
சின்னஞ்சிறு மொட்டுக்கள்
சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

ஒற்றை மிட்டாயில்
ஒரு வாய் ஒருகடி
ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
மாலை நேரமல்ல
மஞ்சள் வெயில் மல்லுகட்டும் நேரத்திலும்
மணல் வீடு கட்டிய நம்கரங்கள்- தடயங்களாய் பதிந்துவிட்ட உன் மென் பாத சந்தன சுகந்தத்தை
மணல்படிந்த அலைகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
ரெட்டை பின்னலில்
ரிபன்களோடு சேர்ந்து முடிந்துவிட்ட நம் பாசம்-தினமும்
ரீங்கரித்துகொண்டிருகிறது - இடைவிடாது கண்களில் உந்தன் நினைவுகள்
ரணங்களாய் வருடுகிறதே உஸ்ணம் இன்றும் குறையவில்லை
எங்கள் நினைவுகளில்
ஏதுமில்லை அன்று யாரும் இல்லை அன்று
எல்லாம் நாமாக ஒரு கற்பனை-உணவோ.உடையோ. ஊரோ. உறவோ..
எண்ணத்தில் ஏதுமில்லை - மறந்திருந்தோம் நீ மட்டும் நினைவுக்குள்
கள்ளச்சிரிப்பு
கன்னத்து சின்னக்குழி
கவிழ்ந்ததும் அதில்தானோ..மீளவும் எண்ணவில்லை.
கணங்களை இமைதழுவும் நேரமெல்லாம்
கனிகிறது உன் நினைவு-காரணம் ஏன்தானோ..
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...