இன்றைக்கு தந்தையர் தினம்.நண்பர்கள் அனைவருக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.. இன்று உங்கள் தந்தைக்கும் ஒருதடவை நேரிலோ, தொலைபேசியிலோ வாழ்த்திபாருங்கள். புதிய ஒரு உணர்வைத்தரும்...
மீண்டும் எனக்கொரு சந்தர்ப்பம் தராதா அது???
என் வீட்டு கதாநாயகனே நான்
நன்றி சொல்ல தவறிய என் நாயகனே
உங்களிடம் நான் அதிகம் பேசியதில்லை-பதில்
என் இயல்புகளில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
நினைத்துப்பார்க்கிறேன்.. எல்லாவற்றையும்
நினைத்துப்பார்க்கிறேன்.. எல்லாவற்றையும்
என்னை வருடிய முதல் உரோமங்கள்
இன்றும் உணர்வோடு நெருடுது
உங்களை எனக்கு அடையாளம் காட்டிய
அந்த கம்பி மீசை- அப்போதெல்லாம்
அது குத்தினால்தான் உறுதி செய்து கொள்வேன் உங்களை
தென்னங்கீற்று நிழலில் உங்கள் உடல் சூட்டில் உறங்கியது'
அன்னையவள் ஊட்டிய சோறில் உங்கள் தோளில் சிந்திய பருக்கைகள்
உங்கள் கைப்பிடியில் கிறுக்கிய முதல் 'அ'னா
கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
நீங்கள் காட்டிய கலர்கனவுகள்,
சிரித்து கொண்டு சென்ற முதல்
பள்ளி வகுப்பு வழியனுப்பிய ஈர கண்கள்
கைப்பிடிக்குள் என்னை வைத்து
சைக்கிளில் சாகசம் காட்டிய நீங்கள்
என் சிரிப்பை ரசிப்பதற்காய் போலியாய்
அழுத உங்கள் விளையாட்டுக்கள்
வேலைமுடிந்துவரும் உங்களுக்காய்
காத்திருந்து கட்டியனைக்கையில் அந்த
வியர்வை மணம் இன்றும் காற்றோடு
வீசுகிறது பாசத்தின் நினைவுகளாய்
கற்றுக்கொண்டதெல்லாம்
உங்கள் கைப்பிடியில் தான்
விட்டுச்சென்ற களவுகளும்
உங்கள் கைத்தடியில்தான்
அடிப்பது உங்கள் கை என்றாலும்
வலி தாங்காமல் நான்
கட்டியணைப்பதும் உங்களைத்தானே..
இன்றும் இனிக்கிறது. பீட்சாவோ சப்மரைனோ அல்ல
உங்கள் பாக்கெட்டில் திருடிய ரெண்டுரூவாய் மிட்டாய்
எத்தனை சொல்வேன் எப்படிச்சொல்வேன் எல்லாம்
அன்று போல் இன்றும் உங்களை கட்டி அணைக்க ஆசை
உங்கள் மடிமீதிருந்து ஒருபருக்கை உணவுள்ள ஆசை
அதே சைக்கிளில் உங்களோடு உலகெல்லாம் சுற்ற ஆசை
என்ன செய்ய காலம் எனக்கு வயதை கூட்டிவிட்டதே
வயது பாசத்தை மரியாதையாய் பிரதியிட்டுவிட்டதே
மீண்டும் எனக்கொரு சந்தர்ப்பம் தராதா அது???
********
டிஸ்கி: ஒவ்வொரு வருசமும் தந்தையர் தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு கொண்டாடப்படுகிறது.. ஏன்னா விடுமுறை நாளில வச்சாலாவது யாராச்சும் கொண்டாடுராங்களா எண்டு பாக்கத்தான்.. |
19 comments:
பயபுள்ள பதிவு போடுற நேரத்த பாரு..
தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...உங்களுக்கும்..ஹிஹி ஆக்சுவலி நீங்களும் தந்தை தானே பாஸ்!!(உண்மைய சொன்னா ஏன் அருவா தூக்கிறீங்க??)
@மைந்தன் சிவா
//தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...உங்களுக்கும்..ஹிஹி ஆக்சுவலி நீங்களும் தந்தை தானே பாஸ்!!(உண்மைய சொன்னா ஏன் அருவா தூக்கிறீங்க??)//
அவ்வளவு பெரிய ஆளிலடா நான்.. ஹி ஹி
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!!!! (உங்களுக்கும் சேர்த்துதான்)
தந்தையர்தின வாழ்த்துகள் அனைத்து தந்தையினருக்கும்....
கவிதை அருமை..தந்தை மகன் பாச உணர்வை கள்ளம் கபடமின்றி சொல்லி செல்கின்றது..
தந்தையர் தின வாழ்த்துப்பதிவு போட்ட முதல் தந்தை என்ற பெருமையை பெற்றுக்கொள்ளும் அஸ்வின் அண்ணாவிற்கு என் தந்தையர் தின வாழ்த்துகள்...
நல்ல தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்
கற்றுக்கொண்டதெல்லாம்
உங்கள் கைப்பிடியில் தான்
விட்டுச்சென்ற களவுகளும்
உங்கள் கைத்தடியில்தான்
அடிப்பது உங்கள் கை என்றாலும்
வலி தாங்காமல் நான்
கட்டியணைப்பதும் உங்களைத்தானே..
இன்றும் இனிக்கிறது. பீட்சாவோ சப்மரைனோ அல்ல
உங்கள் பாக்கெட்டில் திருடிய ரெண்டுரூவாய் மிட்டாய்
ம்ம்ம்.....
பிட்சாவும் மிட்டாயும் பலவற்றை உணர்த்தி நிற்கிறதாய் உணர்கின்றேன்.
என் மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதுவே என் பிரதான இலட்சியம்.
தங்களுக்கு தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
///டிஸ்கி: ஒவ்வொரு வருசமும் தந்தையர் தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு கொண்டாடப்படுகிறது.. ஏன்னா விடுமுறை நாளில வச்சாலாவது யாராச்சும் கொண்டாடுராங்களா எண்டு பாக்கத்தான்.. ///
இதுவும் நல்லாத்தான் இருக்கு...
தந்தையர்தின வாழ்த்துக்கள்..
நல்ல கவிதை பாஸ் தந்தையர் தின வாழ்த்துக்கள் ...அத்தோடு நாளை நீங்களும் ஒரு தந்தையாக வாழ்த்துக்கள் :-)
happy fathers day bro :)
மச்சி, முதல்ல உனக்கும்.
சாரி உங்களின் அப்பாவிற்கு என் மனம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அதே சைக்கிளில் உங்களோடு உலகெல்லாம் சுற்ற ஆசை
என்ன செய்ய காலம் எனக்கு வயதை கூட்டிவிட்டதே
வயது பாசத்தை மரியாதையாய் பிரதியிட்டுவிட்டதே
மீண்டும் எனக்கொரு சந்தர்ப்பம் தராதா அது???//
மீண்டும் குழந்தையாக மாறி தந்தையுடன் இணைந்து சுற்றித் திரிய வேண்டும்,
தந்தையின் மடியில் தவழ வேண்டும் எனும் உணர்வுகளைக் கொண்ட இளைஞனின் உள்ளத்து வெளிப்பாடாக இந்தக் கவிதை பிறந்திருக்கிறது.
அனைத்து சொந்தங்களினதும் வருகைக்கு நன்றி.. என்னைய வெச்சு குசும்பு பண்ணின சொந்தங்களுக்கும் விரைவில் தந்தையாக வாழ்த்துக்கள்.. பி ஹாப்பி...
பழைய எண்ணங்களை தூசு தட்டியதுக்கு நன்றி.............
அது ஒரு அழகிய கனாக்காலம்
///வயது பாசத்தை மரியாதையாய் பிரதியிட்டுவிட்டதே!///
உண்மை தான். வயது கூட கூட சில விஷயங்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக தடைபடுகிறது..
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் நண்பா
பாசத்தை வடித்த விதம் ரசனையானது அஷ்வின்..
உங்கள் தந்தையாருக்கும் என் வாழ்த்துக்கள்
வயது பாசத்தை மரியாதையாய் பிரதியிட்டுவிட்டதே//
:)
கொஞ்சம் லேட்டா வந்துட்டனோ...என்னுடைய வாழ்த்துகளும்...அஷ்வின்.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...