ஆராரோ ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு
அன்னையவள் கண்முன்னே
கண்ணுறங்கு கண்மணியே
தாயழுது.. நானழுது.. ஊரழுது.. உறவழுது..
நாய்கூட இரங்கவில்லை சேயழுது இரங்கிடுமோ செல்வமகனே! 

கண்ணுண்டு கருணையில்லை
பெண்ணுண்டு தாய்மையில்லை
உறவொன்று அங்கு உண்டு
உனக்கென்று நான் உள்ளேன் எனக்கென்று நீயுள்ளாய்
நமக்கென்று சொல்ல கணை ஒன்று உண்டு கண்வளராய்!
ஊரழிந்து உறவழிந்து
உற்றார் உடல்சிதைந்து
உதிரம் தடயம் சொல்லும்
செம்மண்ணும் புதுச்செம்மணியும்
காலடியில் காலனும் நிதியில்லா கருணையும்
செல்மாரி பொழிவர்ணனும் கல்வாரி கண்ணுக்கும் உதிரம்தான் கண்மணியே!
இடித்துரைப்பார் எவருமில்லை
இனிதுரைப்பார் இழிவுகட்கு
கடிதென்று உரைக்கின்றேன்
கனவுகளை களைந்தெறிந்து-அங்கு
கொடியவன் கையினில் மடியவும் வேண்டாமே
விடியலும் இனியுண்டோ விடமுண்டு கண்வளராய் கண்மணியே!
1 comments:
nice one ashwin. it is amazing.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...