• Friday, July 15, 2011

    தெய்வதிருமகள் - சுட சுட பார்வை.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு திரைப்படத்தின் நினைவுகள் மறையமுன் இந்த விமர்சனத்தை தாங்கி வருகிறது எனது வலைப்பூ..
    மற்றுமொரு வி.ஐ.பி காட்சி.. ஆனால் வழமை போல் ஏமாற்றமும் அல்ல. அதுவும் பணம் கொடுத்து பார்த்த காட்சி. ஒரு நல்ல காரியத்திற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமானவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒருங்கே சேர்த்து சொன்னால் பணம் கொடுத்து பார்த்த முதல் ஏமாற்றம் அல்லாத வி.ஐ.பி காட்சி என்றுகூட சொல்லலாம். சரி படம் பற்றி பார்ப்போம்.

    விக்கிரமின் வேறுபட்ட பரிமாணங்களுக்கு தீனியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த தெய்வதிருமகள். ஒரு தந்தை மகளின் பாசத்தை இரு குழந்தைகளுக்கிடையான வெள்ளோந்தியான அன்பாக படைத்து திரைக்காவியமாக தந்திருக்கிறார் விஜய்.  படம் ஆரம்பிக்கையிலேயே ஒரு அமைதி.. அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இருக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே ட்ரெயிலர்களில் திரைப்பட வர்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தார்கள் தாரிப்பாளர்கள். கதாநாயகனின் இயல்பான அறிமுகம் கூடவே தவழ்ந்த எழுத்தோட்டம். அனைத்திலும் ஒரு நிசப்தம். ஆனால் டாக்டர் விக்ரம் என்று பெயர் வரும்போது தியேட்டர் மூலைகளில் டாக்டர் விஜய் என்ற நாமமும் ஆர்ப்பரிக்கத்தான் செய்தது. 


    மனநிலை குன்றியவராக வரும் விக்ரம், நிலா.. நிலா.. என்று தொலைத்துவிட்ட மகளைத்தேடி சென்னையில் நுழைகிறார். இங்கு விக்ரமுக்கு உதவி செய்ய வக்கீலாக இருக்கும் அனுஷ்கா மற்றும் சந்தானம் புதிய பாத்திரங்களாக. இப்படி முற்கதை இடையிடையே சந்தானத்தின் கலாட்டாவுடன் நகர எத்தனிக்க, கதை மகளை தொலைத்த கதை தேடி முன்னோக்கி நகர்கிறது. அழகான ஊட்டி. மலைகளின் இளவரசியை இளவரசியாகவே காட்டியிருக்கிறது இன்றுதான் இந்த தமிழ் சினிமா. இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கத்வறிய அழகான காட்சிகளோடு ஆரம்பிக்கிறது கிருஷ்ணா என்கிற விக்ரம் நிலாவை பெற்றகதை. ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலை புரியும் மனநிலை குன்றிய கிருஷ்ணா ஒரு மகளை பெற்றெடுக்கிறார். அதே நேரம் மனைவியையும் பறிகொடுக்கிறார். இங்கு ஆரம்பிக்கிறது தந்தை மகளுக்கிடையான பாசங்களின் பிணைப்பு. பாதி நேரம் கண்கள் ஈரம், பாதி நேரம் இதழோர புன்னகை, இடையிடையே சோரும் கண்கள் என ரசிகர்களின் உணர்வுகள் திரையரங்கை ஆக்கிரமிக்கிறது.  


    அழகாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் திருப்பங்கள் நுழைகிறது. அப்போதுதான் அமலா பால் இன் அறிமுகம். கிருஷ்ணாவின் மகள் நிலா கற்கும் பள்ளியின் மேலாளராக வருகிறார். சேலையில் வந்து என் மனசையும் சேர்த்து உடுத்திட்டு போயிட்டா அமலாபால். நிலாவும் சுவேதா என்கிற அமலாபாலும் வருகிற காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நிலாவுடன் அதிகம் பிரியம் கொள்ளும் அமலாபாலுக்கு ஒரு நிலையில் நிலா தன் அக்காவின் மகள் என தெரிய வரவே தொழிலதிபரான தன தந்தையின் உதவியோடு நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து செல்கிறார். இப்போது கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. இதற்கு பின்னர் தன மகளை விக்ரம் மீட்கிறாரா, இதற்கு எப்படி எப்படியெல்லாம் அனுஷ்கா உதவுகிறார் என்றே கதை நகர்கிறது.. அதை திரையில் பார்த்துக்கொண்டால் உங்கள் உணர்வுகளை நீங்களும் ரசித்துக்கொள்வீர்கள். 

    அப்போ கதைய விட்டுட்டு படத்தின் நல்லவிசயங்களை கொஞ்சம் பார்ப்பம்.

    1. தமிழ் சினிமாவின் மூத்தோருக்கு சொந்தமான கதைஎன்றாலும் காட்சிகள் அமைத்திருக்கும் விதம், மன வளர்ச்சி குன்றிய தந்தை எப்படி தன பிள்ளையுடன் பாசமாய் இருக்கமுடியும் என்பதை குறையின்றி காட்டியிருக்கும் விதம், எம்.எஸ்.பாஸ்கரை கதைக்குள் நுழைத்து பயன்படுத்திய தன்மை, கதாநாயகன் கதா நாயகி என்பதற்கு அப்பால் கதைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் எல்லாமே இயக்குனர் விஜயை பாராட்டத்தூண்டுகிறது.


    2. கதையின் போக்கின் இடையிடையே சமூக சிந்தனையை தூண்டும் காட்சிகள் அமைக்கப்பட்டதிற்கும் குழந்தையின் பேச்சில் வரும் அழகான வசனங்களுக்கும் இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஸ்.
    பிடித்த வசனங்கள் 
    ''ஒரு சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் விபரமாய் இருந்தாலே போதும்''

    ''காக்கா ஏன் கருப்பா இருக்கு அப்பா?''
    ''அது வெயிலிலயே திரியுதுதானே அதான்''

    ''என் அம்மா எங்க அப்பா''
    ''அம்மாவ சாமி தன்கிட்ட கூப்பிட்டுட்டாரு''
    ''ஏன் அப்பா, சாமிக்கு அம்மா இல்லையா?''

    ''வக்கீல்கிட்டையும் டாக்டர்கிட்டையும் பொய் சொல்லக்கூடாது, ஆனா வக்கீலும் டாக்டரும் பொய் சொல்லலாம்''

    3.படத்தில் மிகப்பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வித்தியாசமான தளங்களை தெரிவு செய்து வித்தியாசமான கோணத்தில் அழகு படுத்தி காட்டியுள்ளார். இவர் கமேராவில் அவ்வப்போது அனுஸ்காவைவிடவும் அவ தோழி அழகாக தெரிகிறார். நிலாவாக வரும் அந்த ஐந்து வயது செல்லத்தை கமேராவில் உணர்வுபட காட்டியிருக்கும் விதம் மனசை விட்டு நிலாவின் பிம்பத்தை அகல மறுக்கிறது.

    4. பின்னணி இசை படத்தோடு ஒட்டிப்போகிறது. அவ்வளவு சிறப்பாக சொல்லவேண்டிய இடம் என்று எதுவும் தென்படவில்லை. பாடல்கள் ஓடியோவில் கேட்டதைவிட காட்சிகளோடு பார்க்கும் போது ரசிக்ககூடியதாக உள்ளது. எஸ்.பி.பியின் குரலில் வரும் 'ஜகததோம்' பாடல் கணீர் மற்றும் உயிரோட்டம்.

    5. எல்லாத்துக்கும் மேலாக பாராட்டவேண்டியது விக்ரம் இப்படத்தை தெரிவு செய்து மனநிலை குன்றியவராகவே ஒவ்வொரு கோணத்திலும் நடித்திருக்கும் விதம். விக்ரம் போல் கையை அப்டி இப்டி வைத்து கொஞ்சம் நடித்து பார்த்தேன். அவர் பட்ட கஷ்டம் புரிஞ்சுது.. நிச்சயம் விக்ரமுக்கு அவார்ட் உண்டு. ஆனால் விக்ரம் சார் இப்படியே தொடர்ந்து பாத்திரங்களை தெரிவு செய்தால் மக்களுக்கு அலுத்துவிடும். அதையும் கொஞ்சம் கவனத்துல கொள்ளுங்கோ.


    6.இந்த நிமிடம் வரை மனத்தில குவியமுள்ள காட்ச்சிப்பேளையாக நிற்பது அந்த ஐந்துவயது நிலா. என்ன ஒரு அழகான நடிப்பு இந்த வயதில். என்ன ஒரு முக பாவம். படத்தில் அதிகம் நடித்திருப்பது என்னை பொறுத்தவரை அந்த அழகு தேவதைதான். படத்திற்கு தெய்வ திருமகன் என்பதை விட தெய்வதிருமகள் என்பதே சாலப்பொருத்தம். அத்தோடு மனதில் நிற்கும் பாத்திரங்கள் வக்கீலாக வரும் நாசர், நாசரின் உதவி வக்கீலாக வந்து அனுஷ்காவின் தோழியை காதலிக்கும் நபர், எம் எஸ் பாஸ்கர்.  இதெல்லாத்தையும் விட அந்த குட்டி வால் பையனும் அவனது முளிக்கண்ணும் இன்னும் உருட்டுது.

    எனக்கு அதிகம் பிடித்தது படத்தில் வரும் எல்லோரும் பாசத்துக்கு தலைவணங்குவது. படம் முடிகையில் எந்த பாத்திரமும் மனதில் வெறுப்பை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சந்தோசம். 

    மொத்தத்தில் என்னை இந்த திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஒரே சீட்டில் உட்கார வைத்தது. உடனடியாக திரைவிமர்சனம் எழுதவும் வைத்தது. குறைகள் என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை.. ஆனாலும் சில இடங்களில் காட்சிகளின் தளர்வை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் தெய்வ திருமகள் பொறுமையுடன் பார்த்தால் பொக்கிஷம்.
    *****

    Post Comment

    24 comments:

    Unknown said...

    :)

    ஷஹன்ஷா said...

    சுடச்சுட பதிவு போட்டதுக்கு நன்றி...

    இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை துாண்டி விட்டீர்கள்..நன்றி..

    Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

    விமர்சனத்திற்கு தேங்க்ஸ்.

    ஜயந்தன் said...

    விமர்சனம் சூப்பர் அப்பு ... அப்பிடியே இதையும் வாசியுங்க
    http://jayan0212.blogspot.com/2011/07/blog-post_15.html

    Thanansan said...

    Good film to see with Faily.
    In some places, Caamera made some mistakes.

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    இவ்வளவு விரைவாக விரிவாக விமர்சனம் நன்று...

    வந்தியத்தேவன் said...

    அப்போ கட்டாயம் பார்க்கவேண்டும் என்கின்றீர்கள்

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    விமர்சனம் அருமை, அதுவும் சுடச்சுட விமர்சனத்திற்கு நன்றி!

    Suda said...

    Good to watch dtm

    ...αηαη∂.... said...

    Hmmm.. I am Sam copy illaya ithu...

    parthipan said...

    கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து தெய்வத்திருமகள் படத்தின் மூலப்பிரதியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!!

    http://www.imdb.com/title/tt0277027/

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை..படத்தின் ஆரம்பம் அல்லது இறுதியிலோ போடப்படும் டைட்டில் மற்றும் எண்டு கார்டில் இது இந்த படத்தின் தழுவல் என்று ஏதாவது வருகிறதா...????

    முரளிகண்ணன் said...

    அனுஷ்காவைப் பற்றி ஒரு வரியும் இல்லையே?

    HajasreeN said...

    ellame nalla irukku

    maruthamooran said...

    உங்கட கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா!

    அதிகாலை 4 மணியளவில் இந்த விமர்சனத்தை படித்துவிட்டேன். ஆனாலும், சில ஆணி பிடுங்கல்களினால் உடனடியாக பின்னுர்ட்ட முடியவில்லை.

    அட எல்லாப்பயபுள்ளையும் தெய்வத்திருமகளைப் பற்றி புகழுறாங்கள். அப்ப படத்தை காசு கொடுத்து பாக்கத்தான் வேணுமோ?

    அப்ப சரி நாளைக்கு ஒரு 500 ரூபாக்கு ஆப்போ?!

    தேடுதல் said...

    அப்படியே சுடச்சுட I AM SAM என்கிற ஆங்கில படத்தையும் பார்த்துவிடுங்கள்.

    குறுக்காலபோவான் said...

    உங்களுடைய விமர்சனத்தில் பிடித்தது என்னவென்றால்...?
    "ஒரு சாக்லேட் தொலைக்காட்சியில் வேலை புரியும் மனநிலை குன்றிய கிருஷ்ணா...."
    இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்!
    இன்னும் எழுத வாழ்த்துக்கள்.

    ராம்ஜி_யாஹூ said...

    parthiban class man

    sinmajan said...

    உங்கள் வேகம் தான் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது போங்கள் ;-)

    Ashwin-WIN said...

    @குறுக்காலபோவான்
    //"ஒரு சாக்லேட் தொலைக்காட்சியில் வேலை புரியும் மனநிலை குன்றிய கிருஷ்ணா...." இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்! //
    ஹா ஹா சுட்டிக்காட்டியதுக்கு ரொம்ப நன்றி..

    Anonymous said...

    விமர்சனம் அருமை...

    சி.பி.செந்தில்குமார் said...

    குட் ரிவ்யூ

    ம.தி.சுதா said...

    மிகவும் நெருடலான படம் தான்.. அதிலும் பாத்திரத் தேர்வு சூப்பர்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    Rabbani said...

    சினிமா காரங்களை விட்டுத்தள்ளுங்க நல்ல கூர்ந்து கவனித்தால் ஏதாவது ஒரு மொழிபடத்த திருடியிருப்பார்கள் .

    உங்களின் விமர்சனம் அருமை எளிமையான சொல்நடை நல்ல பதிவு

    Sujiththa Ratheeswaran said...

    கண்ணாடிப்பூக்கள் படத்திற்கு பின் என்னை அழவைத்த திரக்காவியம் ”தெய்வத்திருமகள்”!!!!!

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner