• Monday, February 28, 2011

    சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?

    மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..
    யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..




    இண்டைக்கு காலங்காத்தால (வழமையா நமக்கு நடுச்சாமம் இது) நாலுமணிக்கே அலாரம் வச்சு எழும்பி நாலுமாசமா தண்ணிகாட்டாத பாடிக்கு சுத்தி சுத்தி தண்ணி தெளிச்சு லக்ஸ்சு லைப்பாய் விம் சோப் எல்லாம் போட்டு குளிச்சு முடிச்சு , புதுசு புதுசா நோலிமிட்டுக்கும் ஹமீடியாக்கும் வச்ச உழைப்பைஎல்லாம் எடுத்து மாட்டி, அரை பாட்டில் பூச்சி மருந்து ,அதாங்க சென்ட் எண்டு இங்கிலீசுல சொல்லுவாங்களே அத அடிச்சு சும்மா கம கம எண்டு பஸ்டாண்டுக்கு ஓடிவந்து அதாலவந்த 100 பஸ்ஸ புடிச்சு அப்புறம் புறக்கோட்டைல இறங்கி அதால வந்த 187 பஸ் எடுத்து மொத்தமா 287 பஸ் புடிச்சு அறக்கபறக்க ஒம்போது மணிக்கு தொடங்குற ஆப்பீசுக்கு எட்டுமணிக்கே வந்து சேர்ந்தாச்சு.. 
    அடுத்த அஞ்சு நிமிசத்துலையே என்னோட சேர்ந்து குப்பைகொட்டுறதுக்கு மத்த மூணு கூட்டாளிங்களும் வந்துட்டாங்க. அதுல ஒரு பெண் தோழிவேறு.

    நாலுபேருமா ஆப்பீசு வாசலில நிண்ட செக்கியூரிட்டிட்ட தெரிஞ்ச சிங்களத்துல 
    சமாளிச்சு சமாளிச்சு பேசி , மனேஜர சந்திக்க வந்திருக்கிறம் எண்ட விசயத்த சொன்னோம். அவரும் எதோ சிங்கலத்துல சொல்லிட்டு ( அதுல எதோ வெயிட் பண்ணுங்க கொஞ்சம் எண்டது மட்டும் விளங்க்கிச்சு) மனேஜருக்கு போன் பண்ணி கதைச்சுட்டு உள்ள போகச்சொல்லி சிங்களத்துல சொல்லிட்டு வீரகேசரி பேப்பர் எடுத்து வாசிக்க தொடங்கிட்டுது மனுஷன்.. ஆளையாள் பாத்து நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு அவர பாக்காம உள்ள வந்துட்டம்..

    உள்ள நாலுபேருமா போய் மனேஜர சந்திக்க அவரும் எங்கள அறிமுகப்படுத்த சொல்லீட்டு எங்கள கூட்டிட்டு எச்.ஆர்.மனேஜரிட்ட (human resource manager) போய் ''இவங்கதான் நம்மட்ட புதுசா வந்திருக்கிற நாலு அப்பிரசண்டீஸ்.'' எண்டு சொல்ல ப்ரெண்ட்ஸ் பட வடிவேலுதான்யா ஞாபகத்துக்கு வந்தார்..

    பிறகு எங்க நாலுபேருக்கும் ஏசி ரூமுல ஒருமேசையும் நாலு கதிரையும் போட்டு பின்னாடி ஒரு fanவேற போட்டு உட்கார்த்தியாச்சு.. நாமளும் இப்டி உபசரிப்பா இருக்கே அடுத்தது என்ன அடுத்தது என்ன எண்டு ஆவலோட காத்திட்டு இருந்தம். எப்டியும் ஏதாச்சும் வேலை பண்ணிடனும்ங்கிற தவிப்போட நாம். இந்தா இப்ப வருவாங்க .. இந்தா வாறாங்க வாறாங்க எண்டே நாலுபேர்ர கண்ணும் வாசலை பாத்தபடிதான்.. அதுல ஒருத்தன் ''டேய் வாடா போய் என்ன செய்யுறதெண்டு கேக்கலாம்'' எண்டு நச்சரித்துக்கொண்டே இருந்தான்.. அது நல்லாருக்காதுடா எண்டு நானும் அவன சமாளிச்சு வேலைக்காக வெயிட்பன்னிடே இருந்தம்..  கொஞ்ச நேரத்துல ஒருத்தர் வந்து "Now you can have your lunch" எண்டு சொல்ல நேரத்த பாத்தா 12.30 ஆச்சு.. சரி எதோ லஞ்ச் முடிஞ்சபிறகு வேலையாக்கும் எண்ட நம்பிக்கையோட சாப்புடபோனம்.. சாப்பாடெண்டா உண்மையில நல்ல சாப்பாடுதானுங்க . விரும்பியத போட்டு சாப்புடலாம்.. எல்லாமே ப்ரீ எண்டதால சும்மா பூந்துவிளையாடிட்டம்.. அதுல அந்த பெண்தோழி 'எப்புடி இந்த கஜுவை போட்டு கடலைகறி வச்சிருப்பாங்கள்' எண்டு ஆராய்ச்சியே பண்ணிட்டாள். 

    சாப்பிட்டு முடிச்சகையோட மனேஜர போய் சந்திச்சம். 
    ''எக்கியூஸ்மீ சார்''
    ''யேஸ் , ஹாட் யுவர் லஞ்ச?''
    ''எஸ் சார்'' எண்டு நாலுபேரும் தலையாட்டினம்.
    ''ஓகே. யூ கோ அண்ட் வெயிட் தெயார்'' எண்டார்..
    நம்ம நாலுபேர் மூஞ்சியும் சுட்டுபோன பல்ப்பு மாதிரி ஆச்சுது.. பிறகென்ன செய்யேலும்.. அதே ஏசி ரூம்.. அதே பான்.. அதே மேசை .. அதே நாலு அப்பிரசண்டிகள்.. நித்திரகூட கொள்ளமுடியாது யாரும் வந்துடுவாங்க எண்டு..
    முடியல.... காலெல்லாம் கடுத்துச்சு.. கண்ணு பிதுங்கி கொண்டு வந்துச்சு.. தலை தூக்கிதூக்கி போட்டுச்சு.. கையேல்லாம் நமநம என்டுச்சு.. இதுல பாதிக்கப்பட்டு அடிவாங்கினது பக்கத்துல இருந்த என் நண்பன்தான்..
     இப்டியே கடைசியா ஆப்பீஸ் முடியும் அஞ்சுமணிவரை திண்டாட்டம்..

    அப்பப்பா என்னால முடியல சாமி..என்னவேனும்னாலும் பண்ணலாம் சும்மா மட்டும் இருக்கவே முடியாதுயா...
    கருத்து - அப்பிரசண்டிகள் எண்டா காசில்லாம வேலை பாக்குறவங்க இல்லைசார்..வேலை இல்லாம சும்மா இருக்கிறதுக்கு காசு வாங்குறவங்க.. 
    தொடரும்...

    Post Comment

    3 comments:

    நிரு said...

    முகபொத்தகத்தில விடிஞ்சா போலுதுபட்டா கடலை போடுற வெட்டி பயல்கள்!கடவுளே, இன்னும் கொஞ்ச வேலை நேரத்தை கூட்டப்பா! இவங்களால ஒரு போம்புலபில்லை கூட ஆன்லைன வர பயபிடுது!

    ம.தி.சுதா said...

    ஃஃஃஃஃஅப்பிரசண்டிகள் எண்டா காசில்லாம வேலை பாக்குறவங்க இல்லைசார்..வேலை இல்லாம சும்மா இருக்கிறதுக்கு காசு வாங்குறவங்கஃஃஃஃ

    அடடா இப்படி வேற இருக்குதோ...

    சுதர்ஷன் said...

    //கதைச்சுட்டு உள்ள போகச்சொல்லி சிங்களத்துல சொல்லிட்டு வீரகேசரி பேப்பர் எடுத்து வாசிக்க தொடங்கிட்டுது மனுஷன்//
    haha :D
    சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சும்மா இருந்து பாத்தா தான் தெரியும் .. எங்க நிறை காலமா பதிவு போடவில்லை ..இவ்வளவு நாளும் கவிதைகள் ..நிறைய நாள் கழித்து வந்தேன் ..வாழ்த்துக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள் .. :)

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner