• Sunday, December 20, 2009

    ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..


    tears
    இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
    என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
    பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
    ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
    மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
    இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி  ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
    கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு
    மெல்லமா உக்கார்ந்தாள்.

    கொஞ்ச நேரம் இருந்தவள் சுவருல தொங்கிட்டு இரு இருந்த கடிகாரத்தோட பலமுறை மௌன வார்த்தைகளால் ஏதோ பேசிக்கொண்டாள். திட்டினாலோ தெரியல கடிகாரம் இன்னும் கொஞ்சம் அதிகமா சத்தம் போடதொடங்கிட்டுது
    கண்களில தூக்கம் கவிதை வரைஞ்சுகொண்டிருக்க இடையிடையே கலைத்துகொண்டன கைகள் தூக்கத்தில் நனைந்த கண்களில்கூட ஒரு அமைதியான படபடப்பு தெரிந்தது. என்னயோசித்தாலோ இருந்தாபோல எழும்பி கதவுப்பக்கம் போனால் காலில சூக்கேஸ் தட்டுப்பட்டு கொஞ்சம் அதிகமா சத்தம் போட்டுடுது பதட்டதோட எடுத்து அலுமாரிக்குமேல வைக்ககொண்டுபோனால் காலையில பயணம் போகத்தானே போறாரு பிறகென்னத்துக்கு எண்டு யோசித்தவள் கட்டிலுக்குகீழ கொண்டே வச்சதுதான் அங்கால அடுத்த சத்தம் பார்த்தா சாமியறைக்க ஏதோ விழுந்தமாதிரி மூண்டுநாளா சாமியறை கூட்டகூட இல்லேண்டவுடன பாழாப்போன இந்த எலி வந்திட்டு எண்டவள் திட்டிதீர்த்ததில சத்தத்தகானேல. வெளிலகதவதுறந்து ஹால் பக்கம் போனவள் கொஞ்சநேரத்தால முகம் கறுத்துப்போய் வந்திருந்தாள். அப்படியே கட்டில்ல வந்து இருந்தவள் மணிக்கூட்ட பாத்தபடியே நித்திரயாபோனாள் போல. ஆனாலும் இமைகளுக்குள்ள விழிகளின் படபடப்பு தெரிந்தது. 

    மணிக்கூடு பன்னேண்டுமுறை அடிச்ச மணியில திடுக்கிட்டு எழும்பிட்டாள் எழும்பின அரைதூக்கதுல பக்கத்து தலையணையில தடவிபார்த்தபடி மணிக்கூட்டபார்த்தால் அப்ப கதவதுறந்து சத்தம் கேக்க கண்களில இருந்ததூக்கம் பறந்தோட "ம்ம். வாங்கோ " எண்டாள். என்னமோ பெரிய காரியம் முடித்த சந்தோசத்துல "அப்பா என்ன ஒரு மேட்ச் . இப்டி ஒரு மேட்ச் பார்த்து எத்தன நாளாச்சு. டில்ஷானிண்ட ஒவ்வொரு அடியையும்  பாக்கணுமே. அப்பாப்பா. இந்தியாக்கு நல்ல அடி. சுப்பர் மேட்ச். " என படபடவென்று பொரிந்துதள்ளினவர் கடைசியா டிக்கெட் எடுத்து வச்சியா எண்டு கேக்க ம்ம் எண்டு சிரித்தமுகத்தோட தலையாட்டினாள் கமலா. "ம்ம்.இண்டைக்கு எனக்கு நல்லதூக்கம் வரும். அஹ.. நீ சாப்ப்டியா?" என்றுகேட்டவர் பதிலகூட எதிர்பார்க்காமல் போர்வையை இழுத்துமூடிக்கொண்டு படுத்தார் ஜெயித்துவிட்ட சந்தோசத்தில். கமலாவின் கண்களில் மீண்டும் அந்த படபடப்பு கண்ணீராய் உருவெடுத்தது. பூட்டிவைத்த ஆசைகள் கருகிய மணம் அவள் பெருமூச்சில் தெரிந்தது. போர்வைக்குள் இருந்து அரைத்தூக்கத்தில் ஒரு சத்தம் "என்னா மேட்ச்..... என்னா அடி...."

    (செய்தி- 45 நிமிடங்கள் காலதாமதமாக பந்து வீசியதால் அணித்தலைவர் தோனிக்கு இரண்டு போட்டிகள் தடை.
    ரசிகர்கள்-இதுக்கு போய் தடைவிதிக்குரான்களே. 45 நிமிசத்தால அப்டி என்ன ஆகிவிடபோகுது.)


    Post Comment

    3 comments:

    Pavi said...

    நல்ல பதிவு .
    நன்றாக இருக்கிறது

    Unknown said...

    நன்றாக இருக்கிறது

    KKNAREN said...

    romba inimaiyana ragasiyam

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner