கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க இங்க கிளிக் பண்ணுங்கோ..
உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்
தோட்டாக்கள் தேடும்
செல்வாக்கின் அர்த்தம் புரியும்
சொல்வாக்கு மலிந்து போகும்
உனக்கும் தத்துவம் வரும்
ஒலிபெருக்கிகள் அதறக்கேட்டும்
உன் புகைப்படம் வைத்தே
பத்திரிகைகள் பல்லிளிக்கும்
வரிகள் எல்லாம் உன் பெயர் கொள்ளும்
அரசியல் செய்துபார்.
வீட்டுக்கும் ரோட்டுக்குமாய்
மெல்ல மெல்ல பொய்யை சொல்லி
தலையணை நனைப்பாய்
உறக்கத்திலும் பிரச்சாரம் செய்து
மூன்றுமுறை பேட்டி கொடுப்பாய்
முப்பதுமுறை வம்பிழுப்பாய்
தேர்தல்கள் வந்துவிட்டால்
மக்கள்தான் தெய்வம் என்பாய்
மக்கள்தான் தெய்வம் என்பாய்
ஆட்சியில் இருந்துவிட்டால்
நீயின்றி தெய்வமில்லை என்பாய்
நீயின்றி தெய்வமில்லை என்பாய்
ஒரு நாய் கூட கவனிக்காது
அனால் - ஊர் மதிலெல்லாம் சுவரொட்டி பதிப்பாய்
அதை கட்டாக்காலி மாடுகள் உண்டுவிட்டால்
அதையே படமெடுத்து உணவளித்த வள்ளல் என்பாய்
வீட்டுக்கும் ரோட்டுக்குமாய்
உருவமில்லா எதிரி ஒருவன்
துரத்தக்காண்பாய்
இந்த கொடிகள் இந்த கூட்டம் இந்த மேடை எல்லாம்
உன்னை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
கைக்காசு போட்டதை மறந்து
அரசியல் செய்துபார்.
கூட்டணிகள் அடிக்கடி இடம்மாறி சேரும்
பண்பலை வரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒளிபரப்பாகும்
தொலைக்காட்சி என்றுவிட்டால்
உன்முகம்தான் விளம்பரமாகும்
உன் நண்பனே கட்சி தாவி
உனக்கு அம்பு தொடுப்பான்
உனது ஊழல்களை எதிர்கட்சி கிழிக்கும்
எதிர்ப்புகள் நைல்நதியாய் பெருக்கெடுக்கும்
ஆதரவு தேடி ஆபிரிக்காவுக்கு படையெடுப்பாய்
வாக்குறுதிகள் சமுத்திரம் போல் தெளிக்கும்
பிறகு
சமுத்திரத்துள் வாக்குறுதிகள் அடங்கும்
அரசியல் செய்துபார்.
நீயே அடித்து ஒடுக்கியவனின்
காலில் விழுந்து விழுந்து
வழியவைக்க உன்னால் முடியுமா?
அகிம்சையை அரங்கத்திலும்
இம்சையை இருட்டிலும்
செய்ததுண்டா?
பிறர் அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்கு புகழ் பாட தெரியுமா?
சபையில் உண்மையாகவும்
உண்மையை சபையுள் மறைக்கவும்
உன்னால் முடியுமா?
அரை அடி தூரத்தில்
எதிரி இருந்தும்
அடக்கிகிடந்து பழகியதுண்டா?
அரசியல் செய்துபார்.
மெல்ல மெல்ல பொய்யை சொல்லி
மேலுயர முடியுமே
அதற்காகவேணும்..
புலன் விசாரணைகளை முடக்கி
புது நீதி எழுத முடியுமே
அதற்காகவேணும்..
ஆட்சி என்ற ஒன்றுக்கும்
வாக்கு என்ற ஒன்றுக்கும்
சட்டத்தில் ஏறாது
சாகசங்கள் செய்யவேனும்..
வாழ்ந்துகொண்டே
வசை தேடவும் முடியுமே
பிறர்
செத்துக்கண்டே
வாழவும் முடியுமே
அதற்காகவேணும்..
அரசியல் செய்துபார்.
சக கட்சிகள்
நிபந்தனை வைத்தாலும்
பத்திரிகைகள் குட்டுடைத்தாலும்
விழித்துப்பார்க்கையில்
உன் வலதுகை விலை போயிருந்தாலும்
ஒரே மேடையில்
இரு வேட்பாளர்கள்
சிக்கனப்பிரச்சாரம் செய்தாலும்
நீ பணம் கொடுத்த அவனோ அவளோ
உனக்கு வாக்களிக்க மறந்தாலும்
அரசியல் செய்துபார்
சொர்க்கம் - நரகம்
இரண்டில் இரண்டாவது
இங்கேயே நிச்சயம்
அரசியல் செய்துபார்.
****
வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாத்தி எழுதினதுக்கு பிறகு நாமளும் பண்ணலாமே எண்டு பண்ணினதுதான் இது. சாரி வைரமுத்து சார். ஏதாவது வழக்கு போடுறண்டால் என்ன மட்டும் மாட்டி விட்டுடாதீங்க. இவங்களையும் சேர்த்து போடுங்க.

****
வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாத்தி எழுதினதுக்கு பிறகு நாமளும் பண்ணலாமே எண்டு பண்ணினதுதான் இது. சாரி வைரமுத்து சார். ஏதாவது வழக்கு போடுறண்டால் என்ன மட்டும் மாட்டி விட்டுடாதீங்க. இவங்களையும் சேர்த்து போடுங்க.
லோஷன் அண்ணா-பெயில் பண்ணிப்பார்
19 comments:
நல்லா இருக்குடா.
super podu fro the people cheat makkal
நன்றி ஆ ஆ ஆதிரை அண்ணா..
//ஒரு நாய் கூட கவனிக்காது
அனால் - ஊர் மதிலெல்லாம் சுவரொட்டி பதிப்பாய்
அதை கட்டாக்காலி மாடுகள் உண்டுவிட்டால்
அதையே படமெடுத்து உணவளித்த வள்ளல் என்பாய்//
nalla varikal. pala unmaikal solluthu..
அருமை அருமை அருமை
//ஒரே மேடையில்
இரு வேட்பாளர்கள்
சிக்கனப்பிரச்சாரம் செய்தாலும்//
itz very suitable one in nw situation.. ashwin say the names of the two candidates.
காதலித்து பார் எனும் வைரமுத்துவின் வரிகள் போல வித்தியாசமான இலகுவான சிந்தனை….நன்று,….முயற்சி தொடர வாழ்த்துகள்….:)))
நன்றி கருணையூரான்
என்னை பிரச்சனையில மாட்டிவிட்டிடாதீங்க சுரேந்தர்.
@கொற்றவை// நான் எதோ சொல்லாமகொல்லாம வைரமுத்துவின் கவிதைய உல்டா பண்ணினமாதிரியும் அத நீங்க சொல்லி காட்டுற மாதிரியுமெல்லோ இருக்கு. இதுக்குதான்மா முதலே எல்லாம் விபரமா சொல்லிடு போட்டிருக்கம்.
:))
நல்லாயிருக்கு
இது தானே வேணாங்கிறது…ஏதோ பாவம் பெடியன் கஷ்டப்பட்டு (இல்லாத) மூளைய எல்லாம் பாவிச்சு எழுதியிருக்கே எண்டு சொன்னா சும்மா என்னை வம்புக்கு இழுக்குது….வைரமுத்து வாசிக்க மாட்டார் எண்ட தைரியம் தான் உங்களுக்கெல்லாம்….ஆனா உண்மையா நல்லா இருக்கு எண்டு தான் நான் சொன்னனான்…
@Subankan said..
நன்றிண்ணா.. ஏன்னா கொஞ்ச நாளா உங்க பதிவுகள காணோம்? எக்ஸாம் முடிஞ்ச கையோடதான் பதிவு போடுவியளோ?
@கொற்றவை said...
அக்கா (கா)வாயை தேவைல்லாம கிளறிவிட்டுடனோ..?
அடடே...
நல்லா இருக்கே....
அடடே கனகோபி வாங்க. ரொம்ப நன்றி..
அரசியல் காலில் படிந்த சாக்கடை
கழுவினாலும் அழுகிய மனம் கரைந்து செல்லாது
அரசியல் காக்கையின் எச்சம்
யார் தலையிலும் எப்போது வேண்டும் என்றாலும் விழும்
அரசியல் கொள்ளயர்க்கு சொர்க்க வாசல்
வறியவர்க்கு மரண வாசல்
அஷ்வின் உமது கவிதை
உண்மைகளின் உறைவிடம்
எடுத்துக் காட்டும் திறப்பிடம்
மென்மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.
@Sivanayani. said...
thanx madam.
நன்றாக இருக்கிறது. நானும் இதே மாதிரி ஒன்று எழுதி இருக்கிறேன், நேரம் இருந்தால் படிக்கவும்.
http://vsinthuka.blogspot.com/2009/10/hostel.html
@சிந்து..
பதிவில கீழ உங்க பேரையும் போடல எண்டதுக்கு இப்டி நாசூக்கா சண்ட பிடிக்கிறீங்களோ ?
மாட்டி விடாத வரைக்கும் சந்தோசம் தான்
Plagiarism என்று சொல்லாமல் விட்டீங்களே.
நல்ல கற்பனை..
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...