Tuesday, January 31, 2012
Saturday, January 14, 2012
Saturday, January 7, 2012
ஏன் அத்தனையும் என்னைதேடுது? - பௌதீகக்காதல்
ஏ சுட்டிப்பெண்ணே ஏன்
எல்லாம் என்மேல் பாயவிட்டாய்
புது சாயம் பூசி காதல் என்கிறாய்..
என் வெப்பம் குறைந்து போனதோ - ஏன்
என்னில் பாயுது உன் கண்ணின் கதிர்வீச்சு.
என் அமுக்கம் தாழ்ந்து போனதோ - ஏன்
என்னில் பாயுது உன் மூச்சின் காற்று.
என் செறிவும் குறைந்து போனதோ- ஏன்
என்னில் பரவுது உந்தன் வாசனை ?
என் ஈர்ப்பழுத்தமும் வீழ்ந்ததோ !
உன் கூந்தல் பூ என்னை நாடுதே.
மின்அழுத்தம் குறைந்து போனேனா - ஏன்
என்னில் பாயுது உன் காதல் மின்சாரம்.
அட எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்
இன்னொரு உயிரின் எடைஏற்றம் ???
உன்னால் என் பௌதீகம் இன்று
இஸ்லாம் கொண்ட பாரசீகம் ஆனதே..
| குட்டி கவிதை = குட்டி கசங்கல்= குட்டி கந்தல் என்னமோ எதோ நம்ம வேலை முடிஞ்சு..... |
டிஸ்கி- ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் (இன்றைய ஈரான்) மீதான அரேபிய நாடுகளின் படையெடுப்பால் பாரசீகம் அழிந்து அங்கு இஸ்லாம் குடிகொண்டது.
Friday, December 9, 2011
சேவாக்குக்கும் ஆறுக்கும் என்னா சம்பந்தம்??? இது புதுசு கண்ணா.
கிரிக்கெட்டின் தாய் நாடு இங்கிலாந்தாக இருந்தாலும் இன்று தந்தை நாடு என்று சொல்லுமளவுக்கு விரிந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட். இப்படிப்பட்ட இந்திய அணியின் சாதனைகளின் பட்டியலில் சேவாக்கின் பங்கு இன்று இன்னும் பலமடைந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளிலே எட்டமுடியா இலக்கென்று எண்ணுமளவுக்கு தனிநபர் ஓட்டமாக 219 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போதுள்ள கிரிகெட் வீரர்களில் சிறந்த அதிரடி வீரர்கள் வரிசையில் சேவாக்குக்கு முதல் பெஞ்ச்Wednesday, November 16, 2011
உங்கள் பிளாக்கில் நிலையான மெனு பாரினை உருவாக்க.
Tuesday, November 15, 2011
இது போதும் எனக்கு- ஒலிவடிவத்துடன் புதிய முயற்சி
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் ஆழமான சிந்தனைகளுடன் அழகிய இலகு தமிழில் எவர்க்கும் புரியும் படியில் இருக்கும். அதனால்தான் எனக்கு அதிகம் பிடித்துப்போனது கவிப்பேரரசை. அதன் ஒரு விளைவுதான் கவிப்பேரரசின் கவிகளை ஒலிவடிவில் தர தூண்டியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் இங்கே ஆரம்பிக்கிறது. 'இது போதும் எனக்கு' என்ற கவிதையை இன்று ஒலிவடிவத்தில் தருகிறேன்.
கவிதை-வைரமுத்து
கவிதை-வைரமுத்து
குரல்-அஷ்வின்இசை- AR.ரஹ்மான்
Saturday, November 12, 2011
காணவில்லை காணவில்லை விஜயகாந்தை காணவில்லை
கடந்த தேர்தலில் ரிசிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தெரிவாகி கூடுதல் போனஸாக எதிர்கட்சித்தலைவர் பதவி பெற்ற தலைவர் விஜயகாந்தை தேர்தலுக்கு பிற்பாடு காணவில்லை. அவரை பற்றிய விபரங்கள்....................
Tuesday, September 27, 2011
என் கமெராவில் சிக்கியவை சில...
கடந்தவாரம் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊருக்கு சென்றபோது என் கமெரா கண்களில் சிக்கியவை சில.......
(படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன்மீது கிளிக் செய்யுங்கள்)
Subscribe to:
Posts (Atom)









