


நானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்
என்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி
பரஸ்பரம் பாடிக்கொன்டார்கள்.
ஏக்கத்தொனிக்கு விடைகொடுத்ததென்னவோ
தொலைபேசி மணிதான்..
மாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.
பொறுங்க இன்னும் கொஞ்ச நேரம் கதைக்கலாம் என்ற நிலைக்கு மாற்றியது.
தொலை தூரம் சில பொய்கள்
பலமணிகள் சில கதைகள்
பறந்தது தூக்கமும் பாக்கெட் மணியும்
'அ'விலே தொடங்கிய கதை
உயிர்கண்டு மெய்கண்டு - இணைந்த
உயிர்மெய்யையும் தொட்டுவிட்டது
இன்னமும் முகம் பார்க்கவில்லை.
கண்ணாடியில் முகம் பார்த்தாலே பின்னாடியிருக்கும்
பாதரசம் அழும் நிலைதான் இருவருக்கும்,
ஆனா நினைப்புகள் என்னவோ மலைக்கோட்டைகள்.
தொலைபேசி உறவுக்கு பெயரும்
தேடிக்கண்டு வைத்தாகிவிட்டது-காதலாம்
இன்று இவர்கள் சந்திக்கப்போகிறார்கள்
இது காதலா,ஊடலா இல்லை வெறும் கூதலா
விடைகான ஆவலாய் நான்.
2 comments:
அருமை அருமை....அனுபவவோ....??
//கண்ணாடியில் முகம் பார்த்தாலே பின்னாடியிருக்கும்
பாதரசம் அழும் நிலைதான் இருவருக்கும்//
பல பேர் உணர வேண்டியது
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...