கிரிக்கெட்டின் தாய் நாடு இங்கிலாந்தாக இருந்தாலும் இன்று தந்தை நாடு என்று சொல்லுமளவுக்கு விரிந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட். இப்படிப்பட்ட இந்திய அணியின் சாதனைகளின் பட்டியலில் சேவாக்கின் பங்கு இன்று இன்னும் பலமடைந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளிலே எட்டமுடியா இலக்கென்று எண்ணுமளவுக்கு தனிநபர் ஓட்டமாக 219 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போதுள்ள கிரிகெட் வீரர்களில் சிறந்த அதிரடி வீரர்கள் வரிசையில் சேவாக்குக்கு முதல் பெஞ்ச்
முதல் சீட் நிச்சயம். அதுவும் ஆறு ஓட்டங்கள் என்றால் இவருக்கு அலாதிப்பிரியம். பார்க்கும் எங்களுக்கும் இந்த ஆறு என்றால் குதூகலம்.
முதல் சீட் நிச்சயம். அதுவும் ஆறு ஓட்டங்கள் என்றால் இவருக்கு அலாதிப்பிரியம். பார்க்கும் எங்களுக்கும் இந்த ஆறு என்றால் குதூகலம்.
இப்படி இந்த 'ஆறு' சேவாக்குடன் ரொம்ப நெருக்கமாகவே சம்பந்தபட்டிருக்கிறது. எப்டின்னு யோசிக்குறீங்களா பாக்கலாம் ஒவ்வொன்னா...
Sehwag ஆறெழுத்து பெயர்.
சேவாக் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் இடம்பெற்ற பெப்சி கிண்ண 6 ஆவது ஒருநாள் போட்டியில். இது நடந்தது. 01.04.1999. இந்த தேதியின் இலக்கங்களை கூட்டினால் வரும் கூட்டெண் '6'. அதேவேளை இப்போட்டியில் களமிறங்கிய சேவாக் 40.2 ஆவது பந்து பரிமாற்றத்தில் (4+0+2=6) அணி ஓட்ட எண்ணிக்கை 150 ஆக (1+5+0=6) இருக்கும்போது 6 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார்.
தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் 6 ஆவது வீரராக களமிறங்கி 105 (கூட்டெண் '6') ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்தோடு அந்த இனிங்க்சில் ஆறாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்டுமிருந்தார்.
சேவாக்கின் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம் 319. இது பெறப்பட்டது 29.03.2008 (கூட்டெண் '6') அன்று. இந்தபோட்டியில் சேவாக் நிட்டினியின் பந்துவீச்சில் மெக்கென்ஷியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்திருந்தார். நிட்னி பிறந்தது யூலை-6, மெக்கென்ஷி பிறந்தது நவம்பர்-24 (கூட்டினால் '6').
ஒருநாள் போட்டிகளில் சேவாக் பெற்ற அதிகூடிய ஓட்டம் 219. இது பெறப்பட்ட தேதி 08.12.2011 (கூட்டெண் '6'). அதுமட்டுமில்லாமல் இது சேவாக்கின் 240 ஆவது போட்டி (கூட்டெண் '6'). இதில் சேவாக் கிரான் போலார்டின் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். போலார்ட் பிறந்தது 12.05.1987 (கூட்டெண் '6').
8.12.2011 நிலவரப்படி:
தற்போது டெஸ்டில் போட்டிகளில் 159(கூட்டெண் '6') இனிங்க்ஸ்களில் ஆறு இரட்டைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 7980 (கூட்டெண் '6') ஓட்டங்கள். அத்தோடு மொத்த ஓட்டகுவிப்பில் 24ஆவது (கூட்டெண் '6') இடம். ஒருநாள் போட்டியில் 240(கூட்டெண் '6')போட்டிகளில் 15 (கூட்டெண் '6') சதங்கள் உட்பட மொத்தம் 8025 (கூட்டெண் '6') ஓட்டங்கள். அத்தோடு ஐ.சி.சி தரப்படுத்தலில் 24ஆவது (கூட்டெண் '6') இடம். என்ன ஆச்சரியம்.???

வேலைவெட்டி இல்லாமல் இருந்ததுல இப்டி யோசிச்சது. இன்னும் நிறைய இருக்கு அப்புறம் போடலாம். :) |
5 comments:
இந்தளவுக்கு யோசிச்சிருக்கீங்க... கமெண்ட் போடாம எப்படி! அதான்..
நண்பரே எப்படி முடிகிறது உங்களால் மட்டும்
well don.......really great ..
தூள் கிளப்பிட்டேங்க.....
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
சப்பா.. சேவாக் இதுக்காகவே தமிழ் படிக்கணும் போல இருக்கே ;)
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...