• Wednesday, March 9, 2011

  ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.

  ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க.  என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா ஆடை உடுத்த ஆரம்பித்தாளோ அன்றே அவளுக்கு சுதந்திரம் இருநூருமடங்க கிடைச்சாச்சு. அத நல்ல வழில பயன்படுத்துறதும் தாராள மனப்பான்மையோட பயன்படுத்துறதும் அவங்க கையுலதான் இருக்கு. இந்த நூற்றாண்டுல பேச வேண்டிய மாட்டார் ஆன விடுதலை. ஸோ யாராச்சும் ஆண் விடுதலையபத்தியும் எழுதுங்கவன்..

  இந்த ஒலகத்துல ஆண்களுக்கு சுதந்திரமே இல்லைங்க. பொறந்ததில இருந்து
  சாகும் வரைக்கும் பாவம் ஆண்கள் அடிமைகளாகவே இருக்காங்க. யாராச்சும் வாங்களேன் என்கூட சேர்ந்து குரல்கொடுக்க..
  சின்னவயசுல அம்மாக்கு கடைக்கு போறதில இருந்து மரத்துல ஏறி மாங்கா பறிச்சு போடுறவரைக்கும் ஆம்புளைபுள்ளதான். ஏம்மா அக்காவ கடைக்கு போகசொல்லேன்மா எண்டா ''நீதாண்டா ஆம்புளபுள்ள இதெல்லாம் செய்யனும்ங்கிறாங்க.'' கொஞ்ச நேரம் பகலில அசந்து தூங்கிட்டா போதும் ஆச்சி வந்திடுவா '' ராசா ஆம்புலபுள்ள உப்புடி தூங்கலாமாயா.. எழும்புடா ராசா..'' எண்டு கனவுல வந்த மல்லிகா டீச்சரையும் துரத்திடுவாங்க. 

  நான் டியூசனுக்கு போறது காணாதெண்டு அக்கா போறநேரம்கூட என்னையும் பின்னாலேயே ஒரு சைக்கில்லில அனுப்பிடுவாங்க. ஏன்னா "நீதானே ஆம்புளை புள்ள பாவம் அவள் பொம்புளைபுள்ள அவள நீதான் கவனமா கூட்டிடு போய் கூட்டிடு வரணும்". ஒருநாள் அவளோட ஒருத்தன் சேட்டை விட்டுடான். அவள் விட்டாள்பாரு கன்னத்துல சும்மா விஜயசாந்திமாதிரி. அப்ப ஓடிட்டான் அந்த பயபுள்ள. அடுத்தநாள் அவனிட்ட பள்ளிகூடத்துல அடிவாங்கின கதை யாருக்கும் வெளில சொன்னா கேவலம்ங்க. இப்படி அடிக்கடி வாங்கியிருப்பன் அவனிட்ட. இருந்தாலும் மனசுல நினைச்சுகுவன் 'டேய் நான் பெரியவனா வந்து உனக்கு திருப்பி அடிக்கல என்பேரு அஸ்வின் இல்லடா' எண்டு. ஆனா ஆறுமாசம் கழிச்சு என் அக்கா எனக்கு இன்றடியூஸ் பண்ணுறாள் அவன "இவர்தாண்ட உன் அத்தான்" எண்டு.. ரொம்ப பாவங்க நான். 

  சரி எதோ இப்படியா ஓடிபோச்சு பள்ளிகூட நாட்கள். அப்புறம் நாமளும் பெரிய ஆக்கள். அந்த அண்ணா (அத்தான்) சொல்லித்தந்த வேலை எல்லாம் அப்டியே மனப்பாடம் பண்ணி செய்ய தொடங்கிட்டம். அதுல என்கிட்டயும் ஒரு கிளி மாட்டிச்சு.  சீ சீ ஒரு கிளிகிட்ட நானும் மாட்டிகிட்டேன்.  அதுக்கப்புறம் இந்த ஆம்புள கிளி ரொம்பவே கஸ்டபட்டுடுது.. போன் பில்லு கட்டி கட்டியே அப்பா காசு கரைந்சுபோச்சு. பிறந்தநாளு லவ்வர்ஸ் டே எண்டு கிப்டு வாங்கியே முப்பாட்டன் சொத்து மூனுமாசத்துல போச்சுது. லவ்வர்தானே எண்டு ரொம்ப காஸ்ட்லியா எல்லாம் கிப்டுவாங்கி கொடுக்காதீங்க. பிறகு அது உங்களுக்கே ஆப்பாயிடும். இப்டிதான் ஒருவருஷம் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் ஒன்னு போட்டன். அடுத்தவருஷம் பிறந்தநாளுக்கு நாசூக்கா சொல்லுராள் ''நீங்க போனவருசம் பர்த்டேக்கு கோல்டு ரிங்க் தந்தீங்க. இந்தவருசம் என்ன தரப்போறியலோ.. ஒரே சப்ரைசா இருக்குங்க'' எண்டாள். இதுக்குமேல நான் என்ன பண்ண முடியுங்க.. ஐயாம் ரொம்ப பாவம்க, ஏனென்டா ஐ ஆம் ஆம்புளை. 

  சரி இப்டியே போகட்டும்னுபாத்தா பத்து நிமிஷம் ஒருத்தரோட கால் பண்ணி கதைக்க முடியலைங்க. அதுக்குள்ளே கால் பண்ணிடு 'என்னங்க வெயிட்டிங்ல வருது எவகூட கதைக்றீங்க? அரைமணித்தியாலமா பாக்குறன் வெயிட்டிங்'' என்குறாள். ஆனா பத்து நிமிசத்துக்குமுதல்லதான் என்கூட கதைச்சுட்டு வைச்சிருப்பாள்.  இப்பவே கண்டிசன் வேற.. எட்டுமணிக்கு முதல்ல வீட்டுக்கு போயிடனும். பாரதி சொன்னான் என்றைக்குக்கு ஒரு பெண் நடு இரவுல சுதந்திரமா நடமாடமுடியுதோ அண்டைகுதான் பெண் விடுதலை எண்டு நான் சொல்லுறன் எண்டைக்கு ஒரு ஆம்புள பொண்டாட்டி லவ்வரு கண்டிசன் இல்லாம இரவுல நடமாடமுடியுதோ அண்டைகுதான் ஆண் விடுதலை... 

  சரி குடும்பம்தான் இப்டி போகுது விட்டுடுவம். ஆப்பீஸ் எண்டு போனா அங்கயும் மேலதிகாரி அந்த செக்கரட்டரி பொண்ணுகிட்ட அன்ப வாரி வழங்கிட்டு நம்மகிட்ட எகிறிபாயுறான். கோயிலுக்குபோனா பூசாரி பொண்ணுங்களுக்கு உள்ளங்கையுல ஒரு நுள்ளு நுள்ளிட்டு விபூதி போடுறாரு நமக்கு எட்டநிண்டு ஒரு எறி அவ்வளவுதான் கையுல விபூதி. பஸ்ல வர்றப்போ தெரிஞ்சோ தெரியாமலோ பொண்ணுங்களில முட்டுபட்டா, என்னா எபெக்டு கொடுக்குறாங்க. ஏதோ கொலை குத்தம் பண்ணினமாதிரி. அதே எபெக்ட நாம கொடுத்தா எப்பூடி ? இப்டி எவ்வலோங்க . எல்லாத்தையும் சொன்னா பைத்தியக்காரன் என்பாங்க. ஸோ இப்போதைக்கு இது போதும்.

  ரொம்ப கஸ்டபடுறம்ங்க ஆம்புளையா பொறந்து. கடவுளே அடுத்த ஜென்மத்துலையாவது ஒரு பொண்ணா பொறந்து ஆம்புளைங்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கணும்.. 


  *பதிவ காமெடி எண்டு வகைப்படுத்தியிருக்கானே எண்டுட்டு யாரும் காமடின்னு நெனச்சுடாதீங்க பாஸ். 
  *லைக் இட் எண்டு கமென்ட் பண்ணினா லவ்வர் திட்டுவா பொண்டாட்டி அடிப்பாங்குறதுக்காக கமென்ட் பண்ணாம போயிடாதீங்க.

  Post Comment

  23 comments:

  Anonymous said...

  really true.

  Vathees Varunan said...

  பலவிடயங்களை அப்படியே சொல்லியிருக்கிறீங்க பதிவு சூப்பர்...

  டக்கால்டி said...

  எனக்கு கமென்ட் போடவே பயமா இருக்கு பாஸ்.

  ஏன்னா நான் ஆம்பிளை. இதுக்கும் பிரச்சினை பண்ணிடுவாங்க.

  Ashwin-WIN said...

  @வதீஸ்-Vathees
  நன்றி பாஸ் வந்ததுக்கும்.. லவ்வருக்கு பயப்படாம துணிஞ்சு கமென்ட் பண்ணினதுக்கும்..

  Ashwin-WIN said...

  @டக்கால்டி
  //எனக்கு கமென்ட் போடவே பயமா இருக்கு பாஸ்.//
  எதுக்குபாஸ்..

  //ஏன்னா நான் ஆம்பிளை. இதுக்கும் பிரச்சினை பண்ணிடுவாங்க.//
  ஆமா ஆரு பிரச்சன பண்ணுவாங்க..

  என்.கே.அஷோக்பரன் said...

  நல்ல பதிவு. நிச்சயமாக பகிடிப் பதிவு அல்ல.... பெண்களும் யோசிக்க வேண்டும்! ;-)

  ம.தி.சுதா said...

  ஃஃஃஃ யாராச்சும் வாங்களேன் என்கூட சேர்ந்து குரல்கொடுக்க..ஃஃஃஃஃ

  நாம இருக்கோமுல்ல அப்புறம் எதுக்குடி யோசிக்கிறே..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

  நிருஜன் said...

  எங்களுக்கு தெரியும் இது உங்கட தனிப்பட்ட அனுவம் தான் எண்டு, அனா அஷ்வின், பெண் பாவம் பொல்லாதது அது சும்மா விடாது கவனம்!

  சி.பி.செந்தில்குமார் said...

  தில்லு துர..>?

  Unknown said...

  பகிர்வுக்கு நன்றி நண்பா!

  Ashwin-WIN said...

  @என்.கே.அஷோக்பரன்
  //நிச்சயமாக பகிடிப் பதிவு அல்ல.... பெண்களும் யோசிக்க வேண்டும்! //
  அப்பாடா பகிடி இல்லைன்னு ஒருத்தராச்சும் சொன்னியலே.

  Ashwin-WIN said...

  @♔ம.தி.சுதா♔
  //நாம இருக்கோமுல்ல அப்புறம் எதுக்குடி யோசிக்கிறே//
  நீ இருக்குறதே போதுமடி எனக்கு இனி நான் ஜோசிக்கல..

  Ashwin-WIN said...

  @நிருஜன்
  நன்றி நிருஜன். இது சொந்த அனுபவமில்லையா. நம்மட கூட்டு அனுபவம்.

  Ashwin-WIN said...

  @சி.பி.செந்தில்குமார்
  நன்றி சி.பி வருகைக்கு.

  Ashwin-WIN said...

  @விக்கி உலகம்
  நன்றி விக்கி உலகம்.

  நாஞ்சில் பிரதாப் said...

  :))

  வடலியூரான் said...

  ரசித்தேன் நண்பரே..ம்ம்ம் கலக்கல்.. ரசித்தேன் உங்கள் பதிவை

  Ashwin-WIN said...

  @வடலியூரான்
  நன்றி வடலியூரான்.

  Unknown said...

  என்ன பாஸ் இருந்த கடுப்பை எல்லாம் அடுப்பில கொட்டுற மாதிரி இங்க கொட்டுறீங்க போல!!
  ஆண் விடுதலைக்கு வித்திட்ட அஸ்வின் வாழ்க!!

  தர்ஷன் said...

  ஹா ஹா ஹா ஹா
  காமெடின்னு சிரிக்கவில்லை பாஸ், நானும் ஆணாய் போய்விட்ட ஒரு விரக்தி

  Ashwin-WIN said...

  @மைந்தன் சிவா
  //என்ன பாஸ் இருந்த கடுப்பை எல்லாம் அடுப்பில கொட்டுற மாதிரி இங்க கொட்டுறீங்க போல!!//
  வேறேங்கயும் கொட்டமுடியாதேல்லோ சிவா. அதான் இங்க வந்து கொட்டி தீக்குறம்.
  //ஆண் விடுதலைக்கு வித்திட்ட அஸ்வின் வாழ்க!//
  நன்றி தலைவா நன்றி. ஏன் பேரும் பாட புஸ்தகத்துல வருமெல்லா?

  Ashwin-WIN said...

  @தர்ஷன்//ஹா ஹா ஹா ஹா
  காமெடின்னு சிரிக்கவில்லை பாஸ், நானும் ஆணாய் போய்விட்ட ஒரு விரக்தி//
  அப்போ நம்ம பொழைப்பு சிரிக்குற பொழைப்பா போச்சா?

  Unknown said...

  நல்லா சொல்லுங்க பாஸ், இப்பயாச்சும் திருந்துவாங்களான்னு பார்ப்போம், அருமையா எழுதி இருக்கீங்க அஸ்வின் :-)

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

  Related Posts Plugin for WordPress, Blogger...
  x

  Get Our Latest Posts Via Email - It's Free

  Enter your email address:

  Delivered by FeedBurner