• Sunday, June 12, 2011

  உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா

  காலி வீதியில் புயல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்னுடைய சைக்கிள்.   அப்பாவிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளையின் கால்களைப்போல் என்கால்கள் சைக்கிள் மிதியை மாறிமாறி உதைக்கின்றன. என்னால் பக்கத்தில் சீறிக்கொண்டுவரும் வண்டிகளைக்கூட கவனிக்கமுடியவில்லை. தொண்நூற்றாறில் கிபிர் வருகுதெண்டு அம்மாண்ட சீலைய பிடிச்சுக்கொண்டு பங்கருக்குள் ஓடியதுக்குப்பின் இன்றுதான் இவ்வளவு வேகமாக என்கால்கள் ஓட்டம்கொள்கிறது. 


  'ஏன் இப்படி குறுக்கும் மறுக்குமாக ஒடுகிறாய். காவலிப்பயலே ஒரு சைக்கிள் வைச்சுக்கொண்டு இவ்வளவு ஆட்டமா.??'' அந்த பூட்டிய பென்ஸ்கார் கண்ணாடிக்குள் இருக்கும் வெள்ளைச்சட்டை திட்டியது காதில் ஒலிக்கத்தான் செய்கிறது.ஆனால் எதையும் கண்டுகொள்ளும் சுதந்திரத்தை கால்கள் வழங்கவில்லை.

  வேளைக்கே வந்திருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லாம. இந்த ஓட்டம் ஓடவேண்டி இருந்திருக்காது. எல்லாம் இவள் பாவி சங்கீதாதான் காரணம். ஏன் இப்படிச்செய்தாள் இன்று என்று பார்த்து. சும்மா இல்லை இன்று மூன்று மணித்தியாலங்கள். காலையில ஹன்சிகாவுக்கு முத்திமிட அவள் உதட்டை என் உதடு தொடும் விளிம்பில் கால்பண்ணி
    '' சார் இன்றைக்கு ஒம்பதுமணிக்கு ப்ரீயா நீங்க '' என்று கேட்டாள். அவள் குரலைக்கேட்தால் பிஸி என்றுகூட சொல்லவிடாமல் பதறிக்கொண்டு ஒப்புதல் அளித்துவிட்டது நாக்கு. இன்னும் இரண்டுமணி நேரம் இருக்குதுதானே எண்டு ஹன்சிகாவின் உதட்டை தேடி நித்திரைக்குதிரையை தட்டிவிட்டேன். 
  அவள் உதட்டுக்குப்பதில் இவள் குரல் எதிரொலித்தது 'ஹலோ ஹலோ..ஹலோ.. ப்ரீதானே.. இண்டைக்கு.. ஹலோ..!''  அதுவே தாலாட்டாகவும் போச்சுது. மீண்டும் அதே குரல் ''ஹலோ சார் '' இவ்வளவு நேரமும் பதிலளிக்காத நான் கனவுதானே என்று கொஞ்சம் ஜொள்ளு வழிய '' சொல்லுடா'' என்றேன். மீதி உளறல்களை நா தொடங்கும் முன்பே போனின் உஷ்ணம் இது நனவென்று உணரவைத்துவிட்டது.. தடுமாறி கொஞ்சம் பேச்சை வரவழைத்து 
  '' ஒம்பது மணிக்கு சுவரா வாறன் சங்...'' என்றேன் அவள் பெயரை முழுவதுமாய் உச்சரிக்க தைரியமில்லாதவனாய். 
  ''சார், ஒம்பதரை ஆச்சுது '' கொஞ்சம் இழுத்துக்கொண்டே சொன்னாள். 
  ஆம் போனை இறக்கிப்பார்த்து சரி செய்துகொண்டேன். சமாளித்துக்கொண்டு ''ஒரு வேலையா போச்சுது வெயிட் பண்ணுங்க வாறன்'' எண்டுட்டு அஞ்சு நிமிசத்துல சேட் ஜீன்ஸ் போட்டு வெளிக்கிட்டேன். இரவுதான் குளித்தாயே என்று குளிக்கவும் மறுப்புத்தெரிவித்துவிட்டது கையில் எந்நேரமும் ஒட்டியிருக்கும் கடிகாரம். இருந்தும் பல்லு விளக்கிக்கொள்ள மறக்கவில்லை , அவள் அருகில் இருந்து பேசவேண்டுமே என்பதால். 

  அவள்வீடு தெஹிவளையில்தான் இருக்குது. வழமையா பஸ்ஸில்தான் போவேன். ஆனாலும் கொஞ்சம் இறங்கி நடந்து ஒரு ஒழுங்கைக்குள் செல்லவேண்டும் அவள் வீட்டுக்கு. அந்த அலுப்பில இண்டைக்கு சைக்கில தூக்கிக்கொண்டு கிளம்பிட்டன். சைக்கிள்ள போனதுக்கு இன்னொருகாரணம், பஸ்ல போனால் இந்த தனியார் பஸ்சுகளை நிறுத்திவச்சு போலீசு மாமாக்கள் லைசென்சு இருக்கா அந்த புக் இருக்கா இந்த புக் இருக்கா எண்டு பாத்து நூறு இருநூறு வாங்கிட்டு விடுறதுக்குள்ள சங்கீதா மறுபடியும் கால் பண்ணி ''சார் லேட்டாகும்னா நாளைக்கு பார்ப்பம் சார்'' எண்டுவாள். அதனாலேயே சைக்கிள்ள சிட்டா பறந்துட்டன்.

  சங்கீதா வழமையப்போல அதே சிரிப்போட கதவை திறந்தாள். அதுதான் எப்பவும் எனக்கு போர்ன்வீட்டா. நான் செருப்ப கழற்றிட்டு உள்ள போகமுதல் அவள் சட்டென்று போய் என்கதிரையை எடுத்து வைத்து அங்கங்க சிந்தியிருந்த சாப்பாடு துண்டுகளை தட்டிவிடுவாள். அப்படி இருந்தும் ஒன்றிரண்டு துகழ்கள் காட்டிக்கொடுத்திடும். காலைச்சாப்பாட்டடை. அப்படித்தான் இன்றைக்கு ''பாண் சாப்பிட்டிருக்கிறியல் போல'' என்று கொஞ்சம் வாயை சுழித்துக்கொண்டு கேட்க பதிலாய் வந்த அந்த சிட்டுக்குருவிச்சிரிப்பை ரசித்தவாறே கதிரையில் அமர்ந்தேன்.

  அப்ப தொடங்கின சனி என்ன விடவே இல்லை................. மீதி பாகம் - 2இல்

  நண்பர்களே என்னமோ எழுதவேண்டும் என நினைத்து எழுதவில்லை. குறைநிறைகள் இருப்பின் சொல்லிச்செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் செம்மைப்டுத்தும்.

  Post Comment

  22 comments:

  Unknown said...

  ஹிஹிஹி கொய்யாலே இதுவாடா நடக்குது???இரு வாறன்

  Jawid Raiz said...

  Hehehee... Nice flow.. Waiting for the second part

  யோ வொய்ஸ் (யோகா) said...

  :)

  Anonymous said...

  யாரு அந்த பொண்ணு ...)

  நிரூபன் said...

  உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா//

  கிளி கிளு தலைப்பு வைக்கிற நானே இன்று முதல் திருந்தி விட்டேன் என்று அறிக்கை விடுறேன், ஆனால் நீங்க புதுசாப் பாருங்க ஒரு தலைப்பு வைக்கிறீங்க..அவ்....

  என்ன மாதிரி ஒரு தலைப்பு வைக்கிறாங்க...

  நிரூபன் said...

  காலி வீதியில் புயல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்னுடைய சைக்கிள்//

  அடிங்...காலி வீதியில் அவர் சைக்கிள் ஓடுறாராம்.
  மைந்தன் இந்தக் கொடுமையைப் பாருங்க.. என்ன ஒரு டெரர் தனமா போட்டுத் தாக்குறான் பாருங்க.

  நிரூபன் said...

  காலையில ஹன்சிகாவுக்கு முத்திமிட அவள் உதட்டை என் உதடு தொடும் விளிம்பில் கால்பண்ணி//

  ஐயோ, ஐயோ!
  நீங்க படத்துக்கெல்லாம் முத்தம் கொடுப்பீங்களா.
  அவ்

  நிரூபன் said...

  இரவுதான் குளித்தாயே என்று குளிக்கவும் மறுப்புத்தெரிவித்துவிட்டது கையில் எந்நேரமும் ஒட்டியிருக்கும் கடிகாரம். இருந்தும் பல்லு விளக்கிக்கொள்ள மறக்கவில்லை , அவள் அருகில் இருந்து பேசவேண்டுமே என்பதால்.//

  அவ்...குளித்துப் பல நாள் ஆகுவதாகவும், பொக்கற்றினுள் பெர்பியூம் எப்போதும் இருப்பதாக அறிந்தேன்.
  ஹி..ஹி..

  நிரூபன் said...

  ஆஹா...ஒரு வித சஸ்பென்சுடன் கதையினை நகர்த்துறீங்க...அருமையான எழுத்து நடை.
  அடுத்த பாகத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  Ashwin-WIN said...

  @மைந்தன் சிவா
  //ஹிஹிஹி கொய்யாலே இதுவாடா நடக்குது???இரு வாறன்//
  டேய் மாப்ப்புல அவசரப்பட்டு முடிவேடுத்திடாத.

  Ashwin-WIN said...

  @Jawid Raiz
  //Hehehee... Nice flow.. Waiting for the second part//
  கம்மிங் சூன்..

  Ashwin-WIN said...

  @கந்தசாமி.
  //யாரு அந்த பொண்ணு ...)//
  என்ன ஆலுவை நீர். அதான் சங்கீதா எண்டு தெளிவா சொன்னனே..

  Ashwin-WIN said...

  @நிரூபன்
  //கிளி கிளு தலைப்பு வைக்கிற நானே இன்று முதல் திருந்தி விட்டேன் என்று அறிக்கை விடுறேன், ஆனால் நீங்க புதுசாப் பாருங்க ஒரு தலைப்பு வைக்கிறீங்க..அவ்....//
  அஹா ஒரு சொந்தம் திருந்திட்டுதாமே.. ஆனாலும் என்னால நம்ப முடியாது..ஹி ஹி

  Ashwin-WIN said...

  @நிரூபன்
  //அடிங்...காலி வீதியில் அவர் சைக்கிள் ஓடுறாராம்.
  மைந்தன் இந்தக் கொடுமையைப் பாருங்க.. என்ன ஒரு டெரர் தனமா போட்டுத் தாக்குறான் பாருங்க//
  ஹா ஹா நான் காளிவீதில சைக்கிள் அதாவது துவிச்சக்கரவண்டி ஓடினதுக்கு சாட்சி மைந்தன் மாமாதான். ஆளை புடிச்சு கேட்டுகொங்கோ மாப்புள.

  Ashwin-WIN said...

  @நிரூபன்
  //காலையில ஹன்சிகாவுக்கு முத்திமிட அவள் உதட்டை என் உதடு தொடும் விளிம்பில் கால்பண்ணி//

  ஐயோ, ஐயோ!
  நீங்க படத்துக்கெல்லாம் முத்தம் கொடுப்பீங்களா.
  அவ்//
  ஹையோ மாப்பு கனவு மாப்பு அது கனவு..

  Ashwin-WIN said...

  @நிரூபன்
  //அவ்...குளித்துப் பல நாள் ஆகுவதாகவும், பொக்கற்றினுள் பெர்பியூம் எப்போதும் இருப்பதாக அறிந்தேன்.
  ஹி..ஹி..//
  ஹி ஹி நோ கமெண்ட்ஸ். ஆனா நாம இரவிலேயே முன்னேற்பாடா குளிச்சுட்டுதான் படுக்குரனாங்க. எப்பூடி.

  Ashwin-WIN said...

  @நிரூபன்
  //ஆஹா...ஒரு வித சஸ்பென்சுடன் கதையினை நகர்த்துறீங்க...அருமையான எழுத்து நடை.
  அடுத்த பாகத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
  வருது வருது...

  Mohamed Faaique said...

  ஒரு ஃபிகருக்காக இவ்வளவு அலப்பறையா??? அடுத்த பதிவுக்கு Waiting...

  சி.பி.செந்தில்குமார் said...

  அண்ணன் சொந்த அனுபவத்தை கதைன்னு சொல்லி கதை விடறார்.. ஹா ஹா எழுத்து நடையும் சங்கீதா உடையும் கலக்கல்

  Ashwin-WIN said...

  @Mohamed Faaique
  //ஒரு ஃபிகருக்காக இவ்வளவு அலப்பறையா??? அடுத்த பதிவுக்கு Waiting..//
  நோ.. அலப்பறைக்குரிய காரணமே வேற பாஸ். அடுத்த பாகத்துல தெரிஞ்சுகொங்க.

  Ashwin-WIN said...

  @சி.பி.செந்தில்குமார்
  //அண்ணன் சொந்த அனுபவத்தை கதைன்னு சொல்லி கதை விடறார்..//
  ஹா ஹா மறுபடியும் சொல்றேன் யாவும் கலப்படமில்லாத கற்பனையே...
  // ஹா ஹா எழுத்து நடையும் சங்கீதா உடையும் கலக்கல்//
  எழுத்து நடைய பாருங்க.. ஆனா சி.பி. சார் நம்ம சந்கீதால கண்ணா வெச்சுடாதீங்க.

  கவிதை வீதி... // சௌந்தர் // said...

  அசத்தலான தொடக்கம்.. அடுத்த பாகத்திற்கு சொல்கிறேன்...

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner