கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் ஆழமான சிந்தனைகளுடன் அழகிய இலகு தமிழில் எவர்க்கும் புரியும் படியில் இருக்கும். அதனால்தான் எனக்கு அதிகம் பிடித்துப்போனது கவிப்பேரரசை. அதன் ஒரு விளைவுதான் கவிப்பேரரசின் கவிகளை ஒலிவடிவில் தர தூண்டியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் இங்கே ஆரம்பிக்கிறது. 'இது போதும் எனக்கு' என்ற கவிதையை இன்று ஒலிவடிவத்தில் தருகிறேன்.
கவிதை-வைரமுத்து
தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
இதுபோதும் எனக்கு
கவிதை-வைரமுத்து
குரல்-அஷ்வின்
தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ
இதுபோதும் எனக்கு
வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு
குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை
இதுபோதும் எனக்கு
நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு
மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு
நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு
தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு
பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இதுபோதும் எனக்கு
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்
இதுபோதும் எனக்கு
அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்
இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?
******************
கவிதையின் ஒலிவடிவ இறுதிப்பகுதியில் சொந்தமா நமக்கு நாமளே கொஞ்சம் பில்டப் குடுத்திருக்கிறம். தப்பா நெனச்சுகலையே.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ |
5 comments:
என்ன ஒரு கணீர் என்ற குரல்... அதற்குள் எந்தளவு குளைவு... இந்த அதிகாலையில் மிகவும் லயித்துப் போனேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
வணக்கம் மச்சி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரீன் அப்துல்காதர் அவர்களின் குரலில் ஒரு கவிதைச் சோலைக் கவிதையினைக் கேட்டது போன்ற உணர்வினை உங்களின் குரல் தந்திருக்கிறது!
பாராட்ட வார்த்தை இல்லை!
அருமையான குரல்!
எம் கல்லூரிப் பழைய மாணவர் எஸ்.கே. குணா அண்ணாவின் குரலையும், பரீன் அப்துல்காதரின் குரலையும் கலந்து கலவையாக்கிப் ஒரு அறிவிப்புச் செய்தால் எப்படியிருக்குமோ? அதனை விட இக் கவிதையில் உங்கள் குரல் அமிர்தமாய் காதில் தேன் பாய்ச்சுகிறது! பலே! பலே!
நல்ல முயற்சி,
உங்கள் குரலும் மிகவும் அருமை...
நல்ல முயற்சி, தொடர்ந்து செய்யுங்கள்.
பாராட்டுக்கள்.
thanks friend pls continue.....,.....,,....,.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...