• Saturday, May 29, 2010

    இந்திய அணி -அவமானம் , சிம்பாவே-அபாரம், இலங்கை-அவதானம்.

    இந்தியா ,இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் பங்குபெறும் முக்கோண கிரிக்கெட் தொடர் இன்று சிம்பாவேயில் ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா சிம்பாவே அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆறு விக்கெட்டுகளால் சிம்பாவே அணி இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு நல்லதோர் படிப்பினையை புகட்டியுள்ளது.



    இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையில் கார்த்திக்,முரளி விஜய்,விராத் ஹோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான்,ஜடேஜா ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையுடனும் IPL போட்டிகளில் அசத்திய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களாக வினய்குமார்,அசோக் டின்டா , அமித் மிர்சா,யாதவ் ஆகியோருடன் வழமையான இந்திய அணிக்கு எவ்விதத்திலும் குறையாத அணியாக களமிறங்க சிம்பாவே அணி தைபு தவிர்ந்த வழமையான அணியாக களமிறங்கியது.


    Monday, May 17, 2010

    தொடர்கதை.. நம் வாழ்க்கை.



    தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ அடுக்குமாடிக்கட்டடங்களும் ஆர்ப்பரிக்கும் மக்களும். இன்று அக்ஷயத்திருதியை வேறு பொன்  சேர்க்ககூடிவிட்டார் பலர். நடந்தபாதை எங்கும் முட்டியது தமிழ் மூச்சுக்கள்தான். மூச்சோடு மூர்ச்சிரைத்து அடங்கிவிட்டிருந்ததது என்மூச்சு. மகிழ்ச்சிக்கு குறைவில்லை போலும், இன்றும் கூட்டம் கூட்டமாய் வெட்டிப்பேச்சு வாயினில், வெள்ளைப்பூச்சு நெற்றியில்.

    வீதியோரத்தில் கரையொதுங்கிய பேருந்துகள் கடுகதிப்பயனத்துக்காய் தயார்நிலையில், நெடுதூரப்பயணம் இன்றுவரை நெருக்குவாரப்பயணம், உறங்கிய யாழ்தேவிக்காய் விழித்துக்கொண்ட தற்காலிக/நிரந்தர முகவர்கள் இந்த பேரூந்துகள். அவை சுற்றி ஆருடம் பேசும் அசகாயர்கள் சிலரும் ஆரியம் பேசும் வீரியர் பலரும். இவர்களில் ஒருவர் உள்நாட்டு அகதிகள் மற்றவர் உள்நாட்டு உல்லாசப்பயணிகள். ஏறெடுத்துப்பார்க்கிறார் என்னையும் ஏதோ எதிர் நாட்டார் போல. அத்துணையும் மனசுக்கு பழகிப்போன ஒன்று.. இன்று நேற்றல்லவே  இக்கதை..

    Tuesday, May 11, 2010

    எழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம்.

    அன்பு-விலங்குகள் கூட்டத்தில் காட்டுவது,மனிதன் தனிமையில் தேடுவது.

    "செய்வினும் சேரக்கூடும் சேர்ந்ததும் ஏப்பம்கொள்ளும்
    மறைந்ததும் மாளத்தூண்டும்-அன்பு."

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner