• Tuesday, June 26, 2012

    காவியா - கனவுகளோடு (பாகம் 1)


    காதல் வானம் 
    கனவுகளின் கோட்டை மீது 
    கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில் 
    பறந்துவிட துடிக்குது
    ஆயிரம் பறவைகள்
    நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு 
    விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
    காதலித்து வா.. 
    கணம் கணம் காதலித்து வா..

    ம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா ?? என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு  உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா.. 
    போயிடாதன்னு மூளை ஆயிரம் தடவை அடிச்சு சொல்லிச்சு.. கேட்டுச்சா இந்த பாழாப்போன மனசு. இப்போ உன் வீட்டு வாசல் வரைக்கும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு.. யாராச்சும் என்ன பாத்து யார்னு கேட்டா என்னடி சொல்லுவன்???

    ''அங்கிள்... அங்கிள்..யார் நீங்க? யாருக்காக வெயிட் பண்றீங்க'' இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகளின் சிரிப்பொலி அவன் சிந்தனையை குழப்பியது.. சற்று நிதானத்துக்கு வந்தவனாய்..

    ''இல்ல.. காவியா.. காவியா அக்காவ பாக்க வந்தனான்''

    ''ஒவ்ஹ்..நீங்க காவியா அக்காடா ப்ரெண்ட்டா. வாங்க அங்கிள் உள்ள.. அக்கா மேக்கப் பண்ணிடிருக்கா''

    ''இல்ல.. நான் காவியாட..... ஆமா ப்ரெண்ட்தான்.. இந்த கிப்ட கொஞ்சம் காவியா அக்காட்ட குடுத்திடுறீங்களா குட்டீஸ்''

    ''நீங்கதானே ப்ரெண்ட் நீங்களே குடுத்திடுங்களேன்..ஹ ஹா..''

    ''இல்லமா.. அங்கிளுக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. ப்ளீஸ் சமத்து பிள்ளைங்க இல்ல.. குடுத்திடுங்க''

    ''அங்கிள பாக்க பாவமா இருக்குடா நாமளே குடுத்திடலாம்..ஹ ஹா..''

    ''ஆமா ஆமா சிம்புட அப்பா மாதிரியே தாடிவெச்சிட்டு பாவமா இருக்கார்.''

    ''ஹா ஹா ஹா ஹ்ஹா''

    ''குடுங்க அங்கிள் நாங்க குடுத்திடுறம்''

    ம்ம் என் நிலைமை இப்படி காமடியா போச்சுல்ல.. ''இந்தாங்க அக்கா கையிலேயே கொடுத்திடனும்.. ஓகேயா.''

    ''ஓகே அங்கிள்''

    ரெண்டு வாலுகளும் பரிசை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார்கள்.

    ''ஏய் நிவே நாம கொஞ்சம் விளையாடிட்டு அப்புறமா அக்காட்ட போகலாம்டி'' 
    ''இல்லடா .. டிரெஸ் எல்லாம் அழுக்காயிடும்.. அம்மா திட்டுவா''
    ''போடி இவ பெரிய ஐஸ்வர்யாராய்.. அழுக்காயிடுவளாம்''
    ''போடா போடா போடா''
    ''சரி அப்போ அந்த கிப்ட பிரிச்சு பாக்கலாமா?''
    ''வேணாம்டா ஷோபி தப்பு.. அப்புறம் நான் அக்காட்ட சொல்லிடுவன் ஷோபிதான் பிரிச்சு பாத்தான் எண்டு''
    ''போடி நீ ஒண்ணுக்கும் சரிவர மாட்டாய். நான் வரல நீயே போய் குடு''
    ''டேய் ஷோபி வாயேன்டா..''
    ''மாட்டேன் போடி''
    ''வராட்டி நான் உன்ன கல்யாணம் கட்டிக்க மாட்டேன். அப்புறம் நீயும் அந்த அங்கிள் மாதிரி தாடி வளர்த்திட்டு திரிவாய்..''
    ''ஹி ஹி எனக்குதான் தாடி வளராதே..''
    ''நான் விட்டுட்டு போனா உனக்கு வளரும்''
    ''உண்மையாவா??''
    ''ஆமா.. அப்போ நீ அசிங்கமா இருப்பாய்''
    ''நோ.. சீ.. நான் வாறேன்.. வாறேன்.. ஆனா நீ என்ன கட்டிக்கணும்''
    ''ஒகேடா ஷோபி குட்டி''
    ''வா நிவே போலாம் அக்காட்ட''
    என்று ஒருவாராக காவியாவிற்கு கொடுக்கவேண்டிய பரிசையும், நம் கதையையும் எடுத்துக்கொண்டு ரெண்டு குட்டிக்காதலர்களும் காவியா இருந்த அறையை நோக்கி சென்றார்கள். 

    அங்கே காவியா முற்றாக அலங்கரிக்கப்பட்ட ரதியாக கட்டில் ஓரத்தில் தன் அழகை தானே கண்ணாடியில் பார்த்து ரசித்தவாறு உட்கார்ந்திருந்தாள். ஆனாலும் அவளால் சும்மா இருக்கமுடியவில்லை.. கைவளையலை சரிபார்ப்பதும், கேசத்தை பார்த்து பார்த்து சரிசெய்வதுமாய் சற்று பரபரப்பாகவே இருந்தாள்.. உண்மையில் கல்யாணக்களை குடிகொண்டது அவள் முகத்தில்.. வேறெந்த சலனமும் சலசலப்பும் அவள் முகத்தில் இல்லை. இதேவேளை இங்கு வந்து சேர்கிறார்கள் குட்டிகள்...

    ''அக்கா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நான் உங்களையே கட்டிகவா.''

    ''டேய் ஷோபி உன்ன கொன்னுடுவண்டா''

    ''போடி போடி.. ''

    ''போடா போடா''

    ''ஹா ஹா.. ஷோபி நிவே ரெண்டு பேரும் இங்க வாங்க... என்ன கிப்ட் இது.. யாரு குடுத்தாங்க''

    ''ஒரு அங்கிள் குடுத்தார் அக்கா''
    ''உங்க ப்ரெண்டாம்"

    அஹ் யாரது யாரா இருக்கும்.. இங்க குடுங்க பாக்கலாம்..

    ''நிவே வாடி நாங்க போய் விளாடுவம்.. ''
    ''ம்ம் வா..'' 

    இரு சுட்டிகளும் அவ்விடத்தை விட்டு விலக அந்த கிப்ட்டை கொடுத்தது யார் என்று அறியும் ஆவல் அவளை தூண்டியது.. கிப்டை தனது அருகே கட்டிலில் வைத்து சுழற்றி சுழற்றி பார்த்தாள்.. கொடுத்தவர் பெயர் ஒன்றும் இல்லை.. ஆனால் அவள் மேற்கொண்ட ஆர்வம் அதை பிரிக்க தூண்டியது.. ஒட்டப்பட்டிருந்த வர்ணகடதாசியை கவனமாக பிரித்தாள். உள்ளே ஓர் வாழ்த்து அட்டை.. மெதுவாய் கையில் எடுத்து திறந்தாள்....

    காதல் வானம் 
    கனவுகளின் கோட்டை மீது 
    கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில் 
    பறந்துவிட துடிக்குது
    ஆயிரம் பறவைகள்
    நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு 
    விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
    காதலித்து வா.. 
    கணம் கணம் காதலித்து வா..
    இப்படிக்கு 
    அஷ்வின்.

    அவள் முகத்தில் திடீர் மாற்றம்.. புதிய உணர்வுகள் அடையாளம் காணமுடியாதவைகளாய் குடிகொண்டது..
    ''என்ன அஷ்வினா..? அஷ்வின் வந்திருந்தானா.. அப்போ ஏன் என்ன பாக்க வரல.. அஷ்வின் நீ... நீ.. வந்திருந்தியாடா..ஏன் இப்டி எழுதியிருக்கான்.. அப்டீன்னா...'' இப்போது அவள் கண்கள் ஈரமாகியது. முகப்பூச்சையும் தாண்டி ஆயிரம் உணர்வுகள் அலைமோதி வெளிப்பட்டன..
    ''இவ்வளவு தூரம் வந்தும் என்னை பார்க்காம போயிருக்கிறாய் இல்ல.. அவ்வளவு திமிராடா உனக்கு.. அந்தளவுக்கு உன்னோட இதயம் கல்லா போயிட்டுதாடா அஷ்வின்.. உன் ஞாபகம் இல்லாமதானேடா இருந்தன்.. இப்போ ஏண்டா ஏன் வந்தாய்.. அஷ்வின்....'' 
    முதல் துளி கண்ணை விட்டு எட்டிப்பார்த்தது.. உடனே அவள் கை அதை பாய்ந்து சென்று துடைத்துக்கொண்டு...
    ''நான் அழமாட்டேன்.. அழமாட்டேன்.. போடா உனக்கே அவ்வளவு திமிர் எண்டா...நான் மட்டும் அழுதிடுவனா.. அழமாட்டேன்.. அழமாட்டேன்.. ஆனா... அஷ்வின்... என்னால முடியலடா... ஏன்டா.. ஏன்....'''

    ''காவியா........................'' சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்... அங்கே..........
    காவியா மலர்வாள்...........



    என்னமோ தோணுறத எழுதுறன்.. உண்மைகளின் கலப்படம் இன்றிய கற்பனைகள் ஊறிய ஒரு தொடர்கதை முயற்சி.. உங்கள் கருத்துகள் இதை மேலும் செப்பனிடும்..
    அஷ்வின்

    Post Comment

    2 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner