
கவிஞனின் கவிஞன் நீ
கலைத்தாயின் கடைக்குட்டி
கலைத்தாயின் கடைக்குட்டி
கறைபடியா வர்ணமேகிய
புரையோடும் தமிழன் நீ
புரையோடும் தமிழன் நீ
தென்றலில் தேனெடுத்து
அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
மன்றமும் மாநாடும் நாடும்
கவியோடும் கலைக்கடல் நீ
கவியோடும் கலைக்கடல் நீ
இளைஞனின் காதலியும்
முதுமையின் தடிக்கம்பும்
முதுமையின் தடிக்கம்பும்
உன் கவிதைதானே மறைத்தமிழா!
கண்களால் கவிவரைந்து
மிடுக்கென கொண்ட மீசை அபிநயம் போட
மிடுக்கென கொண்ட மீசை அபிநயம் போட
கம்பீர கணீர் மொழியில் நீ உரைத்தால்
உயிர் பெறாக்கவிதையும் உண்டோ!
உயிர் பெறாக்கவிதையும் உண்டோ!
ம்..உன்னை நான் பாடக்காரணம் தேடுகிறாயா??
"வாரணம் ஆயிரம் கொண்டான் வர்ணமே நான் கொண்டேன்."
உன் புகழ் நான் பாடின் உன்னொடு
என் வர்ணமும் அரியணையேகும்
என் வர்ணமும் அரியணையேகும்
என்றோர் நப்பாசைதான் என்றால் தப்பா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3 comments:
என்னவோ உள்குத்து இருக்கு.....
இதுல என்னையா உள்குத்து வெளிக்குத்து...?
அருமையாக இருக்கிறது...
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...