ஒரு மனுஷனுக்கு வருசத்துல ஆயிரம் நல்லநாள் பெருநாள் வரும். ஒவ்வொன்னா சொல்லப்போனா புதுவருசம் (அதுலயும் தமிழ், இங்கிலீசு, சிங்களம் எண்டு), தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் (நம்ம போன்றாக்களுக்கு), தீபாவளி, பெரிய வெள்ளி, கிறிஸ்துமஸ், ரம்ழான், ஆடி பொறப்பு எண்டு ஆயிரம்.. ஆனா இது எல்லாத்துலயும் கொஞ்சம் பெரிய பொறப்புதான்
ஒவ்வொரு மனுசனோடையும் பொறந்த நாள். எந்த நல்லநாள் பெருநாளுக்கு ஒருத்தன் குளிக்குறானோ இல்லையோ இந்த பொறந்த நாளுக்கு மட்டுமாச்சும் குளிச்சுடுவாங்க. அதுவும் நண்பர்களோட இருக்குறவங்களுக்கு அவங்களே குளிப்பாட்டிடுவாங்க இன்னைக்கு. அப்போ ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லலாங்க. இந்த பொறந்த நாள் மனுசனோட நாற்றம் போற நாள் எண்டு.
ஒவ்வொரு மனுசனோடையும் பொறந்த நாள். எந்த நல்லநாள் பெருநாளுக்கு ஒருத்தன் குளிக்குறானோ இல்லையோ இந்த பொறந்த நாளுக்கு மட்டுமாச்சும் குளிச்சுடுவாங்க. அதுவும் நண்பர்களோட இருக்குறவங்களுக்கு அவங்களே குளிப்பாட்டிடுவாங்க இன்னைக்கு. அப்போ ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லலாங்க. இந்த பொறந்த நாள் மனுசனோட நாற்றம் போற நாள் எண்டு.
உடம்புல இருக்குற அழுக்கு குளிக்குறதால போயிடும் மனசுல இருக்குற அழுக்குகள் எப்படித்தாங்க போகும். அப்டியே போகணும்னா நண்பர்கள் சொல்லியோ பெத்தவங்க சொல்லியோ ஏன் படைச்ச கடவுள் சொல்லியோ முடியாதுங்க.. அதுக்கு நாம முடிவெடுத்தா தாங்க முடியும்.. சரி இப்படித்தான் பலதடவ நாமளா நினைக்குறதுண்டு இந்த இந்த நல்ல, கெட்ட பழக்கங்களை இன்றையோட விட்டுடுவம் எண்டு.. ஆனா என்கதாங்க முடியுது.. அதே டயலாக்க நாள்மாறி நாள்மாறி சொல்லிட்டிருக்குறமே தவிர ஒருமண்ணும் மாறினதா காணல. அதுதான் இண்டைக்கு ஒரு முடிவெடுத்திட்டன் இண்டைக்கு இரண்டாயிரத்து பதினோராம் வருஷம் புரட்டாதி மாசம் எட்டாம் திகதி நாடு சாமம் பன்னிரண்டு மணி.. இந்த நிமிசத்துல இருந்து சில பல நல்ல கெட்ட விடயங்கள விட்டுடலாம்னு.. அத மனசுல நெனச்சுட்டா நானே மறந்து மறுபடியும் அத பண்ணிடுவன். அதனால இங்க இத்தன பெரிய மனுசங்க முன்னிலைல நான் கீழ்கண்ட நல்ல கெட்ட பழக்கங்களை இந்த நிமிடத்திலிருந்து தவிர்க்கிறேன் அல்லது பாதியா குறைக்குறேன்.
*** மனிதனோட வாழ்க்கையில் முதல் பெரிய விடயம் என்று சொல்லுறதெண்டால் நேரமும், காலமும் தாங்க. ஆனா இத ஒட்டுமொத்தமா விழுங்குது இந்த சமூக வலையமைப்புகள் என்ட பேர்ல இருக்குற பேஸ்புக் (முக புத்தகம்). நான் முதலாவதா ஒதுக்க நினைக்குறது பேஸ் புக்ல வெட்டியா அரட்டையடிக்குற நேரத்தை. இதனால நான் உங்கள் எல்லாருக்கும் அறிய தருவது அன்புக்குரிய ஆண் நண்பர்களே இனிமே என் தொல்லை பேஸ் புக்கில் பெரிதாய் இருக்காது. ஸ்டேட்டஸ் போடுறன் என்ட பேருல ஒங்களை எல்லாம் பின்னி பிசிறேடுக்க மாட்டேன். கமென்ட் பண்ணுடா கமென்ட் பண்ணுடா எண்டு சாட்டில் (chat) நச்சரிக்க மாட்டேன். பண்புக்குரிய பெண் தோழிகளே.. கடலை என்ற பேரில் இனி எந்த கடலை, பருப்பு வகைகளையோ உங்களிடம் அவிக்க மாட்டேன். இந்த கடையில் கடலைகள் தீர்ந்து விட்டது எண்டு பார்ட் மாடுவேன். வேறு கடையில் பார்க்கவும்.
*** அடுத்த விஷயம் இந்த நேர காலத்துக்கு எழும்புற பழக்கமோ, ஒரு இடத்துக்கு நேரத்துக்கு போற பழக்கமோ என்கிட்ட கிடையவே கிடையாதுங்க. காலேஜுக்கு எக்ஸாமுக்கு போனாக்கூட வாத்திமார் எல்லாம் கேக்குறாங்க நீ இந்த காலேஜூலையா படிக்குறாய் எண்டு. ஏங்க உசிர் நண்பனே கேக்குறாங்க அதே கேள்விய. இதுக்குள சில இடங்களில நாமளே வாத்தியார் தொழில பாக்குறம். அங்க கூட எட்டு மணிக்கு வாறன் எண்டு சொல்லிடு அங்க போக ஒம்பது மணி ஆகிட்டுதுங்க. இப்டிதான் ஒருநாள் கிலாசுல (class) சொன்னான் 'பசங்களா வர்ற பதினஞ்சாம் தேதி ஏழுமணிக்கு கிளாஸ். மறந்துடுவீங்க காப்பில குறிச்சுகொங்க ' எண்டு. முன்னுக்கு இருந்து குறிச்ச ஒரு பொம்புள புள்ளைன்ட காப்பிய வாங்கி பாத்தா அது எட்டுமணிக்கு எண்டு குறிச்சிருந்துசுது. அம்புட்டு புரிச்சு வைச்சிருக்குதுகள் என்னைய பத்தி. எம்புட்டு டெரர் ஆகியிருப்பன் எண்டு ஜோசிச்சு பாருங்க. கடைசியா போனதென்னமோ ஒம்போது மணிக்குதாங்க. அதனால உறுதியா சொல்லிகுறன் இன்றில இருந்து டைம்ன்னா சொன்ன டைம்கு நிக்க பழகிக்குறங்க.
*** கைய கால கட்டி போட்டாலும் இந்த வயித்த மட்டும் கட்டிபோட முடியலைங்க. எத பாத்தாலும் நாக்கு நம நம எங்குது. சாப்பாட்டுக்கு மட்டுமே ஒழைக்குற காசுல அரைவாசி போகுது. இந்த ரேஞ்சுல போனா விரைவில லோஷன் அண்ணா, ஜனா அண்ணாவ முந்திடுவன். அதால இனிமே அளவு சாப்பாடு தாங்க. கண்டத்த சாப்பிடுற பழக்கத்த விட்டுடனும். உடம்ப காப்பாத்துடா அஷ்வின் இல்லை சீதனத்துல வெட்டு விழுந்திடும்.
*** அடுத்ததா பாட்டில் விசயத்துல ஒரு முடிவெடுக்கேலாம யோசிச்சிட்டிருக்கன். தண்ணி அடிக்கலாம கூடாதா.. தண்ணி அடிக்கலைன்னா மரியாதை இல்லாம பாக்குறாங்க. அப்பப்போ அடிச்சு அது வீட்டுக்கு தெரியேக்க குடிகாரன்னு திட்டுறாங்க. இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு தண்ணி அடிக்குற சிகரட் பிடிக்குற ஆட்களதானாமே பிடிக்குது. அப்போ நாமளும் இதெல்லாம் பண்ணனுமா. இப்படி ஆயிரத்தெட்டு கண்பியூசன். ஆனாலும் கடைசியா ஒரு முடிவெடுத்திருக்கங்க. எந்த காரணத்தை கொண்டும் தண்ணி அடிக்குறதுக்காக ஒரு பார்டிக்கு போறதில்லை, ஒன்று கூடுறதில்லை. ஏற்கனவே தண்ணியோடு சங்கமித்ததால இரண்டு நண்பர்களை அற்பாயிசில் இழந்திருக்கிறேன்.
*** எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை. இருக்கிறது கொஞ்ச காலம். அதுலயும் எதிரிகளை சம்பாதித்து பல நண்பர்களை இழந்தால் பிறகு வாழ்வதில் என்ன பயன். ஆக என் வீடு தேடி வந்து கன்னத்துல அறைஞ்சாலும் மச்சான்னு கட்டிபுடிக்கதான் போறேன். தாராளமா யார் வேணும்னாலும் வரலாம். ஆனா முதுகுல குத்தினா...
*** வி.ஐ.பி ஷோ பாக்குரன் விஐபி ஷோ பாக்குறன் எண்டு சும்மா பீத்திக்கிட்டதும். போய் பார்த்து மனசும் நொந்து பர்சும் நொந்ததுதாங்க மிச்சம். எல்லாத்தையும் விட திரை விமர்சனம் எழுதியே நானும் ஒரு பதிவர்தான் எண்டு நிரூபிச்சுவந்த கொடுமைகள் இனி நடக்காது. சினிமாவிற்கு கொடுத்த அதிக முக்கியத்துவத்தை இனி விட்டுடலாம்னு இருக்கன். சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் எடுக்கணும்னு ஆசை. பார்க்கலாம் நல்லதொரு ஆர்வம் மிக்க நண்பர்கள் கைகோர்க்கையில் நடக்கும்.
*** கிரிக்கட்டில் இருக்கிற மோகத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை. அதோட இனிமேல் ஆஸ்திரேலியா அணிக்கு சப்போர்ட் பண்ணலாம்னு முடிவேடுத்தாச்சு. இனிமே நாமளும் மஞ்சள் சட்டைகாரங்கதான். காரணம் அந்த அணியின் தன்னம்பிக்கை. எதையும் கூலா எடுத்துகிட்டு எப்பவும் சிரிச்சிட்டிருக்கிற மனப்பான்மை. ஐ ஆம் எ ஆஸி சப்போட்டர்.
*** புதுசா முக்கியத்துவம் கொடுக்க இருக்கிற மாட்டார்கள் கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் உடற்பயிற்சி அண்ட் பொண்ணுங்களை சைட் அடிக்குறது கான்ஸல். இனி எல்லா பொண்ணுங்களும் அக்காதான். நம்புங்க சார். ஏன்னா நமக்கும் வயசாயிடுச்சு எவ்வளவுகாலம்தான் அதையே பண்றது.
ஆக மொத்தமா மாறுறதா முடிவெடுத்தாச்சு.. பாக்கலாம் இதுல எத்தன முடிவுகள காப்பாத்த போறான் எண்டு .
//நல்லவனா வாழுறனோ இல்லையோ.. கெட்டவனா வாழ விருப்பம் இல்லை.// |
10 comments:
பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நல்ல முடிவுகள். நேரம் தவறாமைய நேரம் தவறாம செய்ங்க.. அது ரொம்ப முக்கியம்..
கடைசி பன்ச் சூப்பர்
well i'm impressed
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குறும்படங்கள் எடுக்கப்போறீங்களா..அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
//வி.ஐ.பி ஷோ பாக்குரன் விஐபி ஷோ பாக்குறன் எண்டு சும்மா பீத்திக்கிட்டதும். போய் பார்த்து மனசும் நொந்து பர்சும் நொந்ததுதாங்க மிச்சம்//
நீங்க என்ன சொல்லவாறீங்க என்றதை மேலே உள்ள படம் சொல்லுது..மனச தளர விடாதீங்க..நீங்க நொந்தாலும் எத்தனை பேரோட உசிர காப்பாத்தி இருக்கீங்க..!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!! All The Best!!!
வாழ்த்துக்கள். சகோ..
வணக்கம் பாஸ்,
இன்று முதல் புதிய மனிதனாகப் அவதாரம் எடுத்திருக்கிறீங்க.
எல்லா நடை முறைகளும் ஓக்கே..
ஆனால் நீங்க வி ஐ பி ஷோவை நிறுத்திட்டா, நாம சுடச் சுட விமர்சனத்திற்கு எங்கே போவது?
இன்று முதல் தொடங்கும் இனிதான புது அவதாரம் சிறக்க வாழ்த்துக்கள்...
good site. i like very much
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...