• Monday, June 13, 2011

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்

    நண்பர்களே கதையின் பாகம் ஒன்றை படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்துவரவும். இல்லாட்டி புரியாதுங்க மாட்டார்...பாகம்-1 க்கு

    உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா    சங்கீதா வழமையப்போல அதே சிரிப்போட கதவை திறந்தாள். அதுதான் எப்பவும் எனக்கு போர்ன்வீட்டா. நான் செருப்ப கழற்றிட்டு உள்ள போகமுதல் அவள் சட்டென்று போய் என்கதிரையை எடுத்து வைத்து அங்கங்க சிந்தியிருந்த சாப்பாடு துண்டுகளை தட்டிவிடுவாள். அப்படி இருந்தும் ஒன்றிரண்டு துகழ்கள் காட்டிக்கொடுத்திடும். காலைச்சாப்பாட்டடை. அப்படித்தான் இன்றைக்கு ''பாண் சாப்பிட்டிருக்கிறியல் போல'' என்று கொஞ்சம் வாயை சுழித்துக்கொண்டு கேட்க பதிலாய் வந்த அந்த சிட்டுக்குருவிச்சிரிப்பை ரசித்தவாறே கதிரையில் அமர்ந்தேன்.

    அப்ப தொடங்கின சனி என்ன விடவே இல்லை...

    அவள் பாவம் இரவிரவா படிச்ச பாடத்தில உள்ள டவுட் எல்லாம் ஒண்ணா தூக்கிவச்சு கேட்க ஆரம்பிச்சுட்டாள். எனக்கு இரவிரவா சாப்பிட்ட சாப்பாடு வயுத்துக்க வேலைய காட்ட ஆரம்பிச்சுடுது. 

    ‘’ சேர் இந்த ட்ரான்சிஸ்டர்ல ஒருவழியாத்தான் கரெண்ட் போகுமா? மத்தப்பக்கம் வோல்டேஜ் குடுத்தா போகாதா?’’ எண்டு தொடங்கிட்டாள். எனக்கோ எந்த வழியா போகுது எப்படி போகப்போதோ எண்டு குடைஞ்சிட்டிருந்துச்சு உள்ளுக்க. இருந்தும் இடைக்கிட மூச்சை இழுத்துக்கொண்டு அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டேன்.


    வயித்துக்க ஒரு ஈழப்போரே நடந்திட்டிருந்துச்சு. எத்தனையாம் கட்டப்போர் எண்டுதான் தெரியேல. ஆனா இன்னும் அபாய கட்டத்த நெருங்கேல. ஒரு கைய வயிற்றின் இடப்பக்க பகுதில வச்சுக்கிட்டே அவளுக்கு டிரான்சிஸ்டர் படத்தை வரைஞ்சு விளங்கப்படுத்திட்டிருந்தன். வயிறுதான் வீம்பு பண்ணினாலும் வாய் வழமையான வம்பு தும்பு கலந்த சுவாரசியமான உதாரணங்களோட அவளின் புன்முறுவல்களை எதிர்பார்த்து விளையாடிட்டிருந்துது.

    அப்பப்போ அவள் கேள்விகளை தேடும் நேரத்துல என்ட வயிற்றுப்போருக்கான காரணத்த தேடிட்டிருந்தன். எல்லாம் நேத்து இரவு திண்ட புட்டுக்கொத்து செய்த வேலைதான் மனம் ஆணித்தரமாய் நம்பியது. வழமைக்கு மாறா கொஞ்சம் மணம் இருக்கும்போதே யோசிச்சிருக்கணும். இருந்தாலும் கொழும்பு கடை சாப்பாடுகளில அந்தந்த சாப்பாடுகளை விட வேறு மணங்கள்தான் ஆக்கிரமிச்சு நிற்கும். நண்பர்கள் பகிடியாக சொல்லுவார்கள்
    ‘’ டேய் கொழும்பில வந்து மணத்த பாத்தா அப்புறம் சாப்பிட முடியாதுடா, ஒரு கையால மூக்கபொத்திட்டு மற்ற கையால சாப்புடுடா'' எண்டு. நகைச்சுவையா இருந்தாலும் உண்மையும் இருக்கத்தான் செய்யுது.

    வழமையா வாங்கிற இடத்துலதானே வாங்கினி எண்டு நேற்றும் கேட்டன் நண்பனை. அவனும் '' நளபாகத்துலதான் வாங்கினான்’ எண்டு அடிச்சு சொன்னான். இங்க நளபாகம் கடைதான் எங்களுக்கு புட்டுகொத்து எண்டா. ஆனாலும் அங்க போனா ஒருவித மணம் இருக்கும். இதுக்காகவே பலமுறை வீட்ட வாங்கிட்டுவந்துவச்சு சாப்பிட்டிருக்கிறம். கடைதான் அப்பிடி ஆனாலும் புட்டுகொத்துக்கு குறையில்லை. ரெண்டு புட்டுகட்டிய எடுத்து அத அப்படியே துகழ் துகழா பிரித்து அதோட வறுமையில சிக்கின வெங்காயமும் லீட்சும் போட்டு கூடவே ரெண்டு முட்டையும் போட்டு கொத்தி தருவாங்கள். இங்க பலபேர் அதற்கு அடிமை. நேற்றும் அப்படிதான் இருந்துச்சு. ஆனாலும் இண்டைக்கு இப்படி முரண்டு பிடிக்குது அது. அத காலாகாலத்துல அனுப்பி வைக்காம சங்கீதாவ தேடிவந்தது என்னோட பிழைதான். ஆனாலும் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாவே முடியல.

    ‘’இந்தாங்கோ தம்பி டீ'' எண்டு புட்டு ஞாபகத்தை, புக்கு பக்கம் திருப்பினாங்க அவ அம்மா. வழமையா டீயோட மிக்சர் அல்லது பிஸ்கற்தான் வரும். இண்டைக்கு என்னமோ என்னை ஒட்டுமொத்தமா கவிழ்க்க ‘’பலாப்பழம் ‘’ வந்திருந்துச்சு. அப்படியே காயம் படாம பிடுங்கி அழகா நிக்கவைக்கப்பட்டிருந்தது நாலு சுளை. பலாப்பழம் உடன பிடுங்கியிருந்தா மேலாள கொஞ்சம் தண்ணி தெளிச்சமாதிரி ஈரலிப்பா இருக்கும். கொஞ்சம் காய்ந்திருக்கிறத பாத்தா சங்கீதா இவள்தான் நான் வரமுதலே எனக்காக பிடுங்கி வச்சிருக்கணும். என்ட கணிப்பை உறுதிசெய்யுறமாதிரியே
    ‘’யாழ்ப்பானத்துல இருந்து அம்மா கொணர்ந்தது அண்ணா ‘’ என்றாள்.  ம்ம்.. பின்புதான் அவள் கைகளை பார்த்தேன் அங்கங்கே பலா பால் ஓட்டியிருந்துது அவளை பிரிய மனமில்லாமல். அவள் பேச்சை விடவும் அந்த பலாப்பழம் அவ்வளவு இனிப்பாய் இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும் யாழ்ப்பாணம் என்றதுக்காவும், காயம் படாம பிடுங்கின கைக்காகவும் ரெண்டு சுளை எடுத்துச்சாப்பிட்டேன்.
    இப்போது உள்ளே எதிர்த்தாக்குதல்கள் அதிகமாச்சுது. இலங்கை ஆர்மிக்கு(ARMY) கூட்டாக இந்தியன் ஆர்மி வந்த மாதிரி. படைநடவெடிக்கை ஒட்டுமொத்தமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுது. பாவம் நான், கொஞ்சம் தண்ணி குடிக்ககூட போர்நிறுத்தம் செய்யேல.

    சங்கீதா விடுவதாய் இல்லை. அவள் கையுல இருக்கிற டவுட் எழுதிவச்ச பேப்பர் கணக்க பாத்தாக்கா இண்டைக்கு நான் வீடுபோக மதியம் தாண்டிடும். பேசாம இங்கே இவளகேட்டுட்டு ஒருக்கா டாய்லெட் போயிட்டு வந்திடுவமோ எண்டு யோசிச்சன். இருந்தும் பகட்டு மரியாதை அதற்கு இடம்கொடுக்கேலை. வழமையா சங்கீதாவீட்டு சுவர்க்கடிகார வினாடி முள்ளை நகரவேண்டாமென்று கெஞ்சுற நான் இன்றைக்கு மணிமுள்ளிடம் மண்டாடவேண்டியதா போச்சு. ஒருமாதிரி ஒன்றை முத்தமிட்டது மணிமுள். இதுதான் நேரம் என்று உணர்ந்த நான் 
    ‘’மிச்ச டவுட்டுகளை அடுத்தகிளாஸ் பாக்கலாம். வேணும்னா அடுத்த வகுப்ப கூட நேரம் எடுக்குறன்’’ என்டுட்டு சைக்கில தூக்கிட்டு ஓங்கி உலக்கினதுதான் இப்ப வெள்ளவத்தை ஐ. எப். எஸ்(IFS) ல நிக்குறன். இன்னும் கொஞ்சதூரம்தான் கொஞ்சம் பொறுத்துக்கோ எண்டு வயித்த தடவிக்கொண்டேன்.


    பின்னால ஒருத்தன் அமளியா கோர்ன் அடிக்குறான்.. திரும்பி பார்த்து வழிவிடுவம் எண்டு திரும்ப கண்ணுல தட்டுபட்டுடுது ‘’ஹோட்டல் நளபாகம்’’ போர்ட். அத கண்டவுடன வயித்துக்க இருந்த சொந்தக்காரங்களெல்லாம் சந்தோசத்துல துள்ளிக்குதிக்க என்ட கண்ணும் சிவக்க வெளிக்கிட்டுடுது. கடவுளே இப்படியும் ஒரு சோதனையா என நினைத்துக்கொண்டேன். 

    ஆஹ்ஹ்.. வீட்டு கேற் தெரிகிறது. ஐ.நா அறிக்கைய கண்ட வன்னி ஜனங்க மாதிரி மனசுக்கு ஒரு நிம்மதி, சந்தோசம். ஆனா சந்தோசத்த அதிகமா காட்ட நெனைச்சா உள்ள இருக்கிற காடையர், குண்டர்கள் எல்லாம் என்ட குடல பிரிச்செடுத்துக்கொண்டு பாய்ஞ்சிடுவாங்கள். சைக்கில வீட்டு சுவரோட சாய்த்ததுதான் ஞாபகம் அடுத்தகணம் கழிவறையிலதான் நினைவு திரும்பிச்சு.. உள்ளே ஒவ்வொரு போர்க்குற்றவாளிகளை வெளிஉலகுக்கு இனங்காட்டி தண்ணிய பிளாஷ் பண்ணும்போது என்ன ஒரு சுகம். அப்பாடா. 

    ஒரு பெண்ணோட கட்டில பகிர்ந்துகொள்ளுற சுகத்தை விட ஆயிரம் மடங்கு சுகம் இதுதான். என்னைய ஆட்டிப்படைச்ச ஒவ்வொருத்தனையும் நச்சு நச்சுன்னு துரத்தியடிக்கேக்க உச்சக்கட்ட இன்பத்தையே அனுபவிக்கிறேன். இது யாரும் தரமுடியாத சுகம். இப்போது இந்த உலகில் என்னைவிட யாரும் சந்தோசமாக இருந்திருக்கமுடியாது. பெரிய மனத்திருப்தியோடு, வெற்றிகரமாக போராட்டத்தை முறியடித்த சந்தோசத்தில் கதவைத்திறந்து வெளியே வருகிறேன். 
    ‘’ மச்சான் சாப்பிட போறேன் நளபாகத்துக்கு, உனக்கும் வாங்கிட்டு வரட்டுமாடா?’’ இது அதே அப்பாவித்தனமான நண்பன்.  

    முற்றும்.
    (யாவும் கற்பனை )
    நண்பர்களே என்னமோ எழுதவேண்டும் என நினைத்து எழுதவில்லை. குறைநிறைகள் இருப்பின் சொல்லிச்செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் செம்மைப்டுத்தும்.
    பி.கு.: விடயத்தை சொன்ன விதத்தில் சாருவின் 'முள்' சிறுகதை தாக்கம் பல இடங்களில் தவிக்கமுடியாததாகிவிட்டது. இதுக்கெல்லாம் காரணம் அந்த மிஸ்டர் மருதமூரான். சும்மா இருக்கேலாம என்னைய 'முள்' சிறுகதைய வாசிக்க வச்சுடுது மனுஷன்.

    Post Comment

    23 comments:

    kamalaruban said...

    பாஸ் சூப்பர் ... ஆனாலும் class எடுக்கிற பேரில *#@? ... இந்த பிழைப்புக்கு ஒரு மூடி தண்ணீக்க குதிச்சு சாகலாம் ...

    kamalaruban said...

    Boss appidiye antha ponoda address and phone no... pls ...

    JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

    அசிங்கத்தையும் அழகா சொல்லி இருக்குறீர்கள். :) நல்ல கற்பனை. வளமான எழுத்தோட்டம்

    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    நல்ல தமிழ்..

    நிரூபன் said...

    மச்சி, கதையின் போக்கும், முதற் பாகம் படிக்கையில் இருந்த இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பும் முற்று முழுதாக மாறும் வண்ணம் ஒரு திருப்பு முனையுடன் கதையினை நகர்த்தியிருக்கிறீங்க.

    வட்டார மொழி நடை, தேவையான் இடங்களில் ஒப்புவமை, எனக் கலக்கலாக அருமைய மொழி நடையில் கதையினை நகர்த்தியிருக்கிறீங்க.

    அப்புறமா வாங்களேன் நாம ரெண்டு பேரும் ஒரு புட்டுக் கொத்துச் சாப்பிடுவம்...
    ஹி..ஹி..

    மைந்தன் சிவா said...

    மவனே ...
    உச்ச இன்பமாம் உச்ச இன்பம்....பிச்சு பிச்சு...

    # கவிதை வீதி # சௌந்தர் said...

    அழகான கற்பனை மற்றும் எழுத்து வடிவம்...
    தமிழ் கொஞ்சம் புரிந்து படிக்க வேண்டியிருக்கிறது...
    தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..

    Ashwin-WIN said...

    @kamalaruban
    //பாஸ் சூப்பர் ... ஆனாலும் class எடுக்கிற பேரில *#@? ... இந்த பிழைப்புக்கு ஒரு மூடி தண்ணீக்க குதிச்சு சாகலாம் .//
    நோ நோ உலக நாயகன் பப்ளிக் பப்ளிக். யாவும் கற்பனை புரிசுக்கொப்பா..
    அதெப்டி ஒரு மூடி தண்ணிக்க குதிச்சு சாகுரதுக்கு என்னைய எறும்பு எண்டு நெனச்சியா பயலே??

    Ashwin-WIN said...

    @kamalaruban
    //Boss appidiye antha ponoda address and phone no... pls ..//
    நாளைக்கு கனவுல வரும்போது நீ மறக்காம எனக்கு ஞாபக படுத்து கேட்டு சொலுறன்.

    Ashwin-WIN said...

    @JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்)
    //அசிங்கத்தையும் அழகா சொல்லி இருக்குறீர்கள். :) நல்ல கற்பனை. வளமான எழுத்தோட்டம்//
    நன்றி ஜவிட் வருகைக்கும் கருத்துக்கும்.

    Ashwin-WIN said...

    @!* வேடந்தாங்கல் - கருன் *!
    //நல்ல தமிழ்.//
    நன்றி நன்றி.

    சந்ரு said...

    கலக்குறிங்க கதை எழுதி வாழ்துக்கள்...

    தொடர்ந்தும் எழுதுங்க

    Nesan said...

    அழகான உவமைகள் மூலம் கதையை நகர்த்தி சுவாரசியம் கூட்டியிருக்கிறீங்கள் அப்புறம் போவம் ஒரு புட்டுக்கொத்து சாப்பிட!

    ஜீ... said...

    //இண்டைக்கு என்னமோ என்னை ஒட்டுமொத்தமா கவிழ்க்க ‘’பலாப்பழம் ‘’ வந்திருந்துச்சு//
    :-)

    //நளபாகம் பற்றிய வர்ணனை! நீங்கள் சொன்னது போல எப்போதுமே ஒரு சாப்பாட்டு மணம் அங்கே மூச்சுத் திணறடிக்கும்!
    ம்ம்ம்...புட்டுக்கொத்து - ஒரு நாளிரவு சாப்பிட்டு ஒத்துகொள்ளாமல் 12 தரம் மாத்தி மாத்தி வாந்தியெடுத்து அதோட விட்டதுதான்! :-)//

    //இது யாரும் தரமுடியாத சுகம். இப்போது இந்த உலகில் என்னைவிட யாரும் சந்தோசமாக இருந்திருக்கமுடியாது.// :-)

    அருமை! :-)

    Ashwin-WIN said...

    @சந்ரு
    நன்றி சந்ரு நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    Ashwin-WIN said...

    @Nesan//அழகான உவமைகள் மூலம் கதையை நகர்த்தி சுவாரசியம் கூட்டியிருக்கிறீங்கள் அப்புறம் போவம் ஒரு புட்டுக்கொத்து சாப்பிட!//
    ஹா ஹா வாங்க வாங்க. ஒரு போத்தில் தண்ணியும் கொண்டு வாங்கோ

    Ashwin-WIN said...

    @ஜீ...
    ///நளபாகம் பற்றிய வர்ணனை! நீங்கள் சொன்னது போல எப்போதுமே ஒரு சாப்பாட்டு மணம் அங்கே மூச்சுத் திணறடிக்கும்!
    ம்ம்ம்...புட்டுக்கொத்து - ஒரு நாளிரவு சாப்பிட்டு ஒத்துகொள்ளாமல் 12 தரம் மாத்தி மாத்தி வாந்தியெடுத்து அதோட விட்டதுதான்! :-)//
    ஹா ஹா அப்போ நீங்களும் பட்டியலோ மாப்பு..

    shiyanthan said...

    இண்டைக்குத்தானே விளங்குது, ஏன் கம்பஸ்க்கு கூட வராம கிளாஸ் எடுக்கிறாய் எண்டு,
    இதெல்லாம் ஒரு.............,
    திருந்தாத ஜென்மங்கள்

    Ashwin-WIN said...

    @shiyanthan
    //இண்டைக்குத்தானே விளங்குது, ஏன் கம்பஸ்க்கு கூட வராம கிளாஸ் எடுக்கிறாய் எண்டு,
    இதெல்லாம் ஒரு.............,
    திருந்தாத ஜென்மங்கள்//
    நோ அப்படி எல்லாம் பேசக்கூடாது மச்சி... போராமைடா உனக்கு என் சந்கீதாமேல..

    மகாதேவன்-V.K said...

    அருமை உங்கள் தளத்தை ஒரு வட்டம் போடவேண்டும் வருகிறேன் சகோ கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது

    M.Shanmugan said...

    அண்ணா கிளாஸ் எடுத்து கலக்கிறார் போல. புட்டு கொத்து நாங்க கம்ஸிகால சாப்புடூரம் பின்விளைவுகள் பற்றி யோசிக்கவேணுமோ?

    Ashwin-WIN said...

    @மகாதேவன்-V.K
    //அருமை உங்கள் தளத்தை ஒரு வட்டம் போடவேண்டும் வருகிறேன் சகோ கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது//
    வாங்க சகோ.. வட்டம் இல்ல சதுரம் முக்கோணம் எது வேணும்னாலும் போடுங்கோ.. ஆனா போட்டதுக்கு தடயம் இருக்கணும் :)))

    Ashwin-WIN said...

    @M.Shanmugan
    //அண்ணா கிளாஸ் எடுத்து கலக்கிறார் போல. புட்டு கொத்து நாங்க கம்ஸிகால சாப்புடூரம் பின்விளைவுகள் பற்றி யோசிக்கவேணுமோ//
    ஹா ஹா. தம்பி மொதல்ல நாம ஹம்சிகால இருந்து சரிவராமத்தான் நளபாகத்துக்கு மாறினம் :))))

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner