• Monday, October 12, 2009

    காதல்தானே செய்தேன்..!


    ஆதவா நீ போகும்போது
    என் நினைவில் கொஞ்சம் கடனாய் எடுத்துசெல்
    நினைவின் சுமைகள் நித்தம் என்னை நெருடிக்கொல்கிறதே
    கண்கள் தூங்கும் நேரம் மனம் தாண்டவம் ஆடிடுதே
    கண்கள் விழித்த நேரம் மனம் மண்ணுள் துயில்கிறதே
    உலகும் செய்த பாவம் பல ஊரார் செய்த பாவம்
    நிலவும் தேயும் நேரம் எனை நின்று கொள்கிறதே
    காதல்தானே செய்தேன் வேறு பாவம் என்ன செய்தேன்
    நீரும் காற்றும் தழுவும் வேளை நிலவும் மலரும் கொஞ்சும் வேளை
    நீயும் நானும் ஏனோ இல்லை நினைவால் கூட ஒன்றாய் இல்லை
    காதல் என்ற ஒன்று கேட்டது எல்லாம் தந்தது - இன்று
    கேட்காததையும் தந்ததே மனமும் வெந்ததே
    உறவுகள் எல்லாம் நீயாய் என் கூட இருந்து வந்தாய்
    வரவுகள் இன்றி செலவுகளாய் கண்ணீர் கணக்கு
    வரைந்து சென்றாய்-திருத்தி எழுத முடியவில்லை
    விருந்து தந்தவன் நீதானே விருந்தாய் தருகிறேன் என்னை
    உனக்கல்ல மண்ணுக்கு..
    ஆதவா நீ மறையும் போது என்னையும் எடுத்துச்செல் நிலவின் கண்களில் படமுதல்.

    Post Comment

    0 comments:

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner