• Friday, September 16, 2011

  ஆபாசங்களில்லாம வாழமுடியாதா?


  நவீனத்துவம் பெற்ற மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று மாறியிருக்கிறது ஆபாசம் என்ற பதம். உண்மையில் ஆபாசம் என்பது என்னவென்று சொல்வதானால், மனித பாலுணர்வுகளை கிளர்ந்தெழ செய்கின்ற காட்சிகள், வார்த்தைகள், சிற்பங்கள் என்பவற்றையே சொல்லமுடியும். ஆக இப்படிப்பட்ட ஆபாசத்தின் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது ஏதோ ஒருவிதத்தில் மனிதனை மயங்கச்செய்த்து தங்களுடைய சுய லாபங்களை தீர்த்துக்கொள்ளும் பொருட்டே.
   ஒரு சினிமாவின் வியாபார கவர்ச்சிக்கும், பொருட்களின் விளம்பரங்களிற்கும், சந்தைப்படுத்த முடியாத தங்கள் எண்ணங்களை சந்தைப்படுத்துவதற்கும், குறித்த ஒரு காரியத்துக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு உந்து கருவியாகத்தான் ஆபாசம் நுழைக்கப்படுகிறது. மொத்தத்தில் ஏதோ ஒரு வியாபார நோக்கங்களிற்காகவே பயன்படுத்தப்படுகிறது.  


  இது இன்று நேற்றல்ல என்று கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டனவோ அன்றே நுழைக்கப்பட்டுவிட்டது ஆபாசம். சீதையின் அழகை விபரிக்கையில் கம்பனும் ஆபாசம் காட்டுகிறான், நள தமயந்தி காதலை சொல்கையிலும் புகழேந்தி ஆபாசம் நுழைக்கிறான், ஏன் வள்ளுவனுக்குகூட சில இடங்களில் தன் கருத்தை சந்தைப்படுத்த ஆபாசம் தேவைப்பட்டிருக்கிறது. பெண்ணின்  மார்பகங்களை விபரிக்காத ஒரு இலக்கியம் என்று தேடுவதே பெரும் சிரமப்பாடு ஆகிறது. 

  இவர்கள் விதைத்த விதை இன்று வியாபகித்து எங்கும் நிற்கிறது. சினிமாவின் ஆபாசம் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. என்ன செய்ய கருத்துக்கு பஞ்சமான இயக்குனர்களுக்கு தம் லாபத்தை பெருக்க சில பல நடிகைகளின் உறுப்புகள் வியாபாரம் பேசுகிறது. சேலை விளம்பரம் முதல் பாலுக்கு விளம்பரம் வரை எல்லாவிடத்தும் ஆபாசம் தேவைப்படுகிறது. 


  இப்படி பல இடங்களில் நுழைக்கப்பட்ட ஆபாசம் இன்று வலைப்பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை. கருத்துச்சரக்குகளை விற்றுத்தீர்க்கவும் வாசகர்களை ஒரு இடத்தில் உட்கார வைக்கவும் இப்படியான ஆபாச படங்கள் பதிவுகளில் சம்பந்தமில்லாமல் நுழைக்கப்படுகிறது. தேங்காய் இளநி விலை கூடி விட்டது என்று ஆராய்கிற பதிவென்றாலும் அது மக்களை சென்றடைய இடையே நமீதா படம் தேவைப்படுகிறது.  பின்பு தேங்காய்க்கும் நமீதாக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டைய பிச்சுக்க வேண்டியதுதான். ஒரு பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது கூட ஜோசித்து ஒரு ஆபாச தலைப்பாவே வைக்கவேண்டி இருக்கிறது. அப்படி வைக்கும் போது புள்ளி விபரங்களை பார்க்கும் போது வழமையாக வருகைதரும் வாசகர்களை விட மூன்று மடங்கு அதிகமானோர் வந்து போறது தெரியுது. சும்மா போடுற பதிவை விட அடைப்புக்குறிக்குள் 18+ என்று போடும் பதிவுகள்தான் அதிகம் ஹிட்ஸ்களை அள்ளிக்கொள்கிறது.

  இப்படி நான் ஆபாசம் பற்றி புலம்புறதுக்கு காரணம் என்ன. ஆபாசம் எம் நாடுகளில் இவ்வளவுகாலமும் திரைகளில் நிழல்கலாகதான் வலம் வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று அத்தனையும் நிஜங்களாக உருவெடுக்க தொடங்கிவிட்டது. திரையில் பார்த்ததை விட நிஜங்களில் அதிகம் உலாவுகிறது. அத்தனையும் பண்பாடுகள் பேசப்பட்ட நம் பூமியில். திரைகளில் ஆபாசங்கள் வருகையில் கனவுகளில் அவற்றோடு பரிணமிக்கும் இளசுகள் இன்று நிஜங்களிலும் அவற்றை கண்டவுடன் நிஜங்களில் பரிணமிக்க முயல்கிறான். அப்படி முயல்கையில் அத்துமீறல்களும், துஷ்பிரயோகங்களும் 
  வெடிக்கிறது. இன்று அவையே பத்திரிகைகளையும், இணைய பக்கங்களையும் நிரப்புகிறது. 


  கலாச்சாரமாக வாழ்ந்த கிராமப்புற பெண்கள் சடுதியான ஒரு கலாச்சார மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் இன்று. அதற்கான வாய்ப்புகள் இன்று எம் நாட்டில் அதிகம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சடுதியான மாற்றங்களலால் சடுதியான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு விட்டில் பூச்சி வாழ்க்கையாக முடித்துக்கொள்ளப்படுகிறது பலரின் வாழ்க்கை. இந்த மாற்றத்தை லாவகமாக பயன்படுத்திக்கொள்ள ஒரு ஆண்கள் கூட்டம். செல் பேசிகளில் ஆண் பெண்களில் ஆபாசங்கள் கரை புரண்டு அத்து மீறுகிறது. ஒரே நாளில் மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துவிட துடிக்குமளவுக்கு ஆபாசங்கள் உள்ளுணர்ச்சிகளில் ஆக்கிரமித்துள்ளது. சாலையோர சில்மிசங்கள், கடற்கரை சல்லாபங்கள், பஸ்வண்டி உரசல்கள் இவை எம்நாட்டில் சடுதியாய் அதிகரிக்கும் பழக்கங்கள்.இவற்றின் விளைவுகள் எதிர்பாராத தற்கொலைகள், வைத்தியசாலை ரகசிய சிகிச்சைகள், பெண்கள் மீதான வன்முறையாட்டங்கள். 

  மனிதனின் அடிமனதில் விதைக்கப்பட்ட ஆபாசங்கள் செய்யும் அட்டூளியங்களே அத்தனைக்கும் காரணம். இவைகள் தவிர்க்கப்படவேண்டும். இல்லையேல் எம் சமுதாயம் போகிற வேகத்தில் எதோ ஒரு முட்டு சந்தில் மோதி மூக்குடையப்போவது உறுதி. 

  ஆபாசங்களின் விளைவு அணுசக்தி விளைவிலும் கொடியது.

  பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் என்றும் கருத்தாய் இருந்தால் இளம் சமுதாயம் வளம் பெறும். பார்ப்போம் எல்லாம் மாற இன்னொரு தலைமுறை ஓடிவிடும். 

  Post Comment

  7 comments:

  நிரூபன் said...

  வணக்கம் தலைவா..

  ஆபாசங்களில்லாமல் வாழ முடியாதா என்று சொல்லி விட்டுப் போடுற படத்தைப் பாரு...


  கொய்யாலே...இருங்க படிச்சிட்டு வாரேன்

  நிரூபன் said...

  காத்திரமான ஓர் பதிவு,
  ஆபாசங்களின் விளைவுகளையும்,
  பதிவுலகில் அது பரவுவதன் மூலம் மனித மனங்களின் உணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் இப் பதிவு சொல்லி நிற்கிறது.

  Jana said...

  ஆபாசம் பற்றிய காத்திரமான ஆதங்கப்பதிவு இது.
  காமம் இல்லாமல் படைப்புகள் இல்லை உண்மைதான். அதேபோல இலக்கியமோ செய்யுள்களோ அழவோடு காமம் கலப்பது வாசிப்புக்கு சுவைதான் அதுவும் இல்லை என்று சொல்லவில்லை, வாழ்க்கையோ எழுத்தோ, பாடலோ, திரைப்படமோ காமம் என்பது வாழ்க்கை என்ற உணவு உண்ணலில் ஒரு ஊறுகாயே.. ஆனால் சிலர் அந்த ஊறுகாயையே உணவாக உட்கொள்ள முனைவது அபத்தமானது

  sinmajan said...

  தலைப்பிலே 18+ போடாமல் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களும் இது போன்ற ஆஆஆபாசமான படங்களைப் பார்க்கத் தூண்டிய அஷ்வினுக்கு மென்மையான கண்டனங்கள் ;-)

  Nesan said...

  காத்திரமான ஆய்வு உண்மையில் இப்போது ஆபாசம் என்பது தறிகெட்டுத்தான் இருக்கின்றது செய்யுள் களில் மென்மையாக சொல்லப்பட்டவை உணர்ச்சியைத் தூண்டவில்லை இப்போது நடப்பவை மக்கள் உணர்ச்சியை கிளர்ச்சியடைச் செய்து வன்முறைக்கு வழிகாட்டுது!

  Agape Tamil Writer said...

  அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி

  ரெவெரி said...

  நல்ல ஆய்வு...அது வாழ்வின் அங்கம்...ஜனா சொல்வது போல் ஊறுகாய்...ரெவெரி

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner