
கண்கள் ஒருகதை சொல்ல
கன்னம் பலரகம் கொள்ள
நெஞ்சம் நீதான் வேண்டும் என்றதே
கொஞ்சம் எனைக்கண்டு நீ செல்லடி
உன் ஓரப்பார்வை விழியில்தான்
என் இதயம் துடிக்குது அன்பே
நேரே உன்னை கண்டால் போதும்
ஜூன்மாதம்கூட குளிரும்.
உந்தன் இரவில்
நான் பக்கம் வேண்டாம்
உன் படுக்கை அறையின்
ஜன்னல் ஓரத்தில்
காற்றின் வேகத்தில்
மெல்ல அசையும்
வானவில்லின்
வர்ணம் பூசிய நகங்கள்
நகங்கள் தவழும் விரல்கள்
விரல்கள் கோதும் கூந்தல்
உன் கூந்தல் மோதியபூக்கள் அதை

சூடிக்கொண்டால் என் உயிரும்கூட உலகைமறந்துபோகும்.
கிளிகள் கொஞ்சும் நிலவே
கிளியோபெட்ற உன் நகலே
வழிகள் எங்கும் உனக்காய்
விழியும் மூடா விரதம் இருந்து
அழகே உன்னைச்சரண் அடைவேன்.
2 comments:
போப்பா, நீ சரனடஞ்சா நான் எங்க போறது?.
அப்போ வாங்கோ ஒட்டுமொத்தமா போய் சரணடைவம். :)
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...