
காதலே நீ எங்கு சென்றாய்..?
உயிர்தாகத்தின் கேள்வியாய்
உறவுகள் பதித்த தடயத்திலேயே
மீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.
போகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.
காதல் ஒரு அழகிய கொடிதான்
தேன் எடுக்கும் நேரத்தில் கொடியே ஆட்டம் காண்கிறது.
நீர்ளர்த்த உறவின் உள்ளம் உறைந்துவிட்டதா..!
காதலை புதுப்பிக்க கனவுகளை
பட்டை தீட்டி அபயம் தேடி கரம் நீட்டும் போதெல்லாம்
உன் அழகிய வார்த்தை யாலத்தால்
அளவளாவி என்னை மூச்சடைக்க
செய்கிறாயே..! வாய்பொத்தி நிற்கிறேன்..
ஆறுதல் சொல்வதிலும் வார்த்தையில் வல்லமை காட்டுவதிலும்
பாரதியை வென்றிடுவாய், என்னையோ
ஒவ்வொரு படையெடுப்பிலும் தோற்கடிக்கிறாய்.
ஒன்றை உணர்ந்திடு உன்னை
நான் மாற்ற விரும்பவில்லை
அப்படியே ஏற்றுக்கொள்ளவே நினைக்கிறேன்.
நெருங்கிடு..
ஊருக்கு உபதேசம் உள்ளத்துக்கு வேண்டாமடி வேஷம்.
ருசிக்கும் போது புளியம்பழம் என்று தெரிந்துதானே சுவைத்தாய்
இப்போது புளிக்கிறதென தூக்கி எறிந்துவிட்டாயே..!
என்ன செய்ய..?
கடைசி வரை எனக்கு நீ எட்டியும் எட்டாத பழமோ..!
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...