• Thursday, June 9, 2011

  இலகுவாக ப்ளாக்கின் FAVICON ஐ மாற்ற | Bloggerன் புதிய வசதி.

  இன்று ப்ளாக்கரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியான 'உங்களுடைய பிளாக்கின் favicon ஐ எப்படி மாற்றுவதென்று பார்ப்போம். favicon என்பது  ஒரு வலைப்பக்கத்தை திறக்கும் போது மேலுள்ள Address Barல் அந்த வலைப்பக்கம் சம்பந்தமான சிறிய குறிப்படம் ஒன்று இருக்கும். இது அந்த வலைப்பக்கத்தை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளவும் , இலகுவாக ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உதவும். கீழே ஒவ்வொரு தளங்களுக்குமுரிய தனிப்பாங்கான  favicon  களை காட்டியுள்ளேன்.

  இவ்வாறு உங்கள் ப்ளாக்கினுடைய  favicon  ஐயும மாற்றினால் வாசகர்களுக்கு உங்கள் வலைப்பக்கமும் தனித்து விசேடமாக தெரியும்.

  எனி உங்களது  favicon ஐ எப்படி உருவாக்கிக்கொள்வது என்று பார்ப்போம். இதற்கு இவ்வளவுகாலமும் நாம்  favicon  ஐ மாற்ற HTML கோடிங் களையே பாவித்து வந்தோம். ஆனால் BLOGGER ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சேவையிலே இது மிக மிக இலகுவாக்கப்பட்டுள்ளது. எனி எந்த ஒரு கோடிங்கும் தேவையில்லை. சும்மா மண்டைய போட்டு பிச்சுகவும் தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது>>> இங்கே நான் கொடுத்துள்ள லிங்கில் ஒரு கிளிக். கிளிக் செய்ததும் கொஞ்சநேரம் காத்திருங்கள். உங்கள் பிளாக்கின் Dashboard உருவாகும். 

  அந்த லிங்க் இங்கே Blogger in Draft. கிளிக் செய்யவும்:

  அங்கே Design ஐ கிளிக் செய்து Page Elements ஐ திறந்து கொள்ளுங்கள்.  நீங்கள் ஓர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் Design | Page Elements பக்கம் காட்டியவாறு தோன்றும். (இச்சேவையை  Blogger இன்னும் முழுமையாக விரிவு படுத்தவில்லை. எழுந்தமானாமாக சிலருக்கே இந்த அதிர்ஷ்டம் கிடைகிறது. முயற்சித்துப்பாருங்கள்)

  இங்கே Edit என்பதை கிளிக் செய்தால் கீழே இருப்பது போல் ஒரு வின்டோ திறந்துகொள்ளும். 

  இப்போது Choose File என்பதை தெரிவு செய்து Favicon ஆக வரவேண்டிய படத்தினை உங்கள் கணனியில் இருந்து தெரிவு செய்து Upload செய்துகொள்ளலாம். ஆனால் செய்யப்படும் படம் .ico எனும் format இல் இருக்கவேண்டும்.  உங்களிடமுள்ள JPEG வகையிலுள்ள படத்தை இலகுவாக icon ஆக மாற்றுவதற்கு எங்களுக்கு சில தளங்கள் உதவி செய்கின்றன. அவ்வாறு JPEG File ஐ Icon ஆக மாற்றுவதற்கு பயன்படும் சில சிறந்த தளங்களின் இணைப்பை இங்கு தருகிறேன். இதன் மூலம் உருவாக்கப்படும் உங்கள் Icon image பைலினை கணனியில் சேமித்துக்கொண்டு அதை Favicon ஆக Upload செய்துகொள்ளலாம்.

  ஐ ஆக மாற்ற உதவும் தளங்கள்.


  சொன்னபடி எல்லாம் சரியா செய்தீங்கள் என்றால் உங்களுக்கு பிடித்தமாதிரியான FAVICON உங்கள் வலைப்பக்கத்துக்கு உருவாகியிருக்கும். எனி உங்கள் வலைப்பூ வாசகர்மத்தியில் தனித்தும் தெரியும்.

  ****
  இன்றைய (சிந்தனை) ஜோக்:
  காதலன்:  நீ இன்றுவரைக்கும் லவ் பண்ணின ஒரே ஆண் நான்தானா?
  காதலி:  கண்டிப்பாக;  ஆனா எத்தின பேர்தான் இதே கேள்விய கேட்பியலோ.
  உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் சென்றடைய உங்கள் பொன்னான ஓட்டுக்களை இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வழங்கிச்செல்லுங்கள்.
  thanks to :Bloggers.com

  Post Comment

  12 comments:

  Admin said...

  பகிர்வுக்கு நன்றிகள்

  Mathuran said...

  அருமையான தகவல்.. நானும் எனது ப்ளாக்கில் செய்துவிட்டேன்..
  பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றி

  Unknown said...

  thanks for new tips

  Anonymous said...

  ///அங்கே Design ஐ கிளிக் செய்து Page Elements ஐ திறந்து கொள்ளுங்கள். நீங்கள் ஓர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் Design | Page Elements பக்கம் காட்டியவாறு தோன்றும்/// ஐ நான் அதிஷ்டசாலி ..)))

  இலகுவான வழி பாஸ்...

  ஷஹன்ஷா said...

  மிக்க நன்றிகள்..

  நிரூபன் said...

  புதுசு புதுசா, கூகிள் அறிமுகப்படுத்திய உடன் சுடச் சுடத் தருகிறீர்களே.
  நன்றி மாப்பு

  நிரூபன் said...

  நீ இன்றுவரைக்கும் லவ் பண்ணின ஒரே ஆண் நான்தானா?
  காதலி: கண்டிப்பாக; ஆனா எத்தின பேர்தான் இதே கேள்விய கேட்பியலோ//

  அவ்.............(((((:

  Unknown said...

  நானும் அதிஸ்டசாலி தான் ஹிஹிஹி
  நன்றி மச்சி :)

  Anonymous said...

  அய்யோ முதல் முறையா எனக்கு அதிர்ஷ்டம் வேலை செஞ்சுருக்கு.

  ம.தி.சுதா said...

  பொறய்யா நானும் முயற்சிக்கிறேன்...

  john danushan said...

  நல்ல பதிவு...

  REVSAM said...

  உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் சென்றடைய உங்கள் பொன்னான ஓட்டுக்களை இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வழங்கிச்செல்லுங்கள்.

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner