• Thursday, June 2, 2011

  மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

  ரொம்ப நாளாவே எனக்கொரு கடமை பாக்கியிருந்துச்சு.. அத எப்டியாவது நிறைவேத்திடனும் நிறைவேத்திடனும்னு பாத்திட்டிருந்தன் இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சுது.. சிலபல நாட்களுக்கு முதல்ல (சுமார் ஆறு மாசம் தாங்க) என்னைய ஜனா அண்ணா கேட்டிருந்தார் 'டேய் அஷ்வின் தம்பி நீ 'மனம் போல் வாழ்வு ' என்ற தலைப்புல ஒரு பதிவு போடுடா எண்டு. சரி நானும் போடுவம் போடுவம் எண்டு வந்தா மனசும் உடம்பும் கொஞ்சம் இடம் கொடுக்கல. சரி இண்டைக்காவது போட்டிடுவம் எண்டு வந்துட்டன்.  


  முதல்ல எனக்கொரு டவுட்டுங்க.. இந்த மனசு மனசு என்கிறாங்களே அது என்னங்க? லவ் பண்ணுற பய புள்ளைங்கள பாத்தா '' என் மனசுல அவதாண்ட இருக்கா'' எண்டு நெஞ்சுல கையவச்சு சொல்லுதுகள்... சரி என்டுட்டு சட்டைய பிரிச்சு
  பனியன பிரிச்சு உள்ள பிளேட போட்டு பாத்தாகா அங்க மாங்கா சைசுல ஏதோ ( பய புள்ளன்ட நெஞ்சிலதாங்க கைய வச்சன், நோ பாட் இமாஜிநேஷன்ஸ்) லபக்கு லபக்குன்னு துடிச்சிட்டிருந்துச்சு.அதுக்குள்ள ரெண்டு பெரிய டியூப்பு, நாலு சின்ன டியூப்ப்ல செகப்பு கலரா ஏதோ ஓடிட்டு இருந்துச்சு. அதவிட இவங்க மனசு மனசுங்குறாங்களே அப்டின்னு ஒரு கறுமத்தையும் அங்க காணோம்.. அவன் ஆளையும் உள்ளாள காணோம். அப்டீன்னா இந்த மனசு எங்கதாங்க இருக்கு.. 

  மனசு எண்டுறது ஒவ்வொருத்தன் மூளைய ஹார்ட்டிஸ்க் (Hard Disk) மாதிரி யோசிச்சா அதுல இருக்குற C-டிரைவ் (C-Drive) தானுங்க அது. அங்க நிறைய ப்ரோக்ராம் இன்ஸ்டால் ஆகியிருக்கும். எல்லா ப்ரோக்ராமையும் ஒரே நேரத்துல ரன் பண்ண முடியாது. சில ப்ரோகிராம் அதுவாவே ரன் பண்ண வேண்டி இருக்கும். சில ப்ரோகிராம் சில பல தேவைகளுக்காக ரன் பண்ண வைக்க வேண்டி இருக்கும். இப்டி ஒரே நேரத்துல பல ப்ரோகிராம் ரன் பண்ண வேண்டி வரும்போதுதான் சிக்கல்கள் தொடங்கும். எத முதல்ல ரன் பண்ணுறது.. இது ஒருவேளை வைரஸ் ப்ரோகிராமா இருக்குமோ? இதால ஏதும் பிரச்சன (வைரஸ் தொற்று) வருமோ என்ற கேள்விகள் வரும் போதுதான் முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படுது. இனியும் கம்பியூட்டர் பத்தி கதைக்கப்போனா, பசுவ பத்தி எழுத சொல்ல பசுவ கொண்டே மரத்துல கட்டிடு மரத்த பத்தி எழுதின மாதிரி ஆயிடும். அதனால மாட்டார்க்கு வருவம்.

  இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கையில மனம் போல வாழ்கிறதென்பது பெரும் குதிரைக்கொம்பாவே இருக்குது. மனம் தன்னுடைய ஆசைகள் விருப்பங்களை எல்லாம் மூளையின் பெரும்பான்மை ஆதிக்கத்தில் சிறைகொடுக்கிறது. மனம் சிறகை விரித்து பறக்க நினைக்கும் போதெல்லாம், மூளை சமூகத்தை காட்டி, பொறுப்புகளை கூட்டி சிறகுகளை கத்தரிக்கிறது.

  ஆனாலும் மனமும் பெரும்பான்மையாக ஆட்சி செய்த காலமும் உண்டு. அது வசந்தகால நினைவுகள்.. இளம் பருவகால தூறல்கள். குழந்தைகள் சிறுவர்கள் என்ற பெயரில் நாம் கடந்துவந்த பருவகாலம் அது. அங்கே மூளைதான் சிறுபாண்மை இனம். அந்த ஆட்சியில்.....
  எத்தனை உறவுகள்கூடி எத்தனை விளையாட்டு - அத்தனையும் மனம் சொன்னபடி
  உடைகள் கூட மறந்து உற்சாகம் கூடிப்புரண்டோம்- அத்தனையும் மனம் விட்டவழி.
  பிறந்த கல்வீட்டை விட நாம் வளர்ந்தது அதிகம் ஆசையாய் கட்டிய மணல்வீட்டிலும், வீட்டின் பின்புறம் நாம் கூடிப்புனைந்த குடில் வீட்டிலும்- அத்தனையும் மனம் கேட்ட வரம்.
  மழையினில் குளித்தோம் அன்னை சேலையில் உடல் புளிந்தோம் - அத்தனையும் மனம் தந்த வரம்.
  கையினில் விரல் போதவில்லையென்போம் எம் நட்புகள் விரல்கோர்த்து புடை சூழ்ந்து செல்ல.
  நட்பின் கரம் முகர்ந்து கறிசோறின் காரம் கண்டு கொள்வோம் சிலவேளை
  வீட்டின் அறுசுவையிலும் ஏழாம் சுவை கண்கொண்டு கொள்வோம் கூட்டாஞ்சோறில் - இவை அத்தனையும் மனம் தந்த சுவை. இவை கடந்து போனவை.

  என்று எம்மில் மனதின் ஆதிக்கம் வீழத்தொடங்கியதோ அன்று சுமைகள் வீறுகொண்டெழத்தொடங்கின. புல்வெளி,புதர், மேடு , பள்ளம், பனைவெளி , கரிச்சம்காடு, களத்துமேடு , கம்மாயி , கற்சாலை என்று இஸ்டப்படி நடந்த கால்களிற்கு வராத வலி, மூளை இட்ட தார் ரோட்டில் லாடங்களுடன் நடக்கையில் வந்தது. கூட கைகோர்த்து களித்த நட்பிற்கும் அதே லாடங்கள். அந்த நட்பை சந்திக்கையிலும் மூளைதான் முந்திக்கொண்டு பேசுகிறது. அதற்கு பிறகு நேரம் இருந்தால் தான் மனத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த அனுமதி. அந்த நட்போடு எவ்வளவு தூரம்தான் பொய் மறந்து புரளமுடியும் மெய் தேடும் வாழ்க்கையில்..?

  மனம் குணம் தேடச்சொல்ல, மூளை பணம் தேடச்சொல்கிறது. நகைச்சுவைகளுக்கு சிரிக்கும்போதும் கூட, மூளை சமூகம் உன்னைப்பார்க்கிறதா என்று பார்த்து சிரி என்கிறது. பார்த்துவிட்டு வந்தால் நகைச்சுவை மறந்துபோய் விடுகிறது. கோபம் மிகையிட்டாலும் அப்போதும் மூளையினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு அப்போதும் சிரி என்கிறது. இந்த பெரும்பான்மை ஆட்சியில் உணர்வுகள் மனத்தோடு சேர்ந்து குப்பையில் வீழ்கிறது கையாலாகாதவைகளாய்.

  மனம் போல் வாழ நினைத்திருந்தால் இன்று எம்நாட்டில் பலர் மாவீரர்களாய் உறங்கிக்கொண்டிருப்பார்கள். மூளையில் வாழ்வதனால் மரத்தவர்களாய் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆக இன்று எவரும் மனம் போல் வாழ்வது இல்லை . மூளையிடம் மனதை அடகுவைத்துவிட்டுத்தான் வாழ்வை ஓட்டுகிறோம். நாம் வாழவில்லை.. வாழ்க்கைக்காலத்தை ஓட்டுகிறோம். இன்று மனம் சொன்னபடி வாழ்வோர் மூன்று ஜாதியினர்:
  1.பணம் மேல் புரள்வோர்
  2.சாமியார்கள்
  3.தீவிரவாதிகள்
  இருந்தும் மனம் போல வாழ்ந்தால் அது விபரீதம். இன்றைக்கு தெருவிலே மூன்று சம்பவங்களை பார்க்கிறேன்
  1. அழகான(கச்சிதமான) பெண்
  2. கடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு உயர் ரக கார்
  3.நோ-பார்க்கிங்கில் வண்டி நிறுத்தியதால் எனிடம் லஞ்சம் கேட்கும் போலிஸ்.

  இந்த மூன்று சம்பவங்களும் எனக்கு, என் மனதில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ள வேண்டுமானால் நான் முன்னர் சொல்லப்பட்ட மூன்று வகை மனிதருள் ஒருவனாய் இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்தால் மூன்றும் ஆபத்தே. இதுவும் விபரீதமே.

  இப்படி இருக்க, இவ்வளவு நேரம் அலம்பிட்டன். கடைசியாக ஒரு முடிவுக்கு வர வேண்டாமா..?  வாழ்க்கையை களிப்பதற்கு - மனம் சொன்ன வழி, வாழ்க்கையை ஓட்டுவதற்கு-மூளை சொன்ன வழி, வாழ்க்கையை வாழ்வதற்கு மனமும் மூளையும் சேர்ந்து நடத்தும் வழி.

  *தத்துவம் கேட்டீங்கதானே அப்டியே உங்க கருத்தையும் , ஓட்டையும் போட்டுட்டு போங்கோ ப்ரெண்ட்ஸ்..*

  Post Comment

  12 comments:

  Unknown said...

  ம்ம் ஜோசிக்க வேண்டிய விடயம் தான் பாஸ்!!

  ISR Selvakumar said...

  அஷ்வின்,
  உங்க அண்ணா ஜனா கேட்டுக் கொண்டது போல, இந்த செல்வா கேட்டுக் கொள்கிறேன்.

  உணர்வு என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுதுங்கள் பார்க்கலாம்.

  முன் குறிப்பில் எழுத வேண்டியதை பின் குறிப்பாக எழுதுகிறேன்.
  ---- நீங்கள் அபாரமாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதி அசத்துங்க.

  sinmajan said...

  கன்பியூஸ் பண்ணீட்டீங்க பாஷ் ;-)

  ஷஹன்ஷா said...

  குழப்பீட்டீங்களே சார்.. மூளையை பிச்சுக்கிறேன்..

  Jana said...

  என்னைய ஜனா அண்ணா கேட்டிருந்தார் 'டேய் அஷ்வின் தம்பி நீ 'மனம் போல் வாழ்வு ' என்ற தலைப்புல ஒரு பதிவு போடுடா எண்டு. சரி நானும் போடுவம் போடுவம் எண்டு வந்தா மனசும் உடம்பும் கொஞ்சம் இடம் கொடுக்கல. சரி இண்டைக்காவது போட்டிடுவம் எண்டு வந்துட்டன்.

  நன்றி அஷ்வின். என் வேண்டுகோளுக்கு இணங்க எழுதும் ஆறாவது நபர் நீங்கள் என்று நினைக்கின்றேன். :)

  நிரூபன் said...

  வணக்கம் சகோதரம், அற்புதமான ஒரு ஆராய்ச்சிப் பதிவினைத் தந்துள்ளீர்கள். மனம் போல வாழ நினைப்பதென்பது எனது பார்வையில் இக் காலத்திற்குச் சரிப்பட்டு வராது என்று நினைக்கிறேன். காரணம் எங்கள் மனம் சிந்திக்கும் போது. அல்லது மன விருப்பிற்கமைவாக எல்லா விடயங்களையும் நிறை வேற்ற முடியாது. ஆகவே வாழும் வாழ்வின் இயல்பறிந்தும்,
  மூளையின் குறிப்பறிந்தும் வாழ்வது தான் இக் காலத்திற்கு ஏற்ற செயல் சகா.

  Kiruthigan said...

  நீங்க ஒரு சிட்டி விஞ்ஙானி பாஸ்...
  நாங்க என்னிக்கு தான் தொழில் கத்துக்க போறமோ...!
  //மனம் போல் வாழ நினைத்திருந்தால்// படிச்ச பள்ளிக்கூடம் அப்புடி...

  Ashwin-WIN said...

  @r.selvakkumar
  நன்றி செல்வா உங்க அன்புக்கு. முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக.

  Ashwin-WIN said...

  @sinmajanகண்பியூஸ் ஆகிடாதீங்க. எவ்வளவு அடிச்சாலும் தெளிவா இருக்கணும்.

  Ashwin-WIN said...

  @Cool Boy கிருத்திகன்.
  //நீங்க ஒரு சிட்டி விஞ்ஙானி பாஸ்...
  நாங்க என்னிக்கு தான் தொழில் கத்துக்க போறமோ...!//
  ஆமா அப்டி என்ன தொழில் கத்துக போறீங்க தம்பி?
  //மனம் போல் வாழ நினைத்திருந்தால்// படிச்ச பள்ளிக்கூடம் அப்புடி..//
  ஆமா ஆமா...படிச்ச ஆக்கலும் அப்பிடி.

  இராஜராஜேஸ்வரி said...

  வசந்தகால நினைவுகள்.. இளம் பருவகால தூறல்கள்.

  Nice..

  Jawid Raiz said...

  நல்ல பதிவு.. நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள் அஷ்வின்

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner