
பணியாரம் வச்சுருக்கன்
வாங்கமச்சான் ருசி பார்க்க
கலர் கலரா பார்த்த உனக்கு
நான் கூட கசக்குறேனா?
கம்மாயில தண்ணி பாயுது
தனிப்புல்லு தண்ணி தேடுது
கவிழ்ந்த மனம் விழுந்த இடத்தில்
கண்ணுக்குள்ள உன்னை வச்சு
காப்பாத்துவான் வாங்க மச்சான்
தண்ணி தேடும் வாழைகளை நம்பி
பசுந்தென்னை ஒன்றை தவிக்க விட்டாய்
உன்னை நீ உணர்ந்துகொண்டு
உள்ளதெல்லாம் விட்டுவாயா
உன்னை கண்டதால் மலர்ந்த பூ இன்று
கனியாகி கன்றானதே!
கன்றில் கனி காய்க்கும் முன்னாவது
கண்டுவிட்டு செல்லு மச்சான்
பட்ட மரம் என்னை குப்பிடுது - நீ
நட்ட மரம் தத்தளிக்குது
மண்மணத்தை நான் மணக்கும் முன்
பெண் மனத்தை உணர்ந்து வாயா
புதைத்த இடத்தில் புல் முளைத்தாலும்
புல் விளிம்பில் என் கண்ணீர் வடியும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...