
உனக்காக...
காத்திருந்த தவிப்புக்கள்
இதயவாசலில்
உளறாத வார்த்தைகளாய்-இன்னும்
உள்ளத்தில் உறைந்துகிடக்கிறது
இதயவாசலில்
புகுந்திடும் குருதியிலும்
உன்னைத்தேடிய துடிப்புகளின் எதிரொலி
தலையனையோடு கதை பேசி
கழியும் காலங்களில்
கழியும் காலங்களில்
உணர்வுகளின் உஷ்ணம் தாங்காமல்
தலையணையும் வியர்த்துக்கொள்கிறது.
நிலவோடு உறவாட வேண்டும்
நட்சத்திரங்களோடு சிரித்துக்கொள்ள வேண்டும்
பூக்களோடும் தேநீக்களோடும்
பல கதை பேசவேண்டும்
பல கதை பேசவேண்டும்
நிலவு தூங்கயில்தான் தூங்கவேண்டும்
ஆதவன் விழிக்கயில்தான் விழிக்கவேண்டும்
ஆதவன் விழிக்கயில்தான் விழிக்கவேண்டும்
அப்பப்பா..! எத்தனை ஆசைகள்
எங்கிருந்தோ ஒட்டிக்கொண்டது
எங்கிருந்தோ ஒட்டிக்கொண்டது
ம்ம். அடடா.! நிலவுவரும் நேரம்
நெருங்கிவிட்டதோ-அதனால்தான்
அல்லிப்பூவில் இத்தனை அவசர மாற்றங்கள்....
நெருங்கிவிட்டதோ-அதனால்தான்
அல்லிப்பூவில் இத்தனை அவசர மாற்றங்கள்....
காத்திருக்கிறேன்....
அல்லி மலராக நானும்..
நிலவு வரும்வரை பூக்கவும் மாட்டேன் வாடவும் மாட்டேன்..
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...