ஏ சுட்டிப்பெண்ணே ஏன்
எல்லாம் என்மேல் பாயவிட்டாய்
புது சாயம் பூசி காதல் என்கிறாய்..
என் வெப்பம் குறைந்து போனதோ - ஏன்
என்னில் பாயுது உன் கண்ணின் கதிர்வீச்சு.
என் அமுக்கம் தாழ்ந்து போனதோ - ஏன்
என்னில் பாயுது உன் மூச்சின் காற்று.
என் செறிவும் குறைந்து போனதோ- ஏன்
என்னில் பரவுது உந்தன் வாசனை ?
என் ஈர்ப்பழுத்தமும் வீழ்ந்ததோ !
உன் கூந்தல் பூ என்னை நாடுதே.
மின்அழுத்தம் குறைந்து போனேனா - ஏன்
என்னில் பாயுது உன் காதல் மின்சாரம்.
அட எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்
இன்னொரு உயிரின் எடைஏற்றம் ???
உன்னால் என் பௌதீகம் இன்று
இஸ்லாம் கொண்ட பாரசீகம் ஆனதே..
குட்டி கவிதை = குட்டி கசங்கல்= குட்டி கந்தல் என்னமோ எதோ நம்ம வேலை முடிஞ்சு..... |
டிஸ்கி- ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் (இன்றைய ஈரான்) மீதான அரேபிய நாடுகளின் படையெடுப்பால் பாரசீகம் அழிந்து அங்கு இஸ்லாம் குடிகொண்டது.
1 comments:
எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்
இன்னொரு உயிரின் எடைஏற்றம் ???
அருமை
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...