அய்யய்யோ அப்பப்பா இன்றைய தேதி வாறதுக்குள்ள எத்தனை அடிபுடிகள் எத்தனை எதிர்பார்ப்புகள் அவ்வளவும் தல ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும்தான்.. அதே எதிர்பார்ப்போட மற்றுமொரு விஐபி காட்சி வெற்றி எப்.எம் உபயத்தில். திரையரங்குக்கு நுழைகையில் எப்பவோ டிக்கட் எடுத்துவச்ச தலரசிகர்கள்,
டிக்கட் எடுக்குரதுக்காக காத்திருக்கிற ரசிகர்கள் எல்லாத்துக்கும் மேலா பல குடும்ப டிக்கட்டுகள் ப்ளஸ் தல நரைச்சுப்போய் டிக்கட் வாங்குற வயசிலையும் கம்பிகளை பிடிச்சு தொங்கிட்டிருந்த ரசிகர்கள் இவ்வளவு பேரோடையும் அடிச்சு பிடிச்சு நான் ,அக்கா ,அத்தான் என்று ஒரு குடும்பமாவே படம் பார்க்க சீட்ல உட்கார்ந்தாச்சு..
டிக்கட் எடுக்குரதுக்காக காத்திருக்கிற ரசிகர்கள் எல்லாத்துக்கும் மேலா பல குடும்ப டிக்கட்டுகள் ப்ளஸ் தல நரைச்சுப்போய் டிக்கட் வாங்குற வயசிலையும் கம்பிகளை பிடிச்சு தொங்கிட்டிருந்த ரசிகர்கள் இவ்வளவு பேரோடையும் அடிச்சு பிடிச்சு நான் ,அக்கா ,அத்தான் என்று ஒரு குடும்பமாவே படம் பார்க்க சீட்ல உட்கார்ந்தாச்சு..
தல அஜித்தின் ஐம்பதாவது படம் விஜயின் சுறா போல ஆகிவிடக்கூடாது என்ற பிரார்த்தனையோடையே எழுத்தோட்டங்களை வரவேற்றேன். ஆரம்பமே அஜித்தின் அமர்க்களமான அறிமுகம். போலிஷ் ஜீப்பில் பறந்து வந்து இறங்கி நடக்கையில் அந்த கம்பீரம் , சின்ன தொப்பை , முழுமையாக முகச்சவரம் செய்யப்பட்ட தோற்றம் மீசையில்லாத கம்பீரமாய் ஜொலிக்கிறது.
இப்படி ஆரம்பிக்கும் காட்சிகள் காதல் மைபூசப்பட்ட ரீலில் சுற்றுகிறது. அத்தோடு சென்னை - 28 இன் குதூகல நடிகர்களின் அறிமுகம். அவர்களை சுற்றிய காட்சிகள். என்று கதை ஒரு முடிச்சை நோக்கி நகர்கிறது. இந்த முடிச்சில் இணைந்துகொள்கிறார் விசேட போலிஷ் அதிகாரியாக அர்ஜுன். இத்தனை பாத்திரங்களும் ஐநூறு கோடி பணம் கொள்ளை என்ற கருவில் இணைக்கப்படுகிறார்கள்.பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் அஜித் , பிரேம்ஜி அமரன், மற்றும் நண்பர்கள் இவர்களை பிடிக்க நினைக்கும் அர்ஜுன் அத்தோடு வெங்கட் பிரபுவின் காட்சி நகர்த்தல்கள் இவை சேர்ந்ததுதான் முற்பாதி. இதற்குப்பின்னர் எப்படி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது, அது பங்கு பிரிக்கையில் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் நண்பர்கள், இறுதியில் நல்லவர் யார் கேட்டவர் யார் இதுதான் திரையில் மீதியாய் காண வேண்டியது.
கதை என்று சொல்லபோனால் ஒருவரியில் சொல்லிவிடலாம் ஆனால் சுவாரசியங்கள் நிறைந்த கதை, காட்சியோட்டத்தை வர்ணிக்கமுடியாது அதை திரையிலேயே கண்டு ரசியுங்கள்.
படத்தின் ப்ளஸ், மைனஸ்கள் என்று சொல்லகூடிய விடயங்களை பார்ப்போம்.
தல அஜித்தின் தோற்றம் + நடிப்பு. பாத்திரத்துக்கு ஏற்றால்போல் தோற்றத்தோடு நடித்துள்ளார். ஓவர் சென்டிமென்ட் இல்லை. தேவையான இடத்தில் தேவையான நடிப்பு மசாலாவை தூவியுள்ளார். கூடவே கொஞ்சம் ரசிக்கும் படியாக ஆடியும் உள்ளார். (அதுல சில மூவ்மெண்ட்ஸ் நானும் பழகிட்டன். தனிய வந்து கேட்டால் ஆடிக்காட்டலாம்) . எப்படி ரஜினி நல்லவன் காரக்டரைவிட கெட்டவன் காரக்டரில் பட்டைய கிளப்பிவிடுராரோ அதே மாதிரி அஜித்தும் ரசிக்க வைக்கிறார்.
இயக்குனர் பற்றி சொல்லியாகவேனும். வெற்றி எப்.எம் இல் ஒரு கேள்வி கேட்கப்பட்டது போட்டி ஒன்றிற்காக. இதற்குமுன்னர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எத்தனை?. அதற்குபதிலாக ஒரு குறும்புகார பதிவர் கூறியிருந்தார் (ட்வீட்டில்) ஒன்றுமில்லை என்று. அவரது கூற்று கொஞ்சம் உண்மையாக இருக்கலாம் மங்காத்தா ரிலீஸ் வரை. ஆனால் இன்று வெங்கட் பிரபுவை ஒரு சிறந்த இயக்குனர் என்று உறுதிபட சொல்லமுடிகிறது என்னால். சிறந்த இயக்குனர் யார் என்றால், ஒரு சிறிய கதைக்கருவை மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமான காட்சிகளின்மூலம் ரசிக்ககூடியவாறு கோர்வைப்படுத்தி தருகிறாரோ அவர்தான் என்று சொல்வேன். அப்படித்தான் மங்காத்தாவிலும் பல காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தார். ரசிக்ககூடியதாக இருந்தது. இருந்தும் சில இடங்களில் காட்சிகள் சோர்வைக்கொடுத்திருந்தது. அத்தோடு திரிசா, அஞ்சலியை ஏமாற்றியதால் இன்னும் கொஞ்சம் வருத்தம்.
படத்தின் பாடல்கள் அத்தனையும் அருமை. இது வெளிப்படையாக தெரிந்தது. ஆனாலும் அதைவிட படத்திற்கு பின்னணி இசை மிகப்பெரிய பலம். பல இடங்களில் பின்னணி இசைதான் தூக்கி நிறுத்துது. அந்த வகையில் யுவன் அதிரடி.
படத்தினை முக்கியமாக தூக்கிநிறுத்திய விடயம் அஜித், அர்ஜுன் கூட்டணி. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் அப்லாசுகளை அள்ளிக்கொண்டது. அதுவும் அஜித் ''வாயா அக்சன் கிங்கு '' என்கிறதும் பதிலுக்கு ''வாயா தல'' என்கிறதும் அப்ளாஸ். தமிழ் சினிமாவில் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் நடக்குறது வரவேற்க்கதக்கது.
வழமை போல் ஜெயபிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர் நாசர் போல். பிரேம்ஜி அமரன் இவர் தனக்கே உரித்தான பாணியில் பிற பட வசனங்களை பேசி அசத்துறார். திரிசா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி அமைதியானமுகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கபட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார்.
வழமை போல் ஜெயபிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர் நாசர் போல். பிரேம்ஜி அமரன் இவர் தனக்கே உரித்தான பாணியில் பிற பட வசனங்களை பேசி அசத்துறார். திரிசா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி அமைதியானமுகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கபட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார்.
அடுத்து சிறப்பாக சொல்லக்கூடியது பாத்திரங்களுக்கான உடை வடிவமைப்பு. அஜித், அர்ஜுன்கான உடை வடிவமைப்பு ஒவ்வொரு காட்சிகளிலும் அழகு, கனகச்சிதம். என்னுடைய அக்கா, திரிசா போட்ட சுடிதாரை பற்றியே இப்பவரை உளறிட்டிருக்காள் என்றால் பாத்துக்கொல்லுங்களேன்.
இதைவிட படத்தின் சிறப்பாக விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ்களை சொல்லலாம். பின்லேடா பாடல் கிராபிக்ஸ் நல்லாருக்கு. ஒளிப்பதிவில் அவ்வளவு நுணுக்கங்கள் தெரியவில்லை. ஆனாலும் சக்தி சரவணனின் கமெராவில் எல்லோரும் அழகாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு சண்டைக்காட்சிகளில் கமெரா கோணங்கள் அருவருப்பூட்டாது ரசிக்கவைத்திருக்கிறது.
மொத்தமாக சொல்லப்போனால் மங்காத்தா ரசிக்கவைத்தது நூற்றைம்பது வினாடிகளுக்கு மேல். மங்காத்தாவை வேலாயுதத்திற்கு பகிரங்க சவாலாக விடுக்கலாம். நம்பிக்கை வீண் போகவில்லை. ஆக மொத்தம் மங்காத்தா- ஸ்ட்ரிக்ட்லி நோ ரூல்ஸ்+ நோ ஏமாற்றம்.
மங்காத்தா ஹிட் ஆகுறது உறுதி சாமியோவ்.. வேலாயுதம் ?##$%%^??? |
17 comments:
ada ada ada enna speedu...
தல கலக்கிவிட்டார்.....நல்ல விமர்சனம் அஸ்வின்.
எடிட்டர் மோகன் யாரு பாஸ்?
தல தப்பியது வெங்கட் பிரபு புண்ணியத்தில...
பார்க்கணும் பாஸ்.உங்க விமர்சனம் அருமை
நேற்று சவோய்க்கு போறதுக்கு எவ்வளவு பாடுபட வேண்டிஇருந்தது.
நல்ல விமர்சனம் தல வெற்றி பெறட்டும் ஆடமுடியாது என்பவர்களுக்கு ஆடியிருக்கும் அழகைக்கான ஆவல் விரைவில் பார்க்கலாம்!
ஹிட்டாயிடுச்சுன்னு சொல்றீங்க
Thala always rocks
தல நீ ஜெயிச்சிட்ட...!!! படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... மறுபடியும் கியூ வில் நிற்கிறார்கள்.... மன்றங்களை களைத்தாலும் ரசிகர்கள் உன்னுடன்தான்....
ஓபனிங் பற்றி எழுதிய உங்களுக்கு நன்றி.... அஜித் ஓபனிங் கிங் என்பது மறுபடியும் prove ஆகியுள்ளது....
இது மாதிரி ஒரு வெற்றியைத்தான் எதிர்பார்த்தோம்...
கொடுத்துவைத்தவர் நீங்கள் ..... குடும்பத்துடன் தல படத்தை முதல் நாள் பார்த்துவிட்டீர்கள்....தயாநிதி, வெங்கட், U1 என அனைவருக்கும் நன்றிகள்...
படம் வந்தால் தான், இனிமே உங்க பதிவும் வருமா சாமி,
மங்காத்தா பார்க்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பினை உங்களின் விமர்சனம் தந்திருக்கிறது.
விமர்சனம் அசத்தல் பாஸ்.
விமர்சனம் விரும்பத்தக்கதாக உள்ளது நண்பரே ..........
உண்மையும் அதுதானே .....
padam super .super review .
இன்னும் பாக்கல! ஒரு பிரமாண்ட படத்தை இவ்வளவு பிந்தி பாக்கிறது மிக குறைவு! பலரும் ந்ல்லதெண்டு சொல்லினம் கொஞ்சம் சராசரி என்னுது. சிலது சரியில்லை எண்டுது! பாப்பம் எனக்கு எப்பிடி இருக்கு எண்டு
Tamil cinema Rules has been brokened by Our Thala AJITH.
நேர்த்தியான விமர்சனம்.
நன்றாக உள்ளது படமும் , உங்கள் விமர்சனமும்.
ஜானவி
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...