்திருப்போம்....

  இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

  தர்ஷன் said...

  friends , எங்கள் அண்ணா என்பவற்றை எல்லாம் நினைத்து பார்த்தால் சிதீகின் காமெடி விசையை காப்பாற்றும் என்றுத்தான் தோன்றுகிறது

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner