கடந்தவாரம் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊருக்கு சென்றபோது என் கமெரா கண்களில் சிக்கியவை சில.......
(படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன்மீது கிளிக் செய்யுங்கள்)
சாய்ந்த மருதுக்கும் இஸ்லாத்துக்கும் அடையாளமாய் நின்றுகொண்டிருக்கிறது இந்த பள்ளி.
நரம்புகளில் துடிப்பிருக்கும் வரை யாரிடமும் கையேந்த விடாது இவளின் துடிப்பு.
என் செல்ல தங்கைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இந்த சுதந்திர சைக்கிள் பயணம்.
தலை தொலைத்த தென்னைகள் இலங்கையின் தமிழர் பகுதி எங்கும்.
உறவுகளின் பலம் ஒத்துமை ரெண்டுமே நம்ம ஊர்களை விட இங்கு அதிகமே.
காகிதங்களை தாங்கி நிற்கும் தண்ணீர் வற்றிய தாங்கி.
முதுமை என்றும் தன்னம்பிக்கையிடம் தோற்றேவிடுகிறது.
என் வீட்டு மதிலுக்கு பசைகளால் வெள்ளையடிப்பதைவிட
வேறென்ன செய்துவிட்டார்கள். என் வீட்டுக்கு.
உறவுகளை தொலைத்தாலும் கையேந்தாது
கடலை விற்று கல்வி கற்பவன்.
எங்கள் சிரிப்பினில் ஜாதி, மதம் தெரிகிறதா?
நான்கு பேர் கைகளில் சிக்கிய அரைமூடை மணல்.
அலைக்கு தரையின் முதல் அழைப்பு.
கிழக்கின் வாழ்வாதாரம்
புகைப்படம் எடுக்கும் என் நிழலை பார்த்தால் என்னுள் இருக்கும் எவனோ ஒருவன் தெரிகிறான்.
கடல் வந்து அணைத்தாலும் மறுபடியும் மணல் தூறும் சிறு நண்டு.
உயிரினை பிணைவைத்து தினம் உயிர்வாழும் மீனவர்.
இயற்கையோடு கதை பேசும் சில நிமிடங்கள்
செயற்கையின் துன்பங்களை மறந்திட செய்யும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ |
14 comments:
இன்ட்லிக்கு என்ன நடந்தது.. அடிக்கடி காணாம போகுது??
நல்ல இயற்கை காட்சிகளையும் இயல்பான காட்சிகளையும் கௌவ்வியிருக்கிறீர்கள்!!
எனக்கும் அண்மையில் காணாமல் போனது! Html codingல் tamilish.com ற்கு பதிலாக புதிய http://ta.indli.com/ ஐ போட்டதும் சரியானது. எதற்கும் பழயதை copy செய்து வைத்து புதிய addressஐ டைப்பி பாருங்கள்...
@கார்த்தி
நன்றி பாஸ் வருகைக்கு..
இன்ட்லி சர்வர்(server) மாற்றுகிறார்களாம்....
நல்ல இயல்பான படங்கள்...குறிப்பாய் உங்கள் நிழல்படம் அருமை..
இனிய இரவு வணக்கம் பாஸ்,
நீங்கள் ரசித்த உணர்வுகளைப் படமாக்கி, அதற்கேற்றாற் போல அழகிய வரிகள் கொடுத்து நாமும் பார்த்து இன்புற வேண்டும் எனப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி.
சாய்ந்தமருது பள்ளியின் தோற்றம் மின்சார- தொலைபேசி கம்பிகளினுாடு மிடுக்காக தெரிகிறது.
நல்லாயிருக்கு.
புகைப்படங்களும் உங்கள் கருத்துக்களும் அருமை... ரசித்தேன்...
அருமையான இயற்கை காட்சிகள்..
மரங்களை பார்த்தே சொல்லிவிடலாம் மனிதர்கள் எப்படி என்று
தமிழர்களும் தலை தொலைத்தே(குனிந்தே) வாழ்கிறார்கள்.
'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'
நல்லாயிருக்கு
அம்பாறை மாவட்டம் சென்றதேயில்லை. அருமையான படங்கள்.
மிக்க நன்றி
கலக்கல் படங்கள் ...........
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...