இன்று தற்செயலாக எனக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவரை காண நேர்ந்தது. உடனே அவர் முன்சென்று என்னை அறிமுகப்படுத்தப்போக ''அட பெண் கண்டார் , நீயும் இங்கேயா இருக்கிறாய்'' என்று முந்திக்கொண்டார். ஆஹா இவர் அத இன்னும் மறக்கேலையா.. எனக்கே மறந்து போச்சு. அது வேற ஒன்னும் இல்லைங்க எட்டாம் வகுப்புல நாங்கள் படிக்குற காலத்துல எங்கட தமிழ் பாடபுத்தகத்துல ஒரு பாடல் இருந்துச்சு. கலைஞர் ஐயா எழுதின செம்மொழிப்பாடல்
இல்லை அது. கம்பராமாயணத்திலே வருகிற ''தோள் கண்டார் தோளே கண்டார்'' என்கிற பாடலை அடிதழுவி இ.முருகையன் அவர்களால் எழுதப்பட்ட ''தேள் கண்டார் தேளே கண்டார்'' எனும் பாடல்.
இல்லை அது. கம்பராமாயணத்திலே வருகிற ''தோள் கண்டார் தோளே கண்டார்'' என்கிற பாடலை அடிதழுவி இ.முருகையன் அவர்களால் எழுதப்பட்ட ''தேள் கண்டார் தேளே கண்டார்'' எனும் பாடல்.
அந்த பாடலை தமிழ் ஆசிரியர் வந்து அக்குவேற ஆணிவேறாக படிப்பிச்சுடு போயிட்டார். அடுத்தபாடம் நான் இன்றைக்கு சந்தித்த அந்த ஆசனோடபாடம். அவர் வாறத்துக்கு லேட்டானதால அந்த பாடலோட ஊறிப்போன நான் அத மாத்தி ஒரு கறுமத்த எழுதி தொலைச்சுட்டன். நான் எழுதி முடிக்கவும் அவர் வரவும் சரியா இருந்துச்சு. பக்கத்துல இருந்த நண்பனுக்கு மெல்லமா நம்மட சாகசத்த காட்ட அவன் பாவி நான் கிறுக்கின கடதாசிய தூக்கி வாத்தியாருட்ட கொடுத்திட்டான். அந்தாளும் கடுப்போட கிளம்பிவந்து கழுத்தில புடிச்சு இழுத்திட்டுபோய் வகுப்புக்கு முன்னால விட்டு சத்தமா எல்லாருக்கும் கேக்குரமாதிரி இத படிடா எண்டு விட்டுடார். வேற வழியில்லாம கண்கலங்கி படிக்கதொடங்கி முடியுற நேரத்துல அழுற நிலைமைக்கே வந்துட்டன். அதுக்கப்புறம் நடந்த அபிசேகங்கள் என்ட கண்ணீரால கொஞ்சம் குறைஞ்சுட்டுது. அண்டைக்கு பிறகு அவர் என்ன வகுப்பில கூப்பிடுறது ''டேய் பெண்கண்டார்'' அப்டியேதான். இண்டைக்கும் அத கூப்பிட்டு எனக்கு அபிசேகத்த ஞாபகபடுத்திட்டார். அந்த அபிசேக பாடலை எந்த ஒரு மாற்றமும் இன்றி உங்களோடையும் பகிரலாம் எண்டு வந்திருக்கன். இந்தாங்கோ.
பாடல் சமர்ப்பணம்-அபிசேக வாத்தியாருக்கு. பெண் கண்டார் பெண்ணே கண்டார்
பெண் கண்டார் பெண்ணே கண்டார்
திண்ணையில் இருந்த பொன்னார்
கண்ணாடி கொண்டுவாரும் என்றார்
சுவருக்கு அப்பால் நின்று.
நீள்கொண்டை விழியாள்
அவள் குழலாடக்கண்டு
பள்சர் கொண்டு வருவேனென்று
வயித்திலிங்கம் போனான்.
ஒழுங்கைக்குள் புகுந்த பெண்ணோ
முன் வைத்த தனது காலினை
எனைப்பார்த்து அப்பால் ஊன்றக்
கருதிற்றுப் போலும் என்று
வேலப்பர் சொல்லிக் கொண்டு
வெளியாலே கிழம்பிட்டார்.
மாலைக்கு மயக்கம் தோன்ற
பகலவனும் மறைந்து போனான்.
சாக்குப் பை எடுத்து வாரும்
விடக்கூடாது முடிக்க வேண்டும்
துளியுமே அஞ்சேன் என்று
சுந்தரம் மெல்ல வந்தான்.
விழி பிதுங்கி அவளை பார்த்து
மதி கலங்கிய பேரெல்லாம்
களிப்புறுமாறே அங்கு
கனகராசன் வந்தான்.
கட்டுகட்டா காசும், காரும் எங்கே
எடுத்து வா அதனை பார்த்தால்
கண்ணாண எந்தப் பெண்ணும்
கட்டாயம் மடிஞ்சு வரும்.
திருநெல்வேலி சந்தையிலும்
அதைத்தான் செய்தோம் என்றான்.
உண்மையாய் சொல்லப் போனால்
ஒருவரும் அசைந்தாரில்லை.
சின்னவள் விளையாட்டாலே
சிங்காரமாய் திரும்பி வந்தாள்.
என்ன சங்கதி என்று ஏகி
எதிர் ஒழுங்கை புக்காள்.
அன்னவள் கையால் அந்த
அழகான தேவதையை கூட்டிவந்து
இவதான் என் அம்மா என்ற
சத்தமின்றி வீரரெல்லாம்
மொத்தமாய் தலை குனிந்தார்.
****
*ஐயா சாமியோ.. நீங்களும் அபிசேகம் பண்ணிடாதேல். *அறியாத வயசுல புரியாத புள்ளை எழுதினதுல சொற்பிழை பொருட்பிழை ஏதும் இருப்பேன் பெரிய மனதோட பொறுத்துக்கொண்டு ஓட்டை குத்துங்கோ பெரிய மனுசங்களா. |
17 comments:
ஆஹா கவிதை கவிதை அழகாக இருக்கு. படிக்கின்ற காலப் பம்பல்கள் சுவாரிசியமானவை.
Hansika hee hee flash back :)
ம்ம்ம்ம்...அருமையான கவிதையும் கூட.. அஷ்வினின் இந்த திடீர் அதிரடியாட்டம் ரொம்ப பிடித்திருக்கு.. தொடர்ந்து கலக்குங்கள்.
சின்னவள் விளையாட்டாலே
சிங்காரமாய் திரும்பி வந்தாள்.?????
nirujans.blogspot.com
கலக்கல் அஷ்வின் :)
@நிருஜன்
சின்னவள் விளையாட்டாலே
சிங்காரமாய் திரும்பி வந்தாள்.?????
சின்ன பெண்பிள்ளை சின்னபில்லைகளின் விளையாட்டுகளை விளையாடிவிட்டு விளையாடி முடிந்த பெருமிதத்தில் திரும்பி அந்த பாதையால் வந்தாள். புரிந்ததா நிருஜன்???
எப்ப பாத்தாலும் தப்புதப்பாவே ஜோசிக்குறது..
@Jana
//அருமையான கவிதையும் கூட.. அஷ்வினின் இந்த திடீர் அதிரடியாட்டம் ரொம்ப பிடித்திருக்கு.. தொடர்ந்து கலக்குங்கள்//
நன்றி அண்ணா நன்றி.. முடிந்தளவு எழுதுகிறோம். இப்போ பிட்ச் கொஞ்சம் அடித்து ஆடக்கூடிய பிட்ச் ஆக இருப்பதால் அப்டி ஆடுரம்.
அப்புடியா சங்கதி?
http://nirujans.blogspot.com/
@வந்தியத்தேவன்
//ஆஹா கவிதை கவிதை அழகாக இருக்கு. படிக்கின்ற காலப் பம்பல்கள் சுவாரிசியமானவை//
நன்றி. பள்ளிக்கால பம்மல்களும், கல்லூரிக்கால காதல்களும் என்றுமே சுவையானதுதான் வந்தி மாம்ஸ்.
ஆங்...
பொண்ணே கண்டார்
இவர் கண்ணே வென்றாள்
காகிதம் மைகொண்டார்
அவன் கைவரிசை கொண்டான்
அவர் தோள்வரிசை பிய்த்தார்...
அனுபவம் தித்திக்கும்...நிலாக்காலம்.
நீங்கள் சொன்னது கம்பராமாயணம் என நினைக்கிறேன். அங்கே நளவெண்பாவாக வந்திருக்கு அஸ்வின்.
ராமனின் அழகை,
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
பின்வரும் தொடுப்பை பார்க்க
http://gunathamizh.blogspot.com/2011/06/blog-post_02.html
ஹிஹி ஈன்க்கும் அது ஞாபகம் இருக்கு பாஸ்,,பாட்டு
நன்றி ரமேஷ். திருத்திவிட்டேன்.
என்னுடைய ஆக்கத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டிய அன்பு நட்புவட்டங்கள் சின்மஜன் மற்றும் சிதறல்கள் ரமேஷ் ஆகியோருக்கு நன்றிகள்.
சகா, சின்ன வயசில் எழுதிய கவிதை என்றாலும், சூடாகவும் சுவாரசியமாகவும் இருக்கு சகோ.
ஹலோ பெண் கண்டார் ;) எப்பிடி சுகமோ?
இவ்வளவும் பாடமா இருந்திருக்கோ?
@நிரூபன்
நன்றி நன்றி நிருபன்.
@LOSHAN
//ஹலோ பெண் கண்டார் ;) எப்பிடி சுகமோ?
இவ்வளவும் பாடமா இருந்திருக்கோ?//
சுகம் சுகம் ஹி ஹி ..
வாழ்க்கையில முதலாவதா கிருக்கினதாச்சே. அவ்வளவு சீக்கிரம் மறந்து போகுமா..(எல்லா புகழும் நீர்வை முருகையனுக்கே)
ஆஹா அருமை
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...