
மதிமயங்கும் மாலை நேரம்
சிந்தனைக்கு சிறகுகொடுக்க ஒதுங்கினேன்
மாநகரின் ஆறாம் இலக்க சிறுநகர் கடற்கரை
கதிரவன் கதிர்சுருக்க மெல்ல மிளிர்ந்த தாழையின் தழுவலும்
நீலக்கடலின் நீளிசையும் சோலைக்குயிலின் செல்ல இசையும்
சிறுகால் சிறுதொட்டு பரதமாடும் சிறுநண்டு
அலைகள் தழுவும் பொன் மணல்மேடு
ஒருகணம் ..சிறு முனகல் ..
வந்த இடம் அறியேன் - புரிந்தது
பெயருக்கு ஆறறிவு செயலுக்கு மூன்றறிவு
ஆடையும் அறிவும் இரண்டாய் குறைந்ததே
ஆயுளையும் அரைமடங்காக்காதீர்.
நிலவென வர்ணித்தீர் பல கண்களை ரசிக்க வைத்தீர்
மேகங்களும் வருடப்பார்க்கிறது கவனம்.
பரஸ்பரம் அன்பு பரிமாரிநீர்
நிரந்தரம் இதுவென்று உரைப்பீரோ..!
சில உறவுகள் உள்ளத்து விளக்குப்போல்
உமக்குமட்டும் பார்வைக்குள்
குன்றிலிட வேண்டாம்....
2 comments:
வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணாமலையான்.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...