• Tuesday, June 14, 2011

  வைரமுத்துவுடன் முதல் காதல்- தூசுதட்டியது

  இன்றைக்கு என்னமோ பழைய ஞாபகங்கள் வந்ததில் பதிவுலகுக்குள் நுழைந்த நாட்களை மீட்டு பார்த்தேன். அப்படி என்னோட பதிவுகளின் முதல் பக்கத்தை தட்டும் போது (இருக்குறதே 69 பதிவு அதுக்குள்ளே என்னடா முதலாவது பக்கம் முன்நூறாவது பக்கம்) கண்ணில பட்டது இந்த கவிதை. அதை மீண்டும் ஒருதடவை தரலாம் என்ற முடிவோட இங்கே பகிர்கிறேன் நண்பர்களே...(எழுத ஒன்னும் இல்லை அதால இப்படி பழைய படத்த ஓட்டுறன் எண்டு சொல்லன் )

  வாரணம் ஆயிரம் கொண்டான்:

  கவிஞனின் கவிஞன் நீ 
  கலைத்தாயின் கடைக்குட்டி
  கறைபடியா வர்ணமேகிய
  புரையோடும் தமிழன் நீ


  தென்றலில் தேனெடுத்து
  அன்றிலில் அமுதாக்கிய அழகன் நீ
  மன்றமும் மாநாடும் நாடும்
  கவியோடும் கலைக்கடல் நீ  மழலையின் தாயமுதும்
  குழந்தையின் மணல்வீடும்
  இளைஞனின் காதலியும்
  முதுமையின் தடிக்கம்பும்
  உன் கவிதைதானே மறத்தமிழா!


  கண்களால் கவிவரைந்து
  மிடுக்கென கொண்ட மீசை அபிநயம் போட
  கம்பீர கணீர் மொழியில் நீ உரைத்தால்
  உயிர் பெறாக்கவிதையும் உண்டோ!


  ம்..உன்னை நான் பாடக்காரணம் தேடுகிறாயா??
  "வாரணம் ஆயிரம் கொண்டான் வர்ணமே நான் கொண்டேன்."
  உன் புகழ் நான் பாடின் உன்னொடு
  என் வர்ணமும் அரியணையேகும்
  என்றோர் நப்பாசைதான் என்றால் தப்பா?

                                 
                                  ******
  படத்த திருப்பி ஓட்டினாலும் விளம்பரம் போடத்தானே வேணும். அதான் நண்பேர்ஸ் மனசுல பட்டத அப்படியே கீழ கருத்துப்பெட்டில கொட்டிட்டு போங்க..
  முன்னைய பதிவு : உச்சக்கட்ட இன்பம்

  Post Comment

  18 comments:

  சந்ரு said...

  வைரமுத்துவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும்.... உங்கள் கவிதையும் பிடித்திருக்கின்றது..

  நிகழ்வுகள் said...

  கவிதை மிக நன்றாக இருக்கிறது பாஸ் ,
  வைரமுத்துவின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதை விட தண்ணீர் தேசம் படித்த பின் அவரின் அபிமானி ஆகிவிட்டேன்..)

  நிகழ்வுகள் said...

  தமிழ் மணம் இன்று வேகமாய் இருக்கு, இன்டிலிக்கு என்னாச்சு... அப்புறம் வாறன் ஓட்டு போடா ...)

  Nesan said...

  வைரமுத்துவின் பலகவிதைகள் பிடிக்கும் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் பற்றி இதுவரை அவர் ஏதும் பதிவு செய்யவில்லை என்ற ஆதங்கம் உண்டு. உங்கள் கவிதையும் பிடித்திருக்கு அவரைப் பாடி நீங்கள் புகழ் பெறுவதில் ஆனந்தம் என்றாள் உங்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள்!இதோ இன்னொரு தூரிகை தயாராகிறது!

  உலக சினிமா ரசிகன் said...

  எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
  மேலும் விபரம் அறியவும்....
  இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  விக்கியுலகம் said...

  Nice

  மைந்தன் சிவா said...

  ஹிஹி வைரமுத்துக்கே வாளிப்பா???

  நிருஜன் said...

  அப்ப ஒவ்வருவருடனும் எதனை காதல் வரும் உங்களுக்கு?

  டிலான் said...

  ஒண்டும் இல்லை என்னடா அது 'உச்சக்கட்டம்' என்று எட்டிப்பார்க்கத்தான் வந்தேன் இனி ஒவ்வொரு கட்டத்திற்கும் வருவன் காணும்

  Ashwin-WIN said...

  @சந்ரு
  //வைரமுத்துவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும்.... உங்கள் கவிதையும் பிடித்திருக்கின்றது..//
  நன்றி சந்ரு.

  Ashwin-WIN said...

  @நிகழ்வுகள்
  //கவிதை மிக நன்றாக இருக்கிறது பாஸ் ,
  வைரமுத்துவின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதை விட தண்ணீர் தேசம் படித்த பின் அவரின் அபிமானி ஆகிவிட்டேன்..)//
  அப்போ வாங்க பாஸ் வைரமுத்து ரசிகர் மன்றத்துல சேர்ந்துக்க..

  Ashwin-WIN said...

  @நிகழ்வுகள்
  //தமிழ் மணம் இன்று வேகமாய் இருக்கு, இன்டிலிக்கு என்னாச்சு... அப்புறம் வாறன் ஓட்டு போடா ...)//
  உங்க கடமை உணர்வு என்ன மெய்சிலிர்க்க வைக்குது பாஸ்

  Ashwin-WIN said...

  @Nesan//வைரமுத்துவின் பலகவிதைகள் பிடிக்கும் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் பற்றி இதுவரை அவர் ஏதும் பதிவு செய்யவில்லை என்ற ஆதங்கம் உண்டு. உங்கள் கவிதையும் பிடித்திருக்கு அவரைப் பாடி நீங்கள் புகழ் பெறுவதில் ஆனந்தம் என்றாள் உங்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள்!இதோ இன்னொரு தூரிகை தயாராகிறது!//
  நன்றி சகோ வருகைக்கு.

  Ashwin-WIN said...

  @மைந்தன் சிவா//ஹிஹி வைரமுத்துக்கே வாளிப்பா??//
  ஹி ஹி ஹி

  Ashwin-WIN said...

  @நிருஜன்
  //அப்ப ஒவ்வருவருடனும் எதனை காதல் வரும் உங்களுக்கு// காதல் என்டாலே அடிக்கடி வாரதுதானே சகோ

  Ashwin-WIN said...

  @டிலான்//ஒண்டும் இல்லை என்னடா அது 'உச்சக்கட்டம்' என்று எட்டிப்பார்க்கத்தான் வந்தேன் இனி ஒவ்வொரு கட்டத்திற்கும் வருவன் காணும்
  // ஹி ஹி வாங்கோ சகோ வாங்கோ..

  ♔ம.தி.சுதா♔ said...

  லேட்டா வாசிச்சாலும் அருமையாக இருக்குதப்பா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

  நிரூபன் said...

  ம்..உன்னை நான் பாடக்காரணம் தேடுகிறாயா??
  "வாரணம் ஆயிரம் கொண்டான் வர்ணமே நான் கொண்டேன்."
  உன் புகழ் நான் பாடின் உன்னொடு
  என் வர்ணமும் அரியணையேகும்
  என்றோர் நப்பாசைதான் என்றால் தப்பா?//

  பாஸ்...கடைசிப் பந்தி வரை வாழ்த்துக் கவிதை என்று நினைத்தேன்,

  இறுதியில் தான் புரிந்து கொண்டேன், வாளிக்கே நீங்கள் ஒரு வாளி வைக்கிறீங்க என்று..

  ஹி...

  அருமையான கவிதை சகோ...

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner