
பிறக்கும் போதே தோளில் சுமைகள்
சோதனை நிறைந்த வாழ்க்கையடா!
இன்பமும் இன்னலும் இடையிடையே,
இணைந்து கலந்த வாழ்க்கையடா!
கடமையும் கடனும் கட்டவிழ்ந்ததால்,
என் சுதந்திரம் இங்கு தொலையுதடா!
கனவுகள் எல்லாம் கரைபுரண்டதால்
கல்லும் வயதில் வந்த காதலால்,
கடமைகள் தவறிட பார்குதடா!
ஒப்பந்தங்களும்,நிர்ப்பந்தங்களும் சேர்ந்து
மன மந்தம் காண வைக்குதடா!
கண்டதை திரும்ப காண துடிக்கும் மனதும்,
கண்டத்தில் நுழைந்து கலவரம் செய்ய எண்ணும் தாகமும் -எனை
கண்டதுண்டமாக்குதடா!
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...