
பெண்களில் நோக பெரியவன் நானும்மில்லை
பட்டதும் நானில்லை
பட்டினத்தார் வம்சமும் சேரவில்லை
சுட்டதும் என்னையல்ல
குணம் பல காட்டி எனையாரும் மருட்டவும் இல்லை
பாரதி கண்ட கற்பனை புதுமைப்பெண் என்றால்
இவர்களுக்கு சாரதி பாகம் பொறுப்பேற்று நிதம் வெந்தது யாரோ..?
ஊழியத்தில் கொடும் ஊழியம் சீதனம் -இதன்
பிரயாண சாரதிகள் யார்தானோ..?
ஊடகத்தரகரும் யார்தானோ..?
கோடாலிக்காம்பு கதை கேள்விப்பட்டிருப்பீர்..
உண்மையான நிலவுகூட உலகுக்கு
ஒரு பக்கத்தைதான் காட்டிக்கொண்டிருக்கிறது
மறுபக்கம் அறிஞர்கள் சில பேர்க்கும்
ஞானிகட்கும் விஞ்ஞானிகட்கும்தான் வெளிச்சம்;
அவர்தான் மாநாடு வைக்க வேண்டும்.
சிறு தேனீ இவனுக்கு ரீங்கரிக்கத்தான் தெரியும்.
இதுவும் கால் போனபோக்கில் வந்த ஒரு உளறல்.

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...