• Tuesday, June 26, 2012

    காவியா - கனவுகளோடு (பாகம் 1)


    காதல் வானம் 
    கனவுகளின் கோட்டை மீது 
    கம்பீரமாய் சிரிக்கிறது.. -இதில் 
    பறந்துவிட துடிக்குது
    ஆயிரம் பறவைகள்
    நீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு 
    விண்ணப்பிப்பதாய் இருந்தால்..
    காதலித்து வா.. 
    கணம் கணம் காதலித்து வா..

    ம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா ?? என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு  உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா.. 

    Monday, June 13, 2011

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்

    நண்பர்களே கதையின் பாகம் ஒன்றை படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்துவரவும். இல்லாட்டி புரியாதுங்க மாட்டார்...பாகம்-1 க்கு

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா



    சங்கீதா வழமையப்போல அதே சிரிப்போட கதவை திறந்தாள். அதுதான் எப்பவும் எனக்கு போர்ன்வீட்டா. நான் செருப்ப கழற்றிட்டு உள்ள போகமுதல் அவள் சட்டென்று போய் என்கதிரையை எடுத்து வைத்து அங்கங்க சிந்தியிருந்த சாப்பாடு துண்டுகளை தட்டிவிடுவாள். அப்படி இருந்தும் ஒன்றிரண்டு துகழ்கள் காட்டிக்கொடுத்திடும். காலைச்சாப்பாட்டடை. அப்படித்தான் இன்றைக்கு ''பாண் சாப்பிட்டிருக்கிறியல் போல'' என்று கொஞ்சம் வாயை சுழித்துக்கொண்டு கேட்க பதிலாய் வந்த அந்த சிட்டுக்குருவிச்சிரிப்பை ரசித்தவாறே கதிரையில் அமர்ந்தேன்.

    Sunday, June 12, 2011

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா

    காலி வீதியில் புயல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்னுடைய சைக்கிள்.   அப்பாவிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளையின் கால்களைப்போல் என்கால்கள் சைக்கிள் மிதியை மாறிமாறி உதைக்கின்றன. என்னால் பக்கத்தில் சீறிக்கொண்டுவரும் வண்டிகளைக்கூட கவனிக்கமுடியவில்லை. தொண்நூற்றாறில் கிபிர் வருகுதெண்டு அம்மாண்ட சீலைய பிடிச்சுக்கொண்டு பங்கருக்குள் ஓடியதுக்குப்பின் இன்றுதான் இவ்வளவு வேகமாக என்கால்கள் ஓட்டம்கொள்கிறது. 

    Sunday, June 5, 2011

    விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)

    எனக்கு உண்மையில் அந்த நாட்கள் மறந்துதான் போயிருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு வருடங்களில் அந்த ஞாபகம் வந்ததே இல்லை. நிம்மதியாய்த்தான் இருந்தேன். ஆனால் இன்று மீண்டும் அழைப்பு ஒரு நண்பனிடமிருந்து. இரவு ஒரு பார்டி இருக்குது வாடா என்றான் தொலைபேசி வாயிலாக. பார்டி என்றால் பலதும் பத்தும் இருக்கும் இருந்தாலும் நல்ல சாப்பாடு இருக்குமே என்பதால் அவனுடன் சென்றேன். அங்குதான் மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்தது. என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை அவள்தானோ என்று. பெயர்கூட மறந்திருந்தது. ஒருவேளை இது அவள் சகோதரியாய் கூட இருந்திருக்கலாம். இருந்தும் அந்த கட்டுடல் , அதே கலர் சொன்னது இது அவளேதான்...

    Saturday, November 27, 2010

    சீதாவை தேடி..

    அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்..  கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner