• Sunday, June 5, 2011

  விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)

  எனக்கு உண்மையில் அந்த நாட்கள் மறந்துதான் போயிருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு வருடங்களில் அந்த ஞாபகம் வந்ததே இல்லை. நிம்மதியாய்த்தான் இருந்தேன். ஆனால் இன்று மீண்டும் அழைப்பு ஒரு நண்பனிடமிருந்து. இரவு ஒரு பார்டி இருக்குது வாடா என்றான் தொலைபேசி வாயிலாக. பார்டி என்றால் பலதும் பத்தும் இருக்கும் இருந்தாலும் நல்ல சாப்பாடு இருக்குமே என்பதால் அவனுடன் சென்றேன். அங்குதான் மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்தது. என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை அவள்தானோ என்று. பெயர்கூட மறந்திருந்தது. ஒருவேளை இது அவள் சகோதரியாய் கூட இருந்திருக்கலாம். இருந்தும் அந்த கட்டுடல் , அதே கலர் சொன்னது இது அவளேதான்...


  அவள் இங்கே வந்தது யாருடைய ஏற்பாடோ தெரியவில்லை.கொஞ்சம் பெரிய இடத்து பார்டி என்பதால் அவர்கள்தான் ஒழுங்கு செய்திருக்கவேண்டும் போலும். அவளைப்பார்த்ததும் என்னை மீண்டும் அந்தநாள் நினைவுகள் இழுத்துக்கொள்ளப்பார்கிறது.அன்றைக்குப்பிறகு அந்தப்பக்கம் தலைவைத்துப்படுக்காத என் விரதம் முடிந்துவிடுமோ என்று அச்சப்பட்டேன்.  அவள் யாரையும் பார்ப்பதாய் தெரியவில்லை. ஆனாலும் என்னையே அவள் பார்ப்பதாய் ஒரு உணர்வு உருட்டிக்கொண்டது. என்னைப்பார்த்து ஏளனமாய் ''நீதான் நான் வேணாம்னு இவ்வளவுநாள் என்பக்கம் வரலையே.. இன்றைக்கு என்ன பண்ணப்போகிறாய்?'' என்று சிரிப்பது போலிருந்தது.

  அன்றும்கூட இப்படித்தான். அது 2009ன் முற்பகுதியாக இருக்கவேண்டும். நான் பல்கலைக்கழகம் வந்த ஆரம்ப நாட்கள். ஒரு முக்கியமான பார்டி. அன்றுதான் அவளை முதன்முதலில் சந்தித்தேன். கண்ணாடிபோல் வழவழப்பான தேகம். அவள் அப்படியொன்றும் வெள்ளை அல்ல.. ஆனால் கறுப்பும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஜாதி கலர். மாநிறம் என்றுகூட சொல்லலாம். இல்லை அவள் கொஞ்சம் சிகப்பான மாநிறம். பார்த்துப்பார்த்து அச்சிலே வார்த்து செய்தது போன்ற அப்படி ஒரு கட்டுடல். சங்கின் வளைவா இல்லை பளிங்கின் வளைவா என எண்ணும் அவள் கழுத்து. கழுத்துக்குகீழே ஒரு சிறிய சிகப்பு நிற ஆடை உடலோடு ஒட்டியவாறு. இன்னும் இன்னும் சொல்ல வார்த்தைகள் முட்டுகிறது. அத்தனை அழகும் என்னை அவள் பக்கம் இழுத்தது. கைகள் நீளப்பார்த்தது அடக்கிக்கொண்டேன். முன் அனுபவம் வேறு இல்லை எனக்கு. எப்படி நடந்துகொள்வது? எப்படி ஆரம்பிப்பது என்றுகூட தெரியாது.

  இருந்தாலும் என்னோடு கூட இருந்த மூன்று நண்பர்கள் எனக்கு கொஞ்சம் தைரியமூட்டினார்கள்.  அவர்களுக்கு இதில் முன்னனுபவம் இருந்ததால் அவர்கள் முகத்தில் அந்த பதட்டம் இருக்கவில்லை. அவள் மீது அவர்கள் கை போனது. அதில் ஒரு நண்பன்; அவன் பெயர் 'உலகநாயகன்' என்றுகூட வச்சுக்கலாம், அவன் முளிச்சுக்கொண்டிருந்த என்னைப்பார்த்து ''டேய் சும்மா பார்த்துக்கொண்டிருக்காமல் வாடா'' என்றான். ''இல்லடா நீங்க நடத்துங்க நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'' என்றேன். ''பாத்திட்டிருக்கிறதுக்கா இங்க வந்தனீ? இதெல்லாம் பழகாம என்ன செய்யப்போறாய். வாடா இங்க '' என்று கொஞ்சம் குரலை தூக்கி என்னை அவன் பக்கம் இழுத்தான். ''உனக்கு எப்படி தொடங்குறதெண்டுகூட தெரியாதுடா சுத்த வேஸ்டுடா நீ'' என திட்டிக்கொண்டே என் கையை பிடித்து அவள் பக்கம் கொண்டுசென்றான். பதற்றத்துடன் அவள் வழுவழுப்பான மேனியை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன். பதற்றத்தால் என் கை அவள் மேனியில் நழுவப்பார்த்தது..  

  பின் நண்பனின் சொல்படியே கீழே தட்டலும் மேலே திருகலுமாய் ஆரம்பமானது அவளுடன் உறவு. மெதுவாக என் வாயை அவள் வாயில் வைத்து அவளை ருசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் முற்றாக பருகிவிட்டேன் அவளை. அவள் என்னுள் அடங்கிவிட்டாள். அவளுடன் இருந்த பொழுதுகளில் நான் என் சுற்றியுள்ளவர்களை கூட மறந்துவிட்டேன். அவர்கள் எம்மை கவனித்தார்களோ தெரியாது. யாரும் ஒழிந்திருந்து கமெராவில் இதை பதிவு செய்துகொண்டார்களோ தெரியாது. எதையும் கவனிக்கும் மனதில் இல்லை அப்போது.  இன்பம் என்று சொல்லவா, குதூகலம் என்று சொல்லவா..அது ஒரு போதை என்றே சொல்லலாம். அவளை முழுவதுமாய் ருசித்துவிட்டேன். சில இடங்களில் கசப்பு. சிலநேரம் ஒருவித இனிப்பு. அதை சொல்லவும் முடியாது. இதற்குமேல் அந்த நாளை நினைக்கவும் முடியவில்லை. இப்போது நினைத்தாலும் எனக்கு கம்பிபோல் எழும்புகிறது குளிர்ந்ததால் கை உரோமங்கள். 

  அன்று முழுவதும் என்னுடன் இருந்தாள். இருந்தும் அவளை மறந்திருந்தேன் இந்த இரண்டு வருடங்கள். காரணம் என்னை என் தலையில் குட்டிய தாயின் நினைவு. அவை என்னை மீண்டும் அவள் பக்கம் செல்லாமல் தடுத்தது. ஆனால் இன்று மீண்டும் என்முன்னே வந்து நிற்கிறாளே..!

  இன்றைய பார்டியை ஒழுங்கு செய்த அந்த முக்கியமான நபர் அவளுடன் வந்து நிற்கிறார் என்னருகே, அவளை எனக்கு தருவிக்க. கொஞ்சம் மறுத்துப்பார்தேன், அந்த நண்பர் விடுவதாய் இல்லை. மீண்டும் அவளை ருசிக்க மனமும் இல்லை. ஆதலால் அந்த நண்பரை திருப்திப்படுத்த சின்னதாய் ஒரு முத்தம் அவளுக்கு கொடுத்து விட்டு என்ன்னருகே இருத்திக்கொண்டேன் அவளை.  அன்று அவளை முற்றாக ருசித்த போது அவள் பெயரை கேட்க மறந்துவிட்டேன். இன்று வேண்டாம் என ஒதுக்கிய நிலையில்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு அவளை பார்த்தேன்.  அவள் உடலில் ஒட்டப்பட்டிருந்த செந்நிற லேபில் சொன்னது அவள் பெயர்  'வோட்கா' (Vodka) வாம். இவளோடு உங்களுக்கும் தொடர்புள்ளதா? இருந்தால் நிறுத்திவிடுங்க, ஏனென்றால் இவள் ஒரு விபச்சாரி. பலரோட சுகங்களுக்காக தன்னோட உடலை விக்கிறதுமில்லாம அவங்களுக்கு நோயை கொடுக்கிறது விபச்சாரி என்றால் இவளும் விபச்சாரிதான். 
  இதோ நீங்க இவளிட்ட இருந்து அலேர்ட்டா இருக்குரதுக்காக இவளோட போட்டோ >>>>
  -தொடரும்..

  ஆளையும் பார்த்திட்டீங்க, ப்ரீயா ஷோவும் பாத்துட்டியல், அதனால காட்டின படம் கிளுகிளுப்பான அறிவை கொடுத்திருந்தா ஓட்டையும், கருத்தையும் போட்டுடு போங்கோ சாமியோவ்.               

  Post Comment

  37 comments:

  நிரூபன் said...

  சஸ்பென்ஸ் வைத்து, அருமையான உரை நடையில் ஒரு விழிப்புணர்வினை, மக்களிடம் சேர்ப்பதற்கு எந்த வழி இக் காலத்தில் அவசியமோ, அந்த வழியினைப் பயன்படுத்தி காத்திரமான குறுங் கதையொன்றினைத் தந்துள்ளீர்கள் சகோ.

  உங்கள் உரை நடை கவிதை கலந்த வடிவில் இக் குறுங் கதையில் வந்து தெறித்திருக்கிறது.

  balavasakan said...

  அதானே பாத்தன் நம்மாளுங்க பலான பதிவெல்லாம் எழுதுவாங்களோன்னு... அப்பயும் அடிமண்டையில உறைச்சு கொண்டுதான் இருந்தது இது வேறமட்டர்ன்னு ஆனா என்னன்னுதான் இறுதிவரை கெஸ் பண்ண முடியல..நல்ல பதிவு இறுதியில் அருமையான கருத்தும் கூட

  Unknown said...

  ஹிஹி கிளு கிளு ...ம்ம் மஞ்சள் பக்ரவுந்த் எடுத்திட்டியல் போல...வாழ்த்துக்கள்..
  ஏன்னா...இது தொடர் பதிவா???

  கிருபா said...

  அருமையான திருப்பம் சகோ வாழ்த்துக்கள்


  வாங்க இந்த பக்கம்
  ஹைகு(ஹைகு கதை)

  யோ வொய்ஸ் (யோகா) said...

  :)

  Radha N said...

  super story with goog msg.

  பிரபாஷ்கரன் said...

  இதை ஒரு சிறுகதை என்றே சொல்லலாம்

  Kiruthigan said...

  கடைசில உண்மைய மறைச்சிட்டேள்...!
  பேஷ்... பேஷ்...

  Nivisugis said...

  superp story

  Anonymous said...

  கடைசி வரை அது பெண் என்று தான் நான் நினைத்தேன், அது பெண் அல்ல போதை என்று இறுதியாக ஒரு " நச் ".. நல்ல பதிவு ...

  முத்துவாப்பா.. said...

  nice

  Kamalaruban Parameswaran said...

  இருந்தாலும் பாஸ் இப்பிடி ஒரு குருப்பு தன்னை இவன் தான் கெடுத்தான் எண்டு பழி போடுறது எனக்கு நியாயமமா படவில்லை ... தங்கட அரிப்புக்கு தாங்கள் சொறியிறது ... பச்ச பிள்ள பலியாடா ...

  Jayadev Das said...

  இதை ருசித்ததொடு நிறுத்திகிட்ட பரவாயில்லை, வேற எதையாச்சும் ருசிக்கப் போனா, வாழ்க்கையே வீண். :((

  தமிழ் இனிது said...

  தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் இனிது வலைத்தளம்.
  http://tamilinithuthiratti.blogspot.com/

  இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

  தமிழ் இனிது பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

  வாருங்கள்!
  விரல் அசைவை விசையாக்குவோம்!

  Ashwin-WIN said...

  @நிரூபன்//சஸ்பென்ஸ் வைத்து, அருமையான உரை நடையில் ஒரு விழிப்புணர்வினை, மக்களிடம் சேர்ப்பதற்கு எந்த வழி இக் காலத்தில் அவசியமோ, அந்த வழியினைப் பயன்படுத்தி காத்திரமான குறுங் கதையொன்றினைத் தந்துள்ளீர்கள் சகோ.//
  நன்றி சகோ. எல்லாமே அதுவா நடந்துட்டு.

  Ashwin-WIN said...

  @Balavasakan
  //அதானே பாத்தன் நம்மாளுங்க பலான பதிவெல்லாம் எழுதுவாங்களோன்னு... அப்பயும் அடிமண்டையில உறைச்சு கொண்டுதான் இருந்தது //
  பால்குடிங்க எல்லாம் இது வாசிக்கப்படாது..
  அடி மண்டை மட்டுமா???

  Ashwin-WIN said...

  @மைந்தன் சிவா
  //ஏன்னா...இது தொடர் பதிவா??//
  இது தொடர் பதிவில்ல பாஸ் தொடரும் பதிவு.

  Ashwin-WIN said...

  @Giruba
  //அருமையான திருப்பம் சகோ வாழ்த்துக்கள்//
  நன்றி கிருபா..

  Ashwin-WIN said...

  @பிரபாஷ்கரன்
  //இதை ஒரு சிறுகதை என்றே சொல்லலாம்//
  நன்றிங்க்னா..
  சொந்தகதை சொககதைய சொன்னதே சிருகதைன்னா மிச்சக்கதையையும் சொன்னா மெகா சீரியல் ஆகிடும் போல.

  Ashwin-WIN said...

  @Cool Boy கிருத்திகன்.
  //கடைசில உண்மைய மறைச்சிட்டேள்...!
  பேஷ்... பேஷ்//
  நோ நோ தம்பி. நாங்க ரொம்ப வெளிப்படை எதையும் மறைக்கல.

  Ashwin-WIN said...

  @கந்தசாமி.//கடைசி வரை அது பெண் என்று தான் நான் நினைத்தேன், அது பெண் அல்ல போதை என்று இறுதியாக ஒரு " நச் ".. நல்ல பதிவு ..//
  ஹா ஹா. நன்றி நன்றி.

  Ashwin-WIN said...

  @kamalaruban
  ஆடு அதுவா வந்து தலைய நீட்டிடுதுங்க்னா.
  வெல்கம் கமல் சார்.. அப்புறம் உங்க புது படம் எல்லாம் எப்டி போகுது.. நீங்கதான் என்னை வாழவச்ச தெய்வம் சார். குருவே சரணம்.

  Ashwin-WIN said...

  @Jayadev Das
  //இதை ருசித்ததொடு நிறுத்திகிட்ட பரவாயில்லை, வேற எதையாச்சும் ருசிக்கப் போனா, வாழ்க்கையே வீண். :(//
  எல்லாரும் கேட்டுகொங்கோ . தத்துவம்.

  Cable சங்கர் said...

  :)

  வடலியூரான் said...

  நல்ல சஸ்பென்ஸ் பதிவு..ஏமாத்தித் தான் போட்டீங்க அஸ்வின்

  ARV Loshan said...

  அவ்வவ்..
  சுவாரஸ்யமான திருப்பம்..
  உங்கள் கவிதை நடை நல்லாருக்கு அஷ்வின்

  Ashwin-WIN said...

  @வடலியூரான்
  //நல்ல சஸ்பென்ஸ் பதிவு..ஏமாத்தித் தான் போட்டீங்க அஸ்வின்//
  ஹா ஹா.. உங்களமாதிரி நிறைய பேர் கேட்டதால பிர்கதைய நீங்கள் எதிர்பாக்குரதுபோல மாத்தி உங்கட மெயிலுக்கு அனுப்பிவிடுரன் போதுமா... ஹி..

  Ashwin-WIN said...

  @LOSHAN
  //அவ்வவ்..
  சுவாரஸ்யமான திருப்பம்..
  உங்கள் கவிதை நடை நல்லாருக்கு அஷ்வின்//
  நன்றி அண்ணா நன்றி நன்றி.. உங்களுக்கும் ஒரு மெயில் உண்டு.

  sathishsangkavi.blogspot.com said...

  சூப்பர்...

  எதிர்பார்க்கல இம்முடிவை...

  Ashwin-WIN said...

  @சங்கவி
  //சூப்பர்...
  எதிர்பார்க்கல இம்முடிவை//
  ஹா ஹா
  நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  சக்தி கல்வி மையம் said...

  சஸ்பென்ஸ் வைத்து, அருமையான உரை நடையில் ஒரு விழிப்புணர்வினை, மக்களிடம் சேர்ப்பதற்கு எந்த வழி இக் காலத்தில் அவசியமோ, அந்த வழியினைப் பயன்படுத்தி காத்திரமான குறுங் கதையொன்றினைத் தந்துள்ளீர்கள் சகோ.////
  சகோ நிருபன் சொன்னதை நானும் சொல்கிறேன் ..
  முடிவு அருமை..

  shanmugavel said...

  கலக்கல் !

  Shiyanthan said...

  Machchn, Antha matta kathaiyaum pooduda.............
  Suda irrukkumda

  Mohan said...

  கலக்கிறாய் மச்சி...

  Ashwin-WIN said...

  @!* வேடந்தாங்கல் - கருன் *!
  நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  சு.கி.ஞானம் said...

  Super postingoo netru than naan oru vibacharikkitap poenen

  Sujiththa said...

  நான் கூட நம்பிட்டேன்,நம்ம அஸ்வினா என்று????????????
  சூப்பர் மச்சி!!!!!!!!!!!!!!!!

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner