கல்லினில் இரு துளைவைத்து
கண்ணென்று சொல்லி உலகையும்
காப்பான் இவன், தன் கண் கொண்டு என
கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி
கயவனாய் போனாயே - கடவுள் இலை நீ
கல் என்றே சொல்வேன் உனை..
கைலையில் உள்ளாயா - இலை போதியின்
கிளையில் கீழுள்ளாயா? காமுகன்
கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர்
கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ?
களத்தினில் எம்மக்காள் கருணையின்றி
கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ??
கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த
கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்
கலவிப்பசி தீர்க்க கையிழுத்து
கழுத்தறுத்த வேளை - நீ
கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ
கல்லில் புதைந்த கடவுளே.
கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம்
கல்லானவன் பொய்யுரைக்க
காலடியில் காலன் இன்று எம்
கை கட்டி வைக்க - உண்மைகள்
கவிழ்ந்திடச்செய்தால் உன்
கருவறை வந்து உன் சிலை
கவிழ்ப்பேன் கடவுளே..
கயவனும் நீயே
கள்வனும் நீயே
காமுகனும் நீயே
கொடுங்கோலனும் நீயே -இப்படி
கோர்த்து நான் உன்னையே
கடிந்து கொள்ள முடியும் ஏனினில்
கருத்து சுதந்திரம் உன்னோடு மட்டுமே உண்டு கடவுளே..
**********
கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர்
கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ?
களத்தினில் எம்மக்காள் கருணையின்றி
கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ??
கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த
கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்
கலவிப்பசி தீர்க்க கையிழுத்து
கழுத்தறுத்த வேளை - நீ
கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ
கல்லில் புதைந்த கடவுளே.
கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம்
கல்லானவன் பொய்யுரைக்க
காலடியில் காலன் இன்று எம்
கை கட்டி வைக்க - உண்மைகள்
கவிழ்ந்திடச்செய்தால் உன்
கருவறை வந்து உன் சிலை
கவிழ்ப்பேன் கடவுளே..
கயவனும் நீயே
கள்வனும் நீயே
காமுகனும் நீயே
கொடுங்கோலனும் நீயே -இப்படி
கோர்த்து நான் உன்னையே
கடிந்து கொள்ள முடியும் ஏனினில்
கருத்து சுதந்திரம் உன்னோடு மட்டுமே உண்டு கடவுளே..
**********
காணொளியை கண்ட கணம் முதலாய் இதயதுடிப்பும் கை துடிப்பும் அதிகரித்துவிட்டது. கைதுடிப்பை மட்டுமே கட்டுபடுத்தி வைக்கிறேன். இருந்தும் இன்று காலை அலுவலகத்தில் ஒரு சிங்கள மேலதிகாரியிடம் அந்த காணொளிய போட்டு காட்டினேன். மனம் பதறி ஒரு துளி கண்ணீர் விட்டார் அவரும். பின்னர் இடைவேளையில் என்னை கண்டு சொன்னார்''அதெல்லாம் பொய்யாம். கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்கள்''. என்னைவிட கேவலங்கெட்ட பொறுமைசாலி இருக்கமுடியாது. |
18 comments:
///கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம்
கல்லானவன் பொய்யுரைக்க
காலடியில் காலன் இன்று எம்
கை கட்டி வைக்க - உண்மைகள்
கவிழ்ந்திடச்செய்தால் உன்
கருவறை வந்து உன் சிலை
கவிழ்ப்பேன் கடவுளே..//// எனக்கு என்றோ கடவுள் நம்பிக்கையும் போச்சுங்க ;-(
mmm...
கொதிக்குது!
fantastic machan love it.keep on going,excellent
fantastic machan,keep on going
:|
கவிதை, உணர்வின் வெளிப்பாடாய், இனத்தினது பாசக் குமுறலாய் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது.
இக் காணொளியினைப் பார்த்த உங்களின் உள்ளம் வேதனை கொள்கிறது, ஆனால் நாங்கள் நேரில் பல விடயங்களைப் பார்த்துச் சுய நலவாதிகளாக அல்லவா இருந்து விட்டோம். வெளியே சொல்ல வெட்கமாக இருக்கிறது மாப்ளே.
வெளிநாட்டு காரன் டிவி ல போடேக்கான் இங்க எல்லோருக்கும் தமிழ் உணர்வும் அனுதாபமும் பொங்கி எழுது... இவள நாளும் எங்க போனிங்க அண்ணாமரே... இலங்கைல தானே இருக்கீங்க..? நடந்து 2 வருஷம் முடிஞ்சு போச்சு... நீங்க கவலபடகூடா. வெட்கபடனும்.. jayanthan
:)
நாங்கள் கையாலாகாதவர்கள்..
////கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த
கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்
கலவிப்பசி தீர்க்க கையிழுத்து
கழுத்தறுத்த வேளை - நீ
கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ
கல்லில் புதைந்த கடவுளே.////
இதனைவிட வேறு எப்படி எங்களின் வலியைச் சொல்ல முடியும். மனதின் இறுக்கம் இன்னும் குறையவில்லை.
கவிதையில் உங்கள் உணர்வுகளை கண்டுகொண்டேன்!!!! :)
விரைவில் நியூட்டன் மூன்றாம் விதி பிரயோக்கிகபடும் என்று நினைக்ரேன்
கவிதையில் உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன..
அந்த கிராபிக்ஸ் பற்றி பேசியவனுக்கு சொல்லுங்கள் நீங்கள் காட்டிய புகைப்படமும் கிராபிக்ஸ் என்று.... உங்கள் வெற்றியும் கிராபிக்ஸ் என்று..
கயவனும் நீயே
கள்வனும் நீயே
காமுகனும் நீயே
கொடுங்கோலனும் நீயே -இப்படி
கோர்த்து நான் உன்னையே
கடிந்து கொள்ள முடியும் ஏனினில்
கருத்து சுதந்திரம் உன்னோடு மட்டுமே உண்டு கடவுளே..
வெறுப்புக்களின் உட்சக்கட்ட வெறுப்புக்கள், சுயவெறுப்பு மற்றும் படைத்தோன் மீதான வெறுப்பு என்கின்றது உளவியல்.
என்ன செய்வது நாம் எமது உச்சக்கட்ட வெறுப்பைத்தான் அனுபவிக்கமுடியும்.
சொல்ல வார்த்தை வரவில்லை...
எங்களுக்கும் காலம் வரும், கடவுளால் அல்ல எங்களால்
உங்கள் உணர்வை உள்ளபடி கவிதையாக
எமக்களித்தீர்கள்.இந்த வேதனையை
என்னவென்று சொல்ல.வார்த்தைகள் அற்று
மௌனித்தேன்.பகிர்வுக்கு நன்றி சகோ .மனதைத்
தேற்றுங்கள் .
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...