கழிவறையில் கண நேரத்தில் உதித்த சிந்தனைகளை அப்டியே மணம் குறையாம அள்ளிட்டுவந்து போட்டிருக்கன். படிச்சுட்டு எப்டி டேஸ்டா இருந்துச்சா எண்டு சொல்லிட்டு போங்கோ:
[1]
மில்லியன் ரூபாய் போட்டி: ஒரு நிமிடம் பேச வேண்டும்
தலைப்பு: பொறாமை,வஞ்சகம்,துரோகம்,காழ்ப்பு;
தவிர்க்கவேண்டிய வார்த்தை: தமிழன்
[2]
மனத்தினை மட்டும் நேசிப்பவள் இலட்சியக்காதலி
பணத்தினையும் யோசிப்பவள் ஜதார்த்த காதலி
ஜதார்த்தங்கள்தான் வாழ்க்கையில் ஜெயிக்கிறது.
[3]
மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம்:
விலங்குகளுக்கு அரசியல் செய்யத்தெரியாதுமனிதனுக்கு அன்புகாட்டதெரியாது.
[4]
இதயத்திருடர்களிடம் கவனாமாயிருங்கள் -ஏனெனில்திருடர்களுக்கு ஒருவீட்டில் மட்டும் திருடி பழக்கமில்லை.
[5]
எதிரி இருந்தால்தான் நண்பர்கள் நண்பர்களாகவே இருப்பர்.இல்லாவிடில் நண்பர்களே எதிரிகளாக மாறிவிடுவர்.
[6]
காதலர்களுக்கு:ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கற் பெறின்.சினிமா ஸ்டார்+உள்ளூர் ஸ்டார்களுக்கு:கூடுதல் காதலிற்கின்பம் அதற்கின்பம்பிரிந்து வேறாளை பார்க்கப்பெறின்.
[7]
இலங்கை:எங்கள் மன்னன் ஒரு சிறந்த நகைச்சுவையாளன்மந்திரிகளும் சிறந்த நகைச்சுவையாளர்கள்.மக்களுக்குதான் சிரிப்பதற்கு சந்தோசமில்லை.
[8]
இந்தியா:- கோவில்சினிமா, கிரிக்கட்:- தெய்வங்கள்ஊடகவியலாளர்கள், பதிவர்கள்:- பூசாரிகள்:மக்கள் :- பக்கதர்கள்:அரசியல் வாதிகள் ,சாமியார்கள் :- செயின்,உண்டியல் திருடர்கள்
அவ்வளவுதாங்கோ... கொஞ்சம் ஓவராத்தான் வதைச்சுட்டனோ?? எது எப்படியோ ஓட்டு ஓட்டு அது முக்கியம். அதால எவ்வளவு பிரச்சனை தெரியுமா. அப்டியே உங்க வாயில வாறதுகளையும் கீழ கொட்டிடு போங்கோவன்: அடுத்த பதிவு: குளுகுளு கண்டியில் கிளுகிளு பதிவர் சந்திப்பு |
16 comments:
நச் , இலங்கை பற்றிய கடி கலக்கல் ஆனால் கவனமாக இருக்கவும். ஹிஹிஹி.
SuperB
இலங்கை:
எங்கள் மன்னன் ஒரு சிறந்த நகைச்சுவையாளன்
மந்திரிகளும் சிறந்த நகைச்சுவையாளர்கள்.
மக்களுக்குதான் சிரிப்பதற்கு சந்தோசமில்லை//
ஹா...ஹா...
எல்லாமே அருமை சகோ.
கழிவறையில் கூட ஊட்கார்ந்து யோசிக்கிறீங்களே..
ஹி...ஹி..
எல்லாமே சூப்பர் நறுக்குகள் பாஸ்.
உங்களின் தமிழ் எனக்கு பிடித்திருக்கிரது.
ஹ..ஹா.ஹா..
எல்லாமே அசத்தல்..
கழிவறையிலும், நீண்டதூரப் பயணங்களின் யன்னலோர இருக்கையும் பல அற்புதமான சிந்தனைகளை தரும் என்பதை நிரூபித்துள்ளது இந்த பதிவு.
கலக்குங்கள் அஷ்வின்.
ஓட்டு ஓட்டு அது முக்கியம்
அது சரி தமிழ் மணத்தில் 4 ஆவது ஓட்டு, இன்ட்னியில் 7ஆவது ஓட்டு...
மன்னருக்கான கடி அருமை..ரசித்தேன்...
@வந்தியத்தேவன்
நன்றி வந்தி மாமோய்.. நீங்க இருக்கும்போது நம்மள யாரு என்ன பண்ண முடியும்.
@வதீஸ்-Vathees
நன்றி நன்றி வருகைக்கு
@நிரூபன்
//கழிவறையில் கூட ஊட்கார்ந்து யோசிக்கிறீங்களே..
ஹி...ஹி..
எல்லாமே சூப்பர் நறுக்குகள் பாஸ்//
அது ஒண்ணுதான் நம்ம நாட்டுல அமைதியா இருக்குது.
@Jana
//கழிவறையிலும், நீண்டதூரப் பயணங்களின் யன்னலோர இருக்கையும் பல அற்புதமான சிந்தனைகளை தரும் என்பதை நிரூபித்துள்ளது இந்த பதிவு.
கலக்குங்கள் அஷ்வின்//
கரெக்டு கரெக்க்டு. அண்ட் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நாலாவது ஏழாவது ஓட்டுக்கும்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
@“நிலவின்” ஜனகன்
//மன்னருக்கான கடி அருமை..ரசித்தேன்.// மன்னருக்கு கடி மட்டுமில்ல சொறியும் இருக்காம். நன்றி கருத்துக்கு.
அட அட அட அட.... என்னா ஒரு தத்துப்பித்துவம்ஸ்...
தொடரட்டும் இது போன்ற படைப்புக்கள்...
வாழ்த்துக்கள் தம்பீ
நல்ல தமில் மணம் வீசிரது உமதி தளத்தில். கீப் இட் அப்.
avoid politics. that's too dangerous.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...