• Saturday, September 25, 2010

  வாங்க கிரிக்கட் விளையாடலாம்- சீரியஸ்நேர காமெடி பதிவு

  தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...
  .
  .

  .

  ****************************************************************************************************
  O/L படிப்பு முடிந்துவிட்டதா ?  அடுத்தது என்ன ? கவலைப்படாதீர்கள்.... உங்களுக்காகவே ஓர் அரிய வாய்ப்பு .. பாகிஸ்தான் அணிக்காக உலகக்கிண்ணம் விளையாடுவோம்..

  ***************************************************************************************************
  உலகக்கிண்ணம் விளையாடுவோம்
  1:: நீங்கள் நன்கு தேறிய அல்லது சோறிய  உடல்வாகும், நன்கு கூரிய பற்களும் உடையவரா? சிறுவயதில் கொய்யாபழத்தின் வெளித்தோலை கடித்து துப்பிவிட்டு கமக்கமாக சாப்பிட்ட அனுபவமுண்டா?
  .
  .
  2:: தலைமயிர் நீட்டாகவும் 8 - 12 அங்குலம் அளவில் வளர்ந்திருக்கிறதா அல்லது வளரக்கூடிய  சாத்தியப்பாடுகள்  தெரிகிறதா?
  .
  .
  3::ஹிடன் காமேராகளில் மண்ணைதூவிவிட்டு சுப்பர் மார்க்கட்டுகளில் சுட்ட அனுபவமுண்டோ?
  .
  .
  4:: சோடா மூடி மற்றும் பிளேட் கைக்குள் மறைத்து கையாள தெரியுமா?
  .
  .
  5:: கிரிக்கட் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.. ஓரளவுக்கு பந்து பிடிக்க பட்டிங் பண்ண தெரிந்தால் போதும்..
  .
  .
  6:: நேர்த்தியாக நோ-பால் போட்ட அனுபவமுண்டா...
  .
  .
  7:: அணிக்காக நூறில் ஒரு போட்டியிலாவது சின்சயரா விளையாடவோ விளையாடுரமாதிரி நடிக்கவோ  முடியுமா?
  .
  .
  8:: அணியில் இடம் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அணிக்காக நேரடி மற்றும் மறைமுக தூதராக தொழிற்பட சம்மதமா?
  .
  .
  9:: வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் செல்லும்போது மேலதிக நிறையில் உள்நாட்டு சரக்குகளை எடுத்து செல்ல வேண்டும். அதன் மூலம் வரும் வருமானத்தில் பங்கு தரப்படும்.  
  .
  .
  10:: தேவை ஏற்படின் விமான நிலைய பின்புற வாசலை பயன்படுத்தும் அறிவு இருக்கவேண்டும்.. அது பற்றிய போதிய அறிவில்லாதோற்கு பிரபல  இந்திய கிரிக்கட் வீரர்களால் மூன்றுமாத பயிற்சி வகுப்பு நடாத்தப்படும்.
  .
  .
  11:: முகவர்கள் தரகர்களிடம் எவ்வளவு பணம் வேண்டுமானால் பெறலாம் பெறும்  பணத்தில் 25 % கிரிக்கட் கட்டுபாட்டு சபைக்கு சன்மானமாக தரவேண்டும்.
  .
  .
  12:: முக்கியமாக தெரிவு செய்யப்படுவோர் இந்திய, பிற அணி வீரர்களுடன் சிரித்துப்பேசகூடாது.
  .
  .
  13:: எந்த மதமாகவும் இருக்கலாம் ஆனால் அணியில் நிரந்தர இடம் மற்றும் உயர் பதவிகளை பெற எந்நேரத்திலும் மதம் மாற தயாராக இருக்க வேண்டும்.


  14:: Msc in suranding ball & reverse swing அல்லது அதற்கு நிகரான தகமைச்சான்றிதழ்களுக்கு முதலிடம்.
  .
  .
  15:: ஒவ்வொருவருக்கும் தவணை அடிப்படையில் அணித்தலைவர் பதவி மற்றும் அணியிலிருந்து நீக்கப்படின் பயிற்சியாளர் பதவி நிச்சயம்.. யாரும் அடம்பிடிக்கப்படாது.
  சும்மா சும்மா ரூம் போட்டு குர்ரான் மேல எல்லாம் சத்தியம் பண்ண கூடாது.
  .
  .
  மேற்படி தகுதிகள் உங்களிடம் காணப்பட்டால் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புங்கள்... நீங்கள் தவணை முறையில் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்.
  .
  .
  உலகக்கிண்ணம் வெல்வோம் போட்டி எண்-11
  த.பெ.இல. 000000
  பாகிஸ்தான் கிரிக்கட் சபை
  மேல்மாடி,
  சோடாமூடிதெரு,
  பாகிஸ்தான் பஸ் ஸ்டாண்ட்,
  பாகிஸ்தான்.
  chief _occupant @skotlandyard .com

  .

  Post Comment

  5 comments:

  sathyaseelan said...

  'ஒரு போட்டியிலாவது சின்சயரா விளையாடவோ' இந்த தகுதி மட்டும் என்னிடமில்லை. மற்றும்படி எல்லாம் இருக்கு. நான் தகுதியானவனா? -sajirathan-

  ம.தி.சுதா said...

  கலக்கீட்டே சந்தரு.. அப்படியே மெயில் அட கொடுத்தால் இன்னும் சுகம்... எனக்க தகுதியிருக்கா ஏனெனில் நான் கறுப்பு... பதில் சொல்லாவிடில் உங்கட போட்டுக்கு கல்லெறி விழும்...

  கக்கு - மாணிக்கம் said...

  கடைசியில் அந்த அட்ரஸ் படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
  நல்லா இருக்கு.
  --

  Ashwin-WIN said...

  நன்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்
  @ சஜிரதன்
  நீங்க சின்சயர விளையாட்டயும் சின்சயரா விளையாடுரமாதிரி நடிச்சா போதும்.

  @மதி சுதா
  உங்களுக்காக மெயில் முகவரியும் கொடுத்திருக்கேன் மேலே.
  அத்தோடு உங்க கேள்விக்கு பதில் "PASS"

  மைந்தன் சிவா said...

  நல்லா இருக்கு பாஸ் உங்க காமெடி..
  track 'எ விட்டுடாதீங்க!!

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner